இந்த வாரத்தோட எஸ்பானியோல் முதல் பாகம் முடிந்தது. வாரக்கடைசிக்குள்ள ஆன்லைன் டெஸ்ட் எடுத்து கம்ப்ளீட் பண்ணனும். இப்ப தான் எடுத்தேன். அந்த டெஸ்ட் எடுக்கும் போது அம்புட்டு டென்ஷன்.
டெஸ்ட்டில் கடைசியாக நம்மைப்பத்தி நமக்கு பிடித்தது பிடிக்காததைப் பத்தி ஒரு முழு பாரா வாக்கியங்களாக எழுதனும். மனசுல வந்ததை எழுதித் தள்ளிட்டேன்.
எட்டு வாரம் முன்ன இந்த கோர்ஸ் சேர்ந்தப்ப இந்த மொழியோட ஏ பி சி டி கூடத் தெரியாது. இப்ப அந்தக் கேள்வித்தாளில் முழுவதும் எஸ்பானியோலில் எழுதியிருப்பதைப் படித்து புரிந்து கொண்டு பதில் கூட எழுத முடிகிறது. எல்லா நம்பர்களையும் அந்த மொழியிலேயே எழுதவும் முடிகிறது.
கடைசி டெஸ்ட்டில் வாங்கியுள்ள மார்க் தெரிய ஒரு வாரத்திற்கு மேலாகும். சின்ன வயசுலேர்ந்து இன்று வரை எனக்கு ஒரு எழுதி வைக்காத விதி இருக்கிறது. எந்த ஒரு தேர்விலும் அந்த ஒரு குறிப்பிட்ட எண்ணை என்னால் தாண்ட முடியாது. எவ்வளவு படித்து முயற்சித்தும் முடிந்ததில்லை. போன டெஸ்ட்டிலும் நான் எடுத்த ஸ்கோர் அந்த இலக்கிற்கு ஒரு மார்க் குறைவாக.
இப்போது எழுதிய டெஸ்ட்டில் அதைக் கடக்க வாய்ப்பிருக்கு. ஆனால் விதி வழியில் தான். மூன்று நாட்களாக அதிக சிரமம் எடுத்துப் படித்தேன். அம்மிணி என்ன இதுக்கு இப்படி படிக்கிறன்னாப்புல. கல்லூரி நண்பன் அம்மிணி கிட்ட தெலுகுல வத்தி வச்சுபுட்டான், ஏதோ இஸ்பானிய சீக்காவைப் புடிச்சுட்டானா பாருங்கன்னுட்டான் பாவி. கிளாஸ்ல எல்லோரும் ஏறக்குறைய ஒரே வயது, கொஞ்சம் முன்ன பின்ன, பாதி பேர் பாட்டிகள் வேற.
எனிவே, எஸ்பானியோல் இரண்டாம் பாகத்திற்கும் தயாராகி கோர்ஸில் சேர்ந்தாச்சு இனி. இவ்வளவு குறைவான கட்டணத்தில் நான்கு மாத கல்லூரி வகுப்பு கிடைப்பது அரிது.
கற்பதைத் தொடர்வோம்.
வாழ்வினிது
ओलै सिरिय ।
!Habla español!
No comments:
Post a Comment