Saturday, May 21, 2022

உழைப்பில் ஒரு அடி நகர்ந்த பொழுதில்

இந்த வாரம் உழைத்த உழைப்பினால் ஏற்பட்ட உடல் வலி இன்னும் போக மாட்டேங்குது.

இந்த வாரம் எங்க ஊர் ப்ரைமரி எலக்‌ஷன்ல வழக்கம் போல தேர்தல் பணி செய்ய ஆவலாக இருந்தேன். கடைசி நேரத்தில் தொகுதி தலைமை அதிகாரி வரமுடியாகப் போக, கடைசி நிமிடத்தில் தேர்தல் ஆணையம் என்னைக் கூப்பிட்டு முழுப்பொறுப்பு எடுத்துக்கிறயான்னு கேட்டாங்க. ஆச்சரியமாகவும் மிக நல்ல வாய்ப்பாகவும் இருந்துச்சு. ஆனால் வெளியே சொல்ல முடியாத சில சிக்கல்களினால் இந்த தடவை வேண்டாம், அடுத்த தடவை பார்க்கலாம் என்று சொல்லி விட்டேன்.

தலைமை அதிகாரி என்னை ரெகமண்ட் பண்ணியிருப்பதால் இந்த வாய்ப்பு வந்தது. நான் தவிர்த்தது ஆணையத்திற்கு மேலும் சிக்கலானது புரிந்தது. எல்லா சப்ளைஸும் நீ வாங்கி வச்சுக்க, நாங்க இன்னொருவரை ஏற்பாடு பண்றோம்ன்னாங்க. சரின்னேன். கடைசியிலே அவர்களே எல்லா ஏற்பாடும் பண்ணிவிட்டார்கள்.

செவ்வாயன்று தேர்தல், திங்களன்று மாலை சாயந்திரம் வாக்குச்சாவடியில் எல்லா ஏற்பாடும் இரண்டு மணி நேரத்தில் பண்ணனும். அன்று எனக்கு 6.30டு9.30 ஸ்பானிஷ் வகுப்பு வேற, ஊர் போயிருந்த அம்மிணி அன்று தான் இரவு 11 மணிக்குத் திரும்பி வர்றாங்க. மறுநாள் காலை 6 மணிக்குள் வாக்குச்சாவடியில் தேர்தல் பணி துவங்கனும். இரவு 7.30க்கு முடிந்தவுடன் ஒன்பது மணிக்குள் தேர்தல் சாவடியில் வேலை முடித்து அனைத்தையும் சரி பார்த்து வைக்கனும்.

அம்மிணி கிட்டே பல தடவை சொன்னேன், அந்த திங்கள் கிழமை மட்டும் திரும்பி வராதே, எனக்கு ரொம்ப சிரமம்ன்னேன், கரெக்டா அன்னிக்குத் தான் வாராக.

திங்கள் மாலை சாவடிக்குப் போனால், அந்த சர்ச்சுக்குள் எப்போதும் கொடுக்கும் ஒரு பெரிய ஹாலைக் கொடுக்காமல் இந்த தடவை அதன் பக்கத்து கட்டிடத்தில் ஒரு சின்ன ப்ரேக் ரூமைக் கொடுக்கிறார்கள்.

வந்த தேர்தல் அதிகாரிகள்(போல் வொர்க்கர்ஸ்) பெரும்பாலோர்க்கு இதான் முதல் தடவை, அவர்கள் நேராக என்னிடம் வந்து, தலைமை அதிகாரி உன்னை தொடர்பு கொள்ளச் சொன்னார்கள், என்ன பணி செய்ய வேண்டுமென்று நீ உதவுவாய் என்று சொல்கின்றனர்.

அன்னிக்கு எல்லா பொறுப்பும், தலைமை ஏற்கவில்லையென்றாலும், தலைமையாய் செயல்பட வேண்டியதாகி விட்டது. சாவடி எப்படி அமைக்கனும், அந்த குறுகிய அறையில் எது எதை எங்க வைக்கனும் என்பதிலிருந்து, ஒவ்வொரு அதிகாரிக்கும் அவர்கள் வேலையைச் சொல்லித் தருவது வரை செய்ய வேண்டியதாக இருந்தது. ஒருத்தர் அங்கயே ஒரு வாக்காளர் நடந்து வர்ற மாதிரி நடிச்சுக் காண்பிச்சு இந்த வாக்காளருக்கு எப்படி உதவுவதுன்னு கேள்வி. அங்ஙனவே அவங்களுக்கு ட்ரைனிங் கொடுத்தேன்.

எல்லாம் செட்டப் பண்ணி வச்சுட்டு டைம் பார்த்தா இரவு எட்டு மணி. ஸ்பானிஷ் கிளாஸ் எப்படியும் இரவு ஒன்பதரை வரை அட்டெண்ட் பண்ணிட வேண்டும்ன்னு ஓடி அந்த கிளாஸும் அட்டெண்ட் பண்ணினேன். கூடப்படிக்கும் அத்தனை தாத்தா பாட்டிகளும் என்னோட சிவிக் ட்டூட்டி கடமையைத் கைத்தட்டிப் பாராட்டியதில், இருந்த களைப்பு போச்சு.

கிளாஸ் முடிஞ்சு அம்மிணியைப் பிக்கப் பண்ண ஏர்போர்ட் போய் கூட்டி வந்து இரவு உறங்கும் போது ஒரு மணி. காலை நாலரைக்கு எழுந்து குளிச்சு ஐந்தரைக்கு வாக்குச் சாவடிக்கு ஓடினேன். 

போனவுடனேயே காலையில் செய்ய வேண்டிய செட்டப் செய்து முடிக்க முடிக்க சரியா ஆறரை மணிக்கு தேர்தல் ஆரம்பிக்க வாக்காளர்கள் ரெடியாக உள்ளே வர ஆரம்பித்து விட்டனர்.

நான் பணி செய்வதைப் பார்த்தே பக்கத்திலிருக்கும் அதிகாரிக்கு சொல்லிக் கொடுக்க அவர்கள் வேலையை துரிதமாக செய்ய ஆரம்பிக்க மடமடவென்று வாக்காளர்கள் ஓட்டளிக்கத் துவங்கினர். ஒவ்வொரு டேபுளிலும் ஒவ்வொரு அதிகாரிக்கும் அவர்கள் செய்ய வேண்டியதைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே என் பணியும் செய்ய முடிந்தது.

கோவிட் கால கட்டத்தில் எல்லாம் ஆன்லைன் ட்ரைனிங் ஆகிப்போனதாலும், இப்பவெல்லாம் தேர்தல் பணி செய்ய ஆட்கள் வராததாலும், கடைசி நேரத்தில் புதிதாக வரும் சிலருக்கு என்னைப் போல் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர்கள் அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது.

என்னைத் தவிர எல்லோரும் இங்கயே பிறந்து வளர்ந்தவர்கள். ஒரு அம்மிணி சொல்றாக, நான் அவ்வளவு பெரிய ஃபார்மா கம்பெனியில ப்ராஜக்ட் மேனேஜர், நான் எதுக்கு இந்த மாதிரி வேலை செய்யனும்ன்னு கேட்கிறாங்க. இது வாலிண்டியர் வேலையானாலும் நாம் செய்யும் சிவிக் ட்யூட்டியில் ஏற்றதாழ்வு பார்க்காமலிருக்க எப்படி சொல்லித் தருவது.

தேர்தலைப் பற்றி கேள்விகள்இப்போது அதிகம் எழுவதாலும் இப்போதெல்லாம் அதிக வாக்காளர்கள் தேர்தல் சாவடிக்கு வருவது அதிகமாகி விட்டது. இரு மடங்கு வேலை இப்பவெல்லாம்.

எப்படியோ! நாள் முழுதும் வெளியே போக முடியாம கொண்டு போனதை உண்டு, எல்லா வேலையும் முடித்து இரவு ஒன்பது மணிக்கு மூட்டை கட்டும் போது உடம்பில் ஒவ்வொரு பாகமும் நோக ஆரம்பிச்சுருச்சு. குனிஞ்ச முதுகை நிமுத்த சிரமப்படவேண்டியதாச்சு.

நாலு நாளாகியும் உடம்பு வலி போகலை. மற்ற அதிகாரிகளின் கடைசி நேர எதிரொலிப்புகளினால் ஏற்படும் மனக்கவலைகளும் அப்பப்ப துரத்துகிறது.

எதுவாயினும் எனக்குக் கொடுத்த பணியை தேவைக்கு மேலவே செய்த திருப்தி ஒன்னு இருக்கு.

ஒரு அடி முன் வைக்கும் போது இரண்டடி பின் வைக்க வேண்டியதும் நல்லதே!

உழைப்பில் வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Trabaja duro!

Thursday, May 19, 2022

சாத்வீகமாய் வளர்வதில்

பையன்ட்ட கேட்டேன்: என்னடா ஃபோனே வரலை, எங்கடா இருக்கேன்னு. அப்பா இங்க பெரிய fireப்பா, காலையிலிருந்து மூனு மணி நேரமா அங்க தான் வேலை செய்துட்டு இப்ப தான் ஃபயர் ஸ்டேஷன் உள்ளே வந்தேன், இன்னிக்கு க்ளினிகல் இங்கப்பா தொந்தரவு பண்ணாதேன்னான். நம்ம தொந்தரவு என்ன, அவன் குரலைக் கேட்போமான்னு ஆசையிலத் தான் ஒரு ஃபோன்.

பையன் இந்த சம்மர்ல paramedic கடைசி பாகம் பண்றான். போன செமஸ்டர் அதற்காக அவங்க அடிக்கடி fire stations க்கும் எமர்ஜென்சி ரூமுக்கும் வேலைக்கு அனுப்ப இப்ப fire certification வாங்க fire courseம் சேர்த்து ஜாயின் பண்ணியதால் இப்ப அடிக்கடி fire stationsலத் தான் வேலை. சின்ன வயசுல எப்பப் பார்த்தாலும் fire trucks வச்சு விளையாடுவான். இப்ப அங்கயே கல்லூரிப் படிப்பும் சேர்த்து.

அமெரிக்காவுல எல்லோர் வீட்டிலும் துப்பாக்கியிருக்கும். துப்பாக்கியில்லாத வீட்டை எண்ணிடலாம். அவன்ட்ட குழந்தையிலிருந்தே சொல்லிச்சொல்லி வளர்ப்பது நம்ம கையில துப்பாக்கியை தூக்கிடக்கூடாதுன்னு அவ்வளவு சொல்லுவேன். வாட்டர் கன்ஸ் வச்சு விளையாடும் போது கூட அவன்ட்ட சொல்லி வளர்த்தது துப்பாக்கி எப்போதும் இன்னொரு உயிரைப் பறிக்கத் தான், நாம செய்யக்கூடாதுடான்னே சொல்லிச் சொல்லியே வந்துருக்கேன்.

பள்ளியில் ஹைஸ்கூல் படிக்கும் போது ஸ்கூல் ஃபுட்பால் விளையாடியதால் அதற்காக அவன் உடம்பைத் தயார் பண்ணி வைத்துள்ளான். ஆஜானுபாகுவாகத்தானிருப்பான், இருக்கானிப்ப. வலிமை அதிகம்.

எப்ப என்னை லிஸ்ட் பண்ணினாலும் போகத்தான் வேண்டித் தான் வரும், போவேம்பாம்பான். எப்ப போனாலும் ஒரு உயிரைப் பாதுகாக்கிற வேலைக்கு மட்டும் போ, மாய்க்கிற வேலைக்குப் போகாதேம்பேன். இப்படியும் உழைக்க முடியும்ன்னு எப்போதும் அவனிடம் சாத்வீகத்தையும் அன்பையும் மட்டுமே சொல்லி சொல்லி வருவேன். ஸ்கூலில் வம்பு பண்ணினா யாரையும் அடிச்சுராதே, உன் வலிமையைக் காட்டினால் போதும் அமைதியாக கடந்து விடலாம்பேன்.

எப்போதும் ரொம்ப அடிக்கடி சொல்வது நம்ம கையில துப்பாக்கியைத் தூக்கிடக் கூடாதுடான்னு. அப்பா தற்காப்புக்கு வேணும்பான்னு அவன் சொன்னாலும் அமைதியாகப் போய்விடுவான்.

இதெல்லாம் சொல்லி சொல்லி நாம் மற்றவர்கள் மேலுள்ள வெறுப்புகளை அவன் மேல் கடத்தாமலிருந்ததாலும், எப்போதும் மற்ற உயிர்களை காப்பது மட்டும் பாருன்னு சொல்லி வளர்த்தது இப்ப பலன் தருது.

நான் துளி கூட எதிர்பார்க்காத வேலைகளை அவனே தேடித் தேடி எடுத்து செய்து வருகிறான். அப்பா, இன்னிக்கு இத்தனை கன் ஷாட் வூண்ட்டோட ஈஆர்க்கு இவ்வளவு பேர்ப்பா, இவர்களைப் காப்பாற்றவே நேரம் அதிகம் செலவாகுது, நீ ஃபோன் வரலைன்னு கூப்பிடாதே, இங்க தான் ஃபயர் ஸ்டேஷன்லையும் ஈஆர்லையும் ஒழுங்காத் தானிருக்கேன் பேசாம இருங்கிறான்.

முன்ன மாதிரியெல்லாம் இல்லாம இப்ப நான் கார் பார்த்து ஓட்ட ஆரம்பிச்சுட்டேன், ஓவர் ஸ்பீடில்லை, அட்டெண்ட் பண்ற கேஸ்களைப் பார்த்ததுல என் கை ஆட்டோமெடிக்கா ஒழுங்கா ஓட்டச் செய்யுதுங்கிறான்.

இந்தியாவில நான் கல்லூரியில படிக்கிற காலத்தில் இலங்கைப் பிரச்சனை. அவ்வளவு அகதிகளைப் பார்த்த நிலமை. வேலை கிடைச்சு அஸ்ஸாம் போனா தீவிரவாதம், அடிக்கடி குண்டு வெடிப்பு பார்த்தது. வேற வேலை தேடி மும்பை இறங்கிய மறு விநாடி பாப்ரி இடிப்பினால் மும்பைக் கலவரங்கள், குண்டு வெடிப்புகள். மயிரிழையில் குண்டு வெடிப்பில் தப்பினேன்.

உலகில் நடக்கும் அடக்குமுறைகளுக்கும் போர்களுக்கும் தீவிரவாதங்களுக்கும் நம்மால் தீர்வுகள் சொல்ல முடியாது. நம்மால் முடிந்தது அதை ஊதி வளர்க்க முடியாமல் எவ்வளவு தூரம் இருக்கிறோமோ அவ்வளவு நல்லது. நட்பையும் சகோதரத்துவத்தையும் சாத்வீகத்தையும் நாம் போதித்தால் தான் நம் குழந்தைகள் அவ்வழியில் செல்வார்கள்.

என் பிரார்த்தனைகளெல்லாம் என் பையன் அவன் தானாக முன் வந்து தானே தேர்ந்தெடுத்துள்ள இந்த சமுதாயப்பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்கிற ஆவல் தான்.

சாத்வீகமாய் இருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Ten paz!

பயணிகளை அறியாப் பயணமது

தகுதியானாவரை தேர்ந்தெடுக்கும் பாதையில்
   அழைப்பிதழோ தேர்தல் நடத்துனராக
போட்டியாளர்களை அறியா நடத்துனரானேன்!

வெற்றி தோல்விகளின் பாதிப்பை உணராதவன்
    வெற்றி தோல்வியை எடைபோடும் 
பொதுசனத்தின் உதவியாளனானேன்!

தேர்தல் நடத்துனர்களின் சாலையில்
  நடு குளத்தில் நின்றவர்களுக்கு நடத்துனானேன்
கரை மீண்டவர்கள் கண்ணிலோ அசதி!

எண்ணி அளித்த வாக்குகளில் எண்ணப்பட்ட கணக்கு
  நாளை எண்ணி அளித்தவன் சுமக்கும் கனவு
எதுவாயினும் இது ஜனநாயகப் பாதையின் வேர்!

பயணிகளை அறியாப் பயணமது!

Thursday, April 21, 2022

நம் பிள்ளைகள் வளர்கிறார்கள்

பையனுக்கு அவன் 10வது படிக்கும் போதலிருந்தே பைலட் ஆவனும்ன்னு ரொம்ப ஆசை. அதை அவன் 12வது படிக்கும் போது வரை கூட ரொம்ப சொல்லி சொல்லிப்பார்த்தான். முதலில் படிச்சு ஒரு டிகிரி வாங்கிக்கோ, அப்புறம் பைலட் ஆவறதைப் பார்க்கலாம்ன்னே தள்ளிப்போட்டு வந்தேன், அவன் காலேஜ் படிப்புக்கு சேர்த்த பணம் இப்படி செலவாயிட்டா என்ன பண்றதுங்கிற கவலை.

10வது படிக்கும் போது அவன் aeronautical எடுப்பான், அப்ப அவனுக்கு கூடவே பைலட் ட்ரைனிங்கு அனுப்பலாம்ன்னு இருந்தேன். ஆனால் அவன் 12வதுல அவனது வாழ்க்கைப் பயணத்தை வேற பாதையில துவங்க ஆரம்பிச்சுட்டான். பார்மசி டெக்னிஷியன், எமெர்ஜென்சி டெக்னீஷியன் சர்டிபிகேட் எல்லாம் வாங்கிட்டான். இப்ப யங்கஸ்ட் paramedic ஆகப்போறான் பதினெட்டு வயசுல. இப்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் எத்தனை பேருக்கு intubation பண்றேன் எத்தனை சிபிஆர், இன்னிக்கு இவ்வளவு பேரை ரிவைவ் பண்ணியிருக்கேன்னு அவனே பெருமையாக சொல்லும் போது, என் கடமையை நான் செய்து முடித்து விட்டதாகத் தோன்றுகிறது. இனி அவன் பார்த்துப்பான்.

அவனை பைலட் கோர்ஸ்ல சேர்க்காத போது அதை அவன் நண்பர்கள் பலபேர் கிட்ட சொல்லி குறைபட்டுக்குவான். அப்ப வீட்டுப் பக்கத்தில் குடியிருக்கிற ஒரு பெண், அவன் வயது அவன் கிளாஸ்மேட், ஒரு கர்நாடிக் கச்சேரி வளாகத்தில் என்னைப் பார்த்து சரமாரியாக கேள்வி கேட்டாள்.

உங்கப் பையனைப் பாருங்க, எவ்வளவு உயரம், அவன் கண் பார்வை 20/20, கண்ணாடியே தேவையில்லை, அவன் பைலட் ஆவறதுக்கு எல்லாம் அவனுக்கு பர்பெஃக்டாக இருக்கு. நீங்க அவன் ஆசையைக் கெடுக்கறீங்க, இப்ப என்னால் நினைச்சா கூடப் போக முடியாது, நான் ஹை பவர் சோடாபுட்டி, அவங்க என்னையெல்லாம் எடுக்க மாட்டாங்க, நீங்க இப்படி பண்றீங்களேன்னு கச்சேரியில எனக்கு செமையாக கச்சேரி பாடிட்டாள் அந்த குட்டிப்பெண்.

அப்ப மனசு சங்கடமாக இருந்துச்சு, பையன் ஆசையை நிறைவேத்தலைன்னு. அவள் சொன்னதுகப்புறம் கில்டி ஃபீலிங் ரொம்பவே ஜாஸ்தியாகவே ஆயிடுச்சு. அந்தப் பெண் வீட்டுக்கு வரும் போதெல்லாம், அது எனக்கு பாடிய கச்சேரி தான் ஞாபகத்துக்கு வரும்.

அந்தப் பெண் செமையாகப் படிக்கும். ஓடியாடி விளையாடாது, ஆனால் செம படிப்பு. அது வாங்கியிருக்கிற SAT ACT ஸ்கோரெல்லாம் பார்த்தா அவ்வளவு ஸ்வீட் ஸ்கோர். அவங்கப்பா அடிக்கடி ரொம்ப பெருமையாச் சொல்வார். நமக்கு நம்ம பையனைக் கம்பேர் பண்ணினா, இந்த ஆளு வேணும்ட்டே நம்மளை வறுக்கறாரான்னு இருக்கும்.

அந்தப் பெண் காலேஜ் அப்ளை பண்ணும் போது ஐவி லீக்ஸ் மட்டும் அப்ளை பண்ணி, லோக்கலாக மூனு பெரிய யுனிவர்சிட்டிக்கு அப்ளை பண்ணினாள். அவ்வளவு கான்ஃபிடன்ஸ் அந்த குட்டிக்கு. அதே மாதிரி அந்தப் பெண்ணுக்கு போன வருடம் கார்னல் கிடைச்சது, ஆனால் லோக்கல் யுனிவர்சிட்டியில் தனக்குப் பிடிச்ச கோர்ஸ் ஜாயின் பண்ணிட்டாள்.

போன வருடம் ஒரு நாள் நான் மாலையில் வாங்கிங் போகும் ஒரு மைல் தள்ளி நடக்கும் போது, எதிரில் வந்த அந்தப் பெண்ணோட அப்பா அம்மா வந்தப்ப அவங்க சொன்னாங்க இதை. செம கடுப்பாயிட்டேன். என்னங்க ஐவி லீக் கிடைச்சும் வேணாங்கறீங்க, இவ்வளவு முட்டாளாவா இருப்பீங்கன்னே கேட்டுவிட்டேன். அவர், அது இல்லைங்க, அவளுக்கு பிடிச்ச கோர்ஸ் கிடைக்கலை, மேலும் அவ்வளவு பணத்துக்கு எங்க போறதுன்னார். அன்னிக்கு அந்த பெண்ணு எனக்கு கச்சேரி பாடியதை நான் அவங்கப்பா அம்மாக்குப் பாடிட்டேன்.

நானெல்லாம் என் பையனுக்கு ஐவி லீக் கிடைச்சிருந்தா வீட்டை வித்து பணம் கட்டியிருப்பேன், நீங்க கிடைச்சதை வேணாங்கறீங்க, வாழ்க்கையில பணத்தை சம்பாதிச்சுடலாம், அங்கப்படிக்கிறது அவ்வளவு சுலபமில்லைங்கன்னேன். அவங்கப்பாம்மா என்னை அன்னிக்கு மனசுகுள்ள திட்டிகிட்டேப் போயிட்டாங்க.

ஒரு வருஷம் ஓடிப் போச்சு. என் பையன் ரொம்ப தூரத்துல, இந்தக் குட்டிப் பெண் லோக்கல் காலேஜ்ல செம சூப்பர் கோர்ஸ் படிக்கிறாள். ஆனால் இந்த லோக்கல் யுனிவர்சிட்டிகளும் உலகத்தரம் வாய்ந்தது, குறைவானதல்ல. அப்பப்ப என் கிட்ட வந்து என்னோட ஃபோன் சார்ஜர் வாங்கிட்டுப் போவாள். 

இன்னிக்கு காலையில வெளியூர் போயிருக்கிற அவங்கப்பா டெக்ஸ்ட் பண்றார். என் பெண்ணை மறுபடியும் அவங்க கார்னல்லேர்ந்து  கூப்பிடறாங்க, அவ கேட்ட கோர்ஸையே கொடுக்கிறாங்க, அவளோட இரண்டாவது வருட கோர்ஸ்க்கு இப்ப அவ கார்னல் போகப்போறான்னு சந்தோஷமாகச் சொல்றார். நீ போன வருஷம் எனக்கு கச்சேரி பாடியதால் நான் இதை இப்ப உனக்குச் சொல்றேன்னார்.

மனுசன், இப்ப உன் வீட்டை வித்து என் பொண்ணு காலேஜ்க்கு கட்டுவியான்னு கேட்கலை. தப்பிச்சேன். அந்தப் பெண்ணுக்கும் வாழ்த்து சொல்லச் சொன்னேன். அவ நேரா வந்து எனக்கு கச்சேரி பாடாம இருக்கனும், உன் பையனை நீ பைலட் ஆக்கலை, என்னோட படிப்புக்கு அட்வைஸான்னு தாலாட்டு பாடாம இருக்கனுமேன்னு இருக்கு.

நம் பிள்ளைகள் வளர்கிறார்கள்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Habla con valentía!

Saturday, April 2, 2022

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 3

இந்த வாரத்தோட எஸ்பானியோல் முதல் பாகம் முடிந்தது. வாரக்கடைசிக்குள்ள ஆன்லைன் டெஸ்ட் எடுத்து கம்ப்ளீட் பண்ணனும். இப்ப தான் எடுத்தேன். அந்த டெஸ்ட் எடுக்கும் போது அம்புட்டு டென்ஷன்.

டெஸ்ட்டில் கடைசியாக நம்மைப்பத்தி நமக்கு பிடித்தது பிடிக்காததைப் பத்தி ஒரு முழு பாரா வாக்கியங்களாக எழுதனும். மனசுல வந்ததை எழுதித் தள்ளிட்டேன்.

எட்டு வாரம் முன்ன இந்த கோர்ஸ் சேர்ந்தப்ப இந்த மொழியோட ஏ பி சி டி கூடத் தெரியாது. இப்ப அந்தக் கேள்வித்தாளில் முழுவதும் எஸ்பானியோலில் எழுதியிருப்பதைப் படித்து புரிந்து கொண்டு பதில் கூட எழுத முடிகிறது. எல்லா நம்பர்களையும் அந்த மொழியிலேயே எழுதவும் முடிகிறது.

கடைசி டெஸ்ட்டில் வாங்கியுள்ள மார்க் தெரிய ஒரு வாரத்திற்கு மேலாகும். சின்ன வயசுலேர்ந்து இன்று வரை எனக்கு ஒரு எழுதி வைக்காத விதி இருக்கிறது. எந்த ஒரு தேர்விலும் அந்த ஒரு குறிப்பிட்ட எண்ணை என்னால் தாண்ட முடியாது. எவ்வளவு படித்து முயற்சித்தும் முடிந்ததில்லை. போன டெஸ்ட்டிலும் நான் எடுத்த ஸ்கோர் அந்த இலக்கிற்கு ஒரு மார்க் குறைவாக.

இப்போது எழுதிய டெஸ்ட்டில் அதைக் கடக்க வாய்ப்பிருக்கு. ஆனால் விதி வழியில் தான். மூன்று நாட்களாக அதிக சிரமம் எடுத்துப் படித்தேன். அம்மிணி என்ன இதுக்கு இப்படி படிக்கிறன்னாப்புல. கல்லூரி நண்பன் அம்மிணி கிட்ட தெலுகுல வத்தி வச்சுபுட்டான், ஏதோ இஸ்பானிய சீக்காவைப் புடிச்சுட்டானா பாருங்கன்னுட்டான் பாவி. கிளாஸ்ல எல்லோரும் ஏறக்குறைய ஒரே வயது, கொஞ்சம் முன்ன பின்ன, பாதி பேர் பாட்டிகள் வேற. 

எனிவே, எஸ்பானியோல் இரண்டாம் பாகத்திற்கும் தயாராகி கோர்ஸில் சேர்ந்தாச்சு இனி. இவ்வளவு குறைவான கட்டணத்தில் நான்கு மாத கல்லூரி வகுப்பு கிடைப்பது அரிது.

கற்பதைத் தொடர்வோம்.
வாழ்வினிது
ओलै सिरिय ।
!Habla español!

Friday, March 25, 2022

ஏஸ்பானியோல் கற்பதைத் தொடர்வதில்

இப்ப தான் கல்லூரி வகுப்பில் சேர்ந்த மாதிரி இருக்குஆனால் அதற்குள் அடுத்த வாரத்தோடு எஸ்பானியோல்கோர்ஸ் 1 முடியுதுஇந்த எட்டு வாரத்தில் நிறையவே கிரகிக்க முடிஞ்சாலும்உழைப்பு அதிகமாகத்தேவைப்படுதுகற்பதை மதிப்பெண்ணாக மாற்ற நிறைய நேரம் செலவாகுதுஇனி இம்மொழியை எவ்வாறுகற்கமுடியுமென்று தெரிந்து விட்டது.


வாரத்திற்கு ஒரு கிளாஸ் தான்மாலை 6.30யிலிருந்து இரவு ஒன்பதரை வரைகாலை ஏழிலிருந்து மாலை ஆறுவரை அலுவலக வேலையைப் பார்த்துவிட்டுஇந்த வகுப்பிற்கு அன்று வந்து உட்காரும் போதுநாள் நேரம்அதிகமானாலும் ஒரு புது உத்வேகத்துடன் வகுப்பில் உட்கார்ந்து கவனிப்பது மட்டுமல்லஒவ்வொருஆக்டிவிட்டியிலும் முழுமையாக ஈடுபட்டு பங்கெடுக்க வேண்டியுள்ளது.


பிறகு வகுப்பில் கொடுக்கும் வோம்வொர்க் செய்ய குறைந்தது ஆறேழு மணி நேரம் படிக்க வேண்டியுள்ளதுநன்கு படித்த பிறகே வோம்வொர்க் செய்ய முடிகிறது. 90 சதவீத கிளாஸ் attendance மற்றும் 90 சதவீதம்வோம் வோர்க் மற்றும் எல்லா quiz, test எடுத்து தவறாமல் செய்தால் தான் பாஸாக முடியும்.


இதனால் வீட்டு வேலை தோட்ட வேலை மற்றும் இயல்பாய்ச் செய்ய வேண்டிய வேலைகள் தடைபடுதுகடுமையான விமர்சனங்கள் வீட்டிற்கு வருபவர்களிடமிருந்தும் வருகிறதுநேரம் போதவில்லை.


டைம் மேனேஜ்மண்ட் பற்றி முறையாக படித்தும் உள்ளேன்அதையொட்டியே பின்பற்றினாலும் செய்யவேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறதுவாழ்க்கை அடி வாங்குது.


இருப்பினும் புதிதாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் வயதானாலும் மறுபடியும் கல்லூரியில் சேர்ந்துபடிப்பதெல்லாம் ஒரு உற்சாகத்தைக் கொடுக்கிறது.


எஸ்பானியோல் கற்றுக்கொள்ள இன்னொரு மொழியின் இலக்கணமும் நன்கு தெரிந்திருக்க வேண்டியுள்ளதுஆதலால் ஆங்கில மொழி கிராமர்/இலக்கணம் தெரியனும்தெரியலைன்னா இரண்டையும் சேர்த்துகற்றுக்கொள்ளக் கூடிய நல்லதொரு வாய்ப்பு.


இந்த கோர்ஸ் அடுத்த வாரத்தோடு முடிவடைவதால்வகுப்பில் பலர் இதைத் தொடர விரும்புகின்றனர்பெரும்பாலும் பலர் என் வயதை ஒட்டியவர்கள்வெகு சிலரே 30-40  வயதிற்குட்பட்டவர்கள்இப்ப தான்ஸ்பெயினிலிருந்து வந்துள்ள இந்த கல்லூரிப் பேராசிரியையிடமே அடுத்த கோர்ஸும் கன்டினியூ பண்ணவிரும்புகின்றனர்அவர் எஸ்போனியோல் கோர்ஸ் 3 எடுப்பதை அறிந்த மக்கள் எஸ்பானியோல் 2 எடுக்காமல்சிலர் 3ல் சேரமற்ற சிலர் கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு இவரையே எஸ்பானியோல் 2 எடுக்கச்சொல்ல முடியுமான்னு கேட்கநிர்வாகம் இவரை வைத்து இப்ப இரண்டாவது கோர்ஸை முழுவதும்ஆன்லைனில் தொடங்கியுள்ளனர்அடுத்த நான்கு மாதத்திற்கு இந்த கோர்ஸ்இன்னொரு இஸ்பானியோல்2வது கோர்ஸிற்கு வாரம் இரண்டு முறை கல்லூரி வளாகம் செல்லனும்இது ஆன்லைன்வகுப்பில் நானும் ஒருவாலிபரும் மட்டுமே ஆண்கள்முதல் இரண்டு வகுப்பிற்கு வந்த இன்னொரு ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞர்நடுவிலேயே நின்று விட்டார்.


இருக்கிற சிரமங்களைப் பார்த்து கொஞ்சம் ப்ரேக் எடுத்து வருகிற fall செமஸ்டரில் எஸ்பானியோல் 2 எடுக்கலாமா என்றிருந்தேன்மேலும் இது நாலு மாசக் கோர்ஸ் கடுமையாக உழைக்கனும்நடுவில் சமுதாயகம்யூனிட்டி வாலண்டியரிங் ஒன்று வர உள்ளதுஅதற்காக ஒரு நாள் கல்லூரிக்கு மட்டம் அடிக்கனும்.


ஆனால் இவ்வளவு குறைந்த கட்டணத்தில் கல்லூரி வகுப்பில் சேர்ந்து படிக்கிற வாய்ப்பு கிடைப்பது அரிதுஇழக்கவும் மனதில்லைவேலைகளும் அதிகமிருக்குமற்ற வேலைகள் பின் தங்குகிறதுஅலுவலகமும் மிகமுக்கியமானது.


ஏற்பதாஇழப்பதா என்று காயின் டாஸ் பண்ணிப் பார்ப்பதாய் இருக்கும் இந்நிலையில்


வாழ்வினிது

ओलै सिरिय 

¡Lanzamiento de monedas!

Monday, March 21, 2022

ஒரே நாட்டினரன்றோ!


எனது தினசரி மாலைநேர இரண்டரை மணி நேர வாக்கிங் போகிறப்பவழியில் ஒரு உள்ளூர்க்காரர் தன்னுடையநாயைக் கூட்டி வருவார்சந்தித்த முதல் தடவை தான் என் பெயரைக் கேட்டார்என் தொழில் மற்றும் இங்குவசிப்பதையெல்லாம் எங்களது முதல் சந்திப்பிலேயே நன்கு விசாரித்து விட்டார்அதிலிருந்து இன்று வரை என்பெயரை மறக்கவில்லைஇரண்டாவது தடவை கூட என் பெயரைக் கேட்டதில்லைஅவ்வளவு ஞாபகம்.


நடுவில் சில நாட்கள் வாக்கிங் போகாமல் பிறகு தொடர்ந்த போது அதையும் விசாரித்தார்எப்போதும் ஓரிருநிமிடம் நின்று பேசிவிட்டுப் போவார்முன்பு இரண்டு நாய்களுடன் வருவார்இப்போது ஒன்று தான்நோயின்கொடுமையில் ஒரு நாய் தவிக்க அதைக் கொண்டு போய் hospicesக்கு விட்டுவிட்டார்இது அவரே சொன்னது.


எப்போதும் அவர் அவரது இந்தியக்கிளையுடன் பணியாற்றுவது பற்றி பெருமையாகச் சொல்வார்இப்போதுதான் அவுட்சோர்ஸிங் யூனிட்ஸோடு பழகுவதால் அதைப்பற்றி பெருமையாகச் சொல்வார்இன்று அவரே ஐந்துநிமிடத்திற்கு மேல் நின்று பேசிவிட்டுப் போனார்.


உன் பெயரை கடைசி பெயராகக் கொண்ட ஒருவரோடு போன வாரம் உரையாடினேன் என்றார்நான் என் பெயர்தென்னகத்தில் (தமிழகம்ன்னு சொல்லலைபரவலான பெயர் என்றேன்


அவர் மேலும்தான் பணி செய்யும் அலுவலகம் மூலமாக உலகம் முழுவதும் 75 இஞ்சினியர்களைப் பணியில்அமர்த்துவதாகச் சொன்னார்இப்போது தென்னமெரிக்காவில் அந்த ஊர் இஞ்சினியரையே நியமித்து விட்டேன்புதிதாக வேற இடத்தில் தேட வேண்டிய அவசியமில்லை என்று சந்தோஷமாகச் சொன்னார்.


சரிஇதை வச்சு நம்ம உறவினருக்கு வேலை கேப்போமான்னு நினைச்சேன்அதுக்குள்ள பெரிய குண்டைத்தூக்கிப்போட்டார்.


அங்க இந்தியாவில் வடஇந்திய ஆள் இந்த தென் இந்தியனை எடுக்காதேங்கறான்இந்த தென்னிந்தியன் அந்தவடக்கு ஆளை நம்பாதேஅவன் லாஸ்ட்நேம் பாருநம்பத்தகுந்ததல்லைஅவன் பேச்சைக்கேட்காதேங்கிறான்.


இவங்க எப்படி வேலை செய்யறாங்கன்னு எங்களுக்குத் தெரியும்அவங்களுக்கு ஒருத்தரொத்தரோடவேலைத்திறமை பற்றி தெரியாதுஆனால் வேறவற்றை தேவையில்லாமல் காரணம் காட்டுகிறார்கள்ஒருவடக்கு ஆளே இன்னொரு வடக்கு ஆளின் லாஸ்ட்நேம் வச்சு வேறு விதமாகப் பேசறாங்கஎப்படி வேலைசெய்கிறார்கள்ன்னு தெரியாமதிறமைக்கு மதிப்பில்லாமப் பேசறாங்கங்கிறார்.


நான் ஏதோ உளறஅவர்நானும் நீயும் ஒன்னா இருந்தாக் கூட அரசாங்கங்கள் விடாது போலிருக்கேன்னுசொல்லிட்டுக் கிளம்பிட்டார்.


இனி சந்திக்கும் போது எப்படி பேசுவாரோத் தெரியலைநடைபயணங்கள் தொடரும்சந்திப்பும் தொடரும்.


கசப்பான அநுபவங்களைக் கேட்பதிலும் அதை அசை போடுவதிலும் 

வாழ்வினிது.

ओलै सिरिय 

¡Piensa como un nacional!