Saturday, July 8, 2023

சுக துக்கே சமே க்ருத்வா

யாருடைய நல்வாழ்விற்காக நாம் இங்கு போரிட வந்தோமோ, அவர்கள் தன் உயிரையே கொடுக்க இங்கு வந்துள்ளார்கள்!

இந்த போர் யார்க்கு இனி!

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம்!
கொல்லப்படினோ வானுலகு எய்துவாய்!
வென்றால் பூமியாள்வாய்!
துணிந்து எழுந்து நில்!

இப்படி ஒரு சூழ்நிலை நமக்கு வந்தா என்ன செய்ய!

கதி கலங்குது!

சுக துக்கே சமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ!

இன்ப துன்பம் இழப்பு பேறு வெற்றி தோல்வி அனைத்தும் சமமே!

பழகியதால்
வாழ்வினிது
ओलै सिरिय ।
!La vida no es fácil para nadie!
ஜூன் 5 2023

தலைமையிடம் கேள்வி கேட்காதே

தலைமைப் பதவியில இருக்கிறவங்க கிட்ட நாம அவங்களை சேலஞ்ச் பண்ற மாதிரி ஏதோ ஒரு கேள்வி கேட்டுபுட்டோம்ன்னு வச்சுக்குங்க அம்புட்டு தான். ஒவ்வொரு சந்தர்ப்பம் வரும் போதும் நம்மளைப் பழி வாங்க தயங்கமாட்டாங்க! தங்களோட பவரை அங்க காண்பிப்பதாக காட்டிக்குவாங்க!

இது குறிப்பாக நம் மக்களிடம் அதிகம் பார்க்கலாம். சாதாரண ஒரு கமிட்டியில இருக்கிறவங்க கூட நேரம் பார்த்து தாக்குவதைப் பார்க்கிறேன்.

இத்தனைக்கும் இவர்களெல்லாம் 20 வருடமாகத் தெரிந்தவர்கள், நண்பர்கள், பரஸ்பர உதவி செய்து கொள்பவர்கள். இருப்பினும் பதவின்னு வரும் போது, கேள்விகளை சில சமயம் ஏன் கேட்கிறோம்ன்னு ஆயிரும்!

என்ன அடி பலமான்னு கேட்கலாம்!

பழகிடுச்சு இப்ப!

சமீபத்தில் ஒரு இடத்தில் அம்மிணி முன் கூட்டியே அரங்கில் போய் உட்கார்ந்த போது ஏற்கனவே உள்ளே இருபது பேர் இருந்தனர். அம்மிணிக்கு  காலில் பிரச்சனை, ஆதலால் நிற்க முடியாமல் உள்ளே போனாங்க! வேலைக்காவல. எல்லோரையும் வெளியே அனுப்பிட்டாங்க!  கூப்பிடும் போது உள்ளே வா! அனுப்பியது ரொம்பத் தெரிஞ்சவங்க!

இதற்கு முன் ஒரு ப்ரோக்ராம் ஒன்றில் உள்ளூர் பெரிய மனிதர் ஒருவர் போர்ட் மெம்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டார், அவ்வளவு தான். அதை புறக்கணிக்கிற நிலமை தான்!

போனோமா கேட்டோமா அங்ஙன கலந்துகிட்டோமா அவ்வளவு தான், பேசாம வந்துரனும்!

கேள்வி மட்டும் கேட்டுரக் கூடாது!

உனக்கெல்லாம் எதுக்குயா இந்த ஓட்ட வாய்ன்னு கேப்பீங்க! அது நம்ம வாய்க்குத் தெரிய மாட்டேங்குதே!

அமைதியாய் இருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La democracia está en papel!
ஜூன் 5 2023

கிராம வாழ்க்கையை இழந்த பொழுதில்

எனது சித்தப்பா என் மேல் அதிகம் பாசம் காட்டியவர். சின்ன வயதில் எனக்கு ஜுரம்
 மற்றும் எந்த வியாதி வந்தாலும் வந்து பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதல் சொல்வார். தடவிக் கொடுப்பார். கால் பிடித்து விடுவார்.

தனது அறுபது வயதிலேயே மறைந்து விட்டார். அப்பாவை விட நான்கைந்து வயது இளையவர். அப்பாவின் கடைசிக் காலம் 86 வயது, அப்போது கூட சித்தி, சித்தப்பா இப்படி சீக்கிரமே போயிட்டாரேன்னு வருத்தமாகச் சொன்னாங்க!

சித்தப்பா தனது மறைவுக்கு ஆறு மாதம் முன் அவரது வீட்டு முற்றத்தில் என்னிடம் சொன்னது இவை. அவர் அப்பாவை பாப்பான்னு தான் கூப்பிடுவார்.

‘பாப்பா ஊரை விட்டு யாருக்கும் சொல்லாம வந்தப்ப எனக்கு பத்து வயசு. விவரம் தெரியலை. அவ்வளவு நிலம் தோப்பு பரிசல் எல்லாம் போய், கடைசியாக இருந்த அந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை மட்டும் அவன் கையெழுத்து போடாம ஓடி வந்துருந்தான்னா, இன்று நம்மோட நிலமையே வேற மாதிரி இருந்துருக்கும். நாங்க நிறைய வளத்தோட பிறந்தோம், ஆனால் எங்க யாருக்கும் அநுபவிக்க கொடுத்து வைக்கலை.  கொஞ்சம் தெரிஞ்சுருந்தா கூட கையெழுத்து போடாதேன்னு சொல்லியிருப்பேன். அந்த ஒன்னரை ஏக்கர் போதும். நம்ம நிலமையே வேற மாதிரி இருந்திருக்கும். இப்படி கஷ்டப்பட வேணாம். எதுவுமே பேசாம கையெழுத்து போட்டு விட்டு யார்ட்டையும் சொல்லாமப்போயிட்டான்’ன்னார்.

சித்தப்பா சிறந்த டெக்னீசியன். ஃபோட்டோகிராஃபர், Fitter, electrician மற்றும் plumbing எல்லாம் சர்வசாதாரணமாக செய்வார். சித்திக்கு உதவ அவங்க ஆபீஸ் வேலையை வீட்டில் டைப் அடித்துக் கொடுத்து உதவுவார். தாத்தா இறந்தவுடன் பாட்டி, சித்தப்பா மற்றும் அத்தைகளை அப்பாதன்னோடு கூட்டி வைத்துக் கொண்டார்.

சித்தப்பாக்கு தன்னோட நிலபுலன்களை அநுபவிக்க முடியலைன்னு வருத்தம். நாங்கெல்லாம் ஊருக்கு குலதெய்வம் கோவிலுக்கும் மலையாள கருப்பண்ணசாமிக்கும் கும்பிடப் போகும் போது அந்த கடைசி ஒன்னரை ஏக்கர் விவசாய நிலத்தைக் காண்பிப்பார்.

அப்பா ஒன்னுமே அதைப் பற்றி பேசமாட்டார். அவருக்கு எவரையும் குறை சொல்வது பிடிக்காது. அந்த நிலத்தை தாண்டும் போது தலை குனிஞ்சுருவார். மலையாளக்கருப்பண்ண சாமியைப் பார்க்கும் போது தான் முகம் ஒளிரும்!

அத்தைகள் இவர்கள் இருவரையும் விட இளையவர்கள். முந்தா நாள் அத்தை பேசும் போது கூட தன்னோட கிராம வாழ்க்கையும், அந்த இளம் வயதில் அவங்க பட்ட கஷ்டங்களையும் நினைவு கூர்ந்தாங்க.

கடைசியாக இருந்தது தாத்தா வீடு மட்டுமே! வீட்டு பின்னாடி 10-15 தென்னை மரம் வரிசையாக. நாங்க பத்தாவது படிக்கும் போது அத்தை கேட்டாங்கன்னு தன் பேர்ல இருந்த அந்த வீட்டை அப்பா அத்தைக்கு எழுதிக் கொடுத்து விட்டார். அம்மா சித்தப்பாக்கெல்லாம் ரொம்ப வருத்தம். வெளிப்படையாகவே அப்பாவைச் சொன்னார்கள். 

நமக்கு இருக்கிற அந்த உரிமை அந்த வீட்டில் அவளுக்கும் உண்டுன்னு கூலாக சொல்லிட்டார்!

சித்தப்பா மற்றும அத்தைகளுக்கு எங்கப்பா அம்மா மீது அளவு கடந்த மரியாதை. அவங்க தான் தன்னை வளர்த்து கல்யாணம் பண்ணி வைத்ததால்!  அப்பா எது சொன்னாலும் கடைசி வரை மீற மாட்டாங்க. பிடிக்கலைன்னா ‘என்ன பாப்பா இது’ன்னு ஒரு சிணுங்கல், மற்றபடி அம்மாவோட பேசி குறைபட்டுப்பதோடு சரி.

அத்தை அந்த வீட்டில் ஓரிரு வருடங்கள் இருந்தார். அவரது குடும்பச்சுமை, பசங்க படிக்கனும், அந்த வீட்டை விற்று விட்டார்!

முந்தா நாள் அத்தை பேசும் போது ரொம்ப பாசத்தோடப் பேசினாங்க! உங்கிட்ட சொல்லனும்டா! அந்த வீட்டை வித்து தப்பு பண்ணிட்டேனாடா, நாம வச்சுருந்திருக்கலாம்ன்னாங்க! மெயின்டைண் பண்ண முடியல, பணத்தேவை வச்சுக்க முடியலடான்னாங்க! அம்மனை நேரில் பார்க்கனும். நான் பிறந்த இடம்டான்னாங்க. 

வாசத்திண்ணையில நானும்(அத்தை) இன்னொரு அத்தையும் அம்மாவை (என் பாட்டி) கட்டிகிட்டு பயத்துல படுப்போம். உன்கிட்ட சொல்லனும் போல இருக்குடான்னாங்க! ஊர்ல கிராமத்துல சின்ன வயசுல எனக்கு நிறைய கஷ்டம்டா, உன் அப்பாவோட வந்த பிறகு தான் நல்ல வாழ்க்கை அமைஞ்சது. இந்த வாழ்க்கை கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும்டான்னாங்க!

எந்த குறையுமில்லை அத்தை, நீங்க செய்தது எல்லாம் சரி தான். விடுங்க! இப்ப அங்க போய் யார் இருக்கப் போறோம். ஊர் இருக்கு கிராமம் இருக்கு நம்ம குலதெய்வம் இருக்கு. ஒருத்தர் ஒருத்தர் விட்டு விட்டு குலதெய்வத்தை போய்ப் பார்க்கிறோம், இப்ப தான் நாலு மாசம் முன்ன என் மனைவி போய் வந்தாள். இப்ப அம்மன் நமக்கு தானாகவே தரிசனம் கொடுக்குது. நிறைவாக இருப்போம்ன்னேன்!

சித்தப்பாவின் வார்த்தைகள் மனதில் ஒலித்தாலும், இப்போது அனைவரும் நிம்மதியாக வளமாக இருக்கும் தருணத்தில் வெறும் நினைவுகளோடு வாழ்வதில்

வாழ்வினிது
ओलै सिरिय ।
ओलै उवाच । ¡Cualquier cosa que perdemos es irrelevante ahora! ¡El amor es suficiente!
ஜூன் 4 2023

சுரப்பு விடுதல் 2023

சுரப்பு விடுதல்

இது பெரிய பண்ணை காரர்கள் செய்யும் சிறப்பு பிரார்த்தனை அபிஷேகம்.

நமது ஊர் தேனம்மன் கோவிலில் செய்வார்கள்.
பெரிய பண்ணை வகையறாவில் உபநயனம், உத்வாகம், சீமந்தம் போன்ற சுப காரியங்கள் நடக்கும் போது செய்வார்கள்.

பெரிய பண்ணை (வாதுல கோத்ரம்) அண்ணாச்சி வகையறா (ராதீத்ர கோத்ரம்) சேர்ந்து செய்ய வேண்டும்.
1 மஹன்யாசம்
2 அபிஷேகம் சிவன் & தேனம்மன்.
3 அலங்காரம் to சிவன் & அம்பாள்.

பிறகு in the count of 7 
7 கலம் or 7 மரக்கால் or 7 படி or 7 கிலோ என்ற அளவில் அரிசி பருப்பு ஆகியவை சேர்த்து வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் செய்து
அம்பாள் சன்னதியில் 2 முடைந்த தெண்ணங்கீற்று போட்டு தீர்த்தம் சேர்த்து சுத்தம் செய்து பின் சுவாமியின் வஸ்த்ரம் வேஷ்டி & புடவை விரித்து அதன் மேல் புதிய காடா துணி போட்டு அதன் மேல் பெரிய நுணி இலை பரப்பி அதன் மேல் வலது புறம் வெண்பொங்கல் பரப்பி இடது புறம் சர்க்கரை பொங்கல் பரப்ப வேண்டும்.

இவை அனைத்தும் அம்பாள் சன்னதி உள் அமைந்து உள்ள சிறிய நந்தியை தாண்டி நான்கு தூண்கள் இடையில் arrange பண்ண வேண்டும்.
சுவாமியின் தலை மாட்டில் 2 பெரிய நெய் தீபம் வைக்க வேண்டும். வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் இரண்டும் சிறிய பிள்ளையார் போன்று வடிவு அமைக்க வேண்டும்.

வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் இரண்டையும் அர்த்த நாரீஸ்வரர் ஆக பாவிக்க வேண்டும்.

நிறைய நெய் ஊற்றி சமன் செய்து தலை portion,heart portion , கால் portion ஆகிய இடங்களில் சிறிய குழி போல் செய்து நிரம்ப நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். சுற்றி இளநீர் வெற்றிலை பாக்கு, உடைத்த தேங்காய் மூடி ஆகியவற்றை arrange பண்ண வேண்டும்.
சுற்றி 7 அடி மாலை போட வேண்டும்.
மேலே பூ க்கூடாரம் போட வேண்டும்.
பத்தி சாம்பிராணி போட்டு நல்ல வாசம் வர வைக்க வேண்டும்.

இந்த arrangements முடிந்த பிறகு தத்தம் செய்து அண்ணாச்சி வகையறாவில் சீனியர் personukku கொடுத்து விட்டு சுப காரியங்கள் பூர்த்தி சங்கல்பம். பிறகு லலிதா சஹஸ்ர நாமாவளி அர்ச்சனை, தீப ஆராதனை பிரசாத விநியோகம்.

இலையில் விளக்கு ஏற்றி வைதுள்ளதை 3 portion பண்ண வேண்டும்.
1 தலை முதல் shoulder வரை ( பெரிய பண்ணைக்கு)
2 shoulder முதல் வயிறு வரை(அண்ணாச்சி கும்பலுக்கு)
3 வயிறு முதல் கால் வரை(கோவில் சிப்பந்திகள்)

Portion 1 பெரிய பண்ணை காரர்கள் வாத்யத்துடன் கோவிலை பிரதக்ஷ்ணம் வந்து ஆத்துக்கு சென்று ஹாரதி எடுத்து வைக்க வேண்டும். பிறகு அதை விநியோகம் செய்ய வேண்டும்.

Portion 2 அண்ணாச்சி வகையறா ஆத்துக்கு சென்று ஹார்தி எடுத்து அண்ணாச்சி sidekku விநியோகம்.
பெரிய பண்ணை ஆத்துக்கு சென்று தேனம்மன் பொண்டுகள் பண்ணி அனைவருக்கும் அந்த பொண்டுகள் சாப்பாடு விருந்து.

இத்துடன் சுரப்பு function பூர்த்தி.

இதை எழுதியவர் எனது தூரத்து உறவினர்!

பகிர்வதில் வாழ்வினிது 

பி்கு: 
1. இடக்கு/எடக்கு மடக்காக கேள்விகளைத் தவிர்க்க வேண்டுகிறேன். 
2. இதிலுள்ள சில வார்த்தைகள் அந்த சமூகம் மட்டுமே உபயோகிப்பவை. மேற்கொண்டு கேள்விகளை விமர்சனங்களைத் தவிர்க்கவும்.
3. நாங்க பெரிய பண்ணை சின்ன பண்ணையும் அல்ல. சில ஏக்கர் நிலங்கள் மட்டுமே. எல்லாம் அப்பாவின் இளம்பருவம் 14 வயதிலே இழந்து, ஒரு ப்யூனாகவே வாழ்க்கை துவங்கி பார்ட்டைம் செய்து எங்களை இந்த நிலைக்குத் தள்ள உழைத்தவர்.

ओलै सिरिय ।
ओलै उवाच । ¡Algo para compartir, pero no para discutir!
ஜூன் 4 2023

ஒரு நாள் பொழுதில்

இன்று நானும் அம்மிணியும் ஒரு வீணைக்கச்சேரிக்குப் போனோம். 

மைசூர் பாணியை உருவாக்கிய மைசூர் துரைசாமி ஐயங்காரின் வாரிசு வித்வான் பாலகிருஷ்ணன் அவர்களின் வீணைக் கச்சேரி! ஒரு பரமசாது சாத்வீக மனிதரின் சாத்வீக இசை, மனதோடு ஒட்டிக்கொள்ளும் மைசூர் பாணியில். 

கையில் எந்த க்ளிப்பும் இன்றி கை விரல் நுனி மற்றும் நகத்தாலேயே இரண்டு மணி நேரம் வாசிக்கும் இந்த திறமையை நேரில் காண்பது மிகவும் வியப்புக்குரியது. நிறைவான தினம்.

காலையில்

கடந்த சில நாட்களாக அம்மிணியும் என்னோடு வாக்கிங் கிளம்பிடறாங்க! அவங்க ஒரு மைல் நடப்பாங்க, பின்னர் நான் மேலும் தொடர்ந்து எனது இரண்டரை மைல் நடை. இன்று காலையிலேயே கிளம்பிட்டோம். 

சூரியனின் இளஞ்சூட்டில் ரோட்டோரம் நடைபாதையில் சுற்றிலும் பசுமையான சூழலில் மிதம் குளிருடன் வீசும் அந்த இயற்கைக்காற்றை ஸ்வாசிப்பது மிக அலாதி!

வீட்டின் பின்புறம் நிறைய மரங்கள். அந்த மரங்களின் பின் பகுதியில் நிறைய வீடுகள். சமீபத்தில் அவர்கள் அந்த ஏரியாவை க்ளீன் பண்ணுவதால், இத்தனை வருடங்களாக அங்கிருந்து வரும் பாம்புகள் இனி இடம் பெயர வேண்டிய கட்டாயம். எப்போது அவை அந்த மரங்கள் ஊடே புகுந்து இந்தப்பக்கம் வருமோ தெரியலை. ஆகவே முன்னெச்சரிக்கையாக snake away powderஐ வீடு சுத்தி தூவி விட்டுள்ளேன். 

அவை கண்ணில் படாத வரை
வாழ்வினிது
ओलै सिरिय ।
ओलै उवाच । ¡Los reptiles no son divertidos de ver!
ஜூன் 3 2023

கொரமண்டல் எக்ஸ்பிரஸ்

அஸ்ஸாம் பெங்கால் போய்க்கொண்டிருந்த அந்த நாட்களில் 87-92, எங்களுக்கு கொரமண்டல் எக்ஸ்ப்ரஸில் இடம் கிடைத்து போவது என்பது ஒரு தனி privilege கிடைச்ச மாதிரி! ஓரிரு தடவை தான் இடம் கிடைத்தது.

மற்ற எக்ஸ்பிரஸ் எல்லாம் கல்கத்தா சென்றடைய 40-48 மணி நேரம் ஆகும். கொரமண்டல் 30-32 மணி நேரத்துல போயிரும். அதற்கு வழி விட்டுவிட்டு தான் மற்ற ட்ரையின்ஸ் போகும்.

அதுவும் நார்த்ஈஸ்ட் போகிற ரயில் தடங்களெல்லாம் கொடுமை. ரயில் பெட்டிகள் அந்த ஆட்டம் ஆடும். எப்ப கவிரும் எப்ப பாம் வெடிக்கும்ன்னு தெரியாது, நம்ம உயிருக்கு உத்தரவில்லாத பயணங்கள் அவை.

ரிசர்வேஷன் கிடைக்காம பல தடவை கல்கத்தாவிலிருந்து கழிப்பறை பக்கத்துல, வாசற்படியில உட்கார்ந்து சென்னை வந்துருக்கேன்.

பெங்காலில் கல்லூரி படிப்பு முடிந்து நானும் என் நண்பர்கள் (கிளாஸ்மேட்ஸ்) மூவருமாக பெங்களுர் திரும்பிக் கொண்டிருந்தோம். கொரமண்டல் தான்னு நினைக்கிறேன். மூவருக்கும் ரிசர்வேஷன் கிடையாது, கழிப்பறை பக்கத்துல இடம். ரூம் காலி பண்ணி புத்தக மூட்டைகள் வேறு. டிடியி கல்லூரி மாணவர்கள் என்பதால் புவனேஷ்வர் பக்கத்துல ஒரு பெர்த் கொடுத்தார். மூவருக்கும் உட்கார இடம்.

ஒரு பிரச்சனையுமில்லாம சென்னை சென்ட்ரல் வந்தோம். அடுத்து பெங்களூர் போகனும். 

சென்ட்ரலில் இறங்கியவுடன் பெங்களூர்க்கு டிக்கெட் வாங்க கேட் பக்கம் வந்தோம். அவ்வளவு தான்.

அங்க செக்கிங் ஆளு, இவ்வளவு லக்கேஜ் லக்கேஜ் ஃபீஸ் கட்டாம வந்துருக்க, ஃபைன் கட்டுன்னு ஒரே கெடுபுடி. கல்லூரி ஸ்டண்ட் காசு இல்லைன்னாலும் வேலைக்காவல. பாக்கெட் காலி பண்ணி துட்டைக் கட்டி, பெங்களூர் டிடியிகிட்ட நண்பன் கன்னடத்துல பேசி பெங்களூர் வந்து சேர்ந்தோம்!

இப்ப உங்களுக்கு நிறைய புதிய ரயில் வண்டிகள் வந்திருக்கும்.

Very sad to hear about coramandel express derailment and human losses.

இழப்பை நினைத்து வருத்தமாயிருந்தாலும், அந்த பழைய ரயில் பயணங்களை நினைக்கும் போது
வாழ்வினிது!
ओलै सिरिय ।
ओलै उवाच ।
¡Los viajes en tren son nostálgicos!
ஜூன் 3 2023

ஒரு நட்சத்திரப் பிறந்த நாளில்

கடந்த ஏழெட்டு வருடங்களாகப் பட்ட கஷ்டங்கள் அவமானங்கள் இழப்புகள் என ஒவ்வொன்னா மறைந்து கொஞ்சம் நிம்மதி என்கிற வெளிச்சம் கொஞ்சம் கண்ணுக்குத் தெரியுது.

இங்கு இந்நட்சத்திர நாளைச் சிறப்பாக்கிய கபீஷன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

இன்று எல்லா உறவினர்களோடும் அவர்களின் அன்பு மழையிலும் நனைந்தாகி விட்டது. எனக்கு மனநிம்மதியளிக்கும் உள்ளூர் சிவன் பெருமாள் கோவிலிலும் மனதார அர்ச்சனை, பழங்கள் மற்றும் உண்டக்கட்டி. இரண்டு கை பத்தவில்லை.

நேற்றிலிருந்து என் அத்தை, அப்பாவின் தங்கை, என்னிடம் பேச ரொம்ப முயன்றாராம். எனக்கு அப்போது இரவு என்பதால் ஃபோன்கால்ஐத் தவிர்த்திருக்கார். இன்று காலை அவருடன் 55 மணித்துளிகள் இடைவிடாமல் உரையாடல். உரையாடலில் அவரது வாயிலிருந்து தானாக வந்து விழுந்த குடும்ப வரலாற்றை அவர் பேசப்பேச குறிப்பெடுத்துக் கொண்டேன். நூறு வருட வரலாறு.

அத்தை சேலம் ஐன்டியுசி தலைவர் கல்யாணசுந்தரத்தின் உறவினர். குடும்பத்தில் இப்ப எல்லோரும் 85-95 ப்ளஸ். நீண்டதொரு தனது இன்பதுன்ப வாழ்க்கையைச் சொல்லிக் கொண்டு வந்தார். எல்லோரும் முதுமையின் பிடியில். (படத்தில் சேலம் ஐன்டியுசி கல்யாணசுந்தரம் மாமா 95-96 வயது. போன வெள்ளிக்கிழமை அத்தை வீட்டில்). அப்பாவின் நண்பர். அப்பா இருந்திருந்தால் இப்ப 95.

அந்த அத்தை பையனின் ஃபோன் மதியம். அம்மாவோட ஐந்து நிமிஷம் பேசினால் சண்டை வருது, ஆனால் நீங்க 55 நிமிஷம் பேசறீங்க! எப்படீன்னு தெரியலைன்னு! எனக்கு வயசாச்சுன்னு மறைமுகமாச் சொல்றானோ!

கிரகப்பெயர்ச்சி ராசிபலனில் எனக்கு எழுதியிருந்தது: உன் குலதெய்வத்தை நினை, உன் கண் முன்னே வந்து நிற்பார் என.

எங்கிருந்தோ எங்கள் தாயாதி உறவினர் இன்று குலதெய்வக்கோவிலில் அவர்கள் விட்ட சொரப்பின் நிகழ்வைப் படமாக அனுப்பி வைக்க, அதைக்கண்டு என் அத்தைகள் மற்றும் உறவினர்களுக்கு இன்று என் மேல் ஒரு அளவுகடந்த பாசம் மற்றும் நன்றி!

குலதெய்வத்தை இரவில் நினைத்ததைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. எல்லாம் கண்முன் வந்து நிற்கிறது.

சொரப்பு என்றால் என்ன என்று கேட்டவர்களுக்கு இந்தப்படத்தை சமர்ப்பிக்கிறேன்.

அம்மிணியோட வெளியே ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு வரும்போது இத்தனை நாள் பட்ட கஷ்டங்களுக்கு எப்ப நிவாரணம் நீதி கிடைக்கும்ன்னு சொன்னா, அம்மிணியின் இன்ஸ்டண்ட் பதில், இப்ப நிம்மதியா இருக்க, அதோட ரிடையர் ஆகிட்டு அடுத்த வேலையை நோக்கி நகருன்னு!

இதைவிட ஒரு நிறைவான நாளை கடந்த சில வருடங்களில் பார்த்ததில்லை!

நிறைவாக்கிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி!
வாழ்வினிது
ओलै सिरिय।

ओलै उवाच । Muchas Gracias !
ஜூன்2 2023

மொழித்திணிப்பு ஏன்

தற்சமயம் ஒரே சமயத்தில் சம்ஸ்கிரதமும் ஸ்பானிஷ்ஷும் படித்து கற்று வருவதால் இரண்டையும் புரிந்து கொள்ள ஒரு இணைப்பு மொழியாக ஆங்கிலம்தானிருக்கு! அதைத் தான் இப்போது உபயோகிக்கிறேன்.

சம்ஸ்கிரதம் கத்துக்க முதலில் ஒரு 450 பக்கம் கொண்ட புத்தகத்தை வாசித்து முடித்து விட்டேன். அதில் இதன் இலக்கணத்தைப் புரிந்து கொண்டாலும் ஒரு மொழியை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள அது போதுவானதாக இல்லை.

ஆதலால் ஒரு சம்ஸ்கிரத காப்பியத்தையும் சேர்ந்து படிப்போம், அப்போது இதில் கற்ற சம்ஸ்கிரத இலக்கணத்தை இன்னும் நன்கு புரிந்து கொள்ள ஏன் பகவத்கீதை படிக்கக் கூடாது என்று தோன்றியது.

அன்னிபெசண்ட் அம்மையாரும் பகவன்தாஸ் அவர்களும் தியோசாபிகல் சொசைட்டி மூலம் 1905ல் வெளியிட்ட பகவத்கீதை புத்தகத்தின் பிடிஎஃப் இணையத்தில் பரவலாக கிடைத்ததால் அதை எடுத்துப்படிக்க ஆரம்பித்தேன்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் (இதை ஸ்லோகம் என்று சொல்ல விருப்பமில்லாதவர்கள் செய்யுள் நடை உரை என்று எடுத்துக் கொள்ளலாம்) ஆங்கிலத்தில் விரிவான அர்த்தம், மற்றும் அதை விடச் சிறப்பாக சம்ஸ்கிரத வார்த்தைகளை ஒவ்வொரு கீதையிலும் எப்படி சந்தி பிரித்து எழுதுவது, அர்த்தம் கொள்வது என மிகப்பிரமாதமாகக் கொடுத்துள்ளனர் இந்த புத்தகத்தில்.

இப்போது இதைப் படிக்கும் போது முதலில் படித்த அந்த சம்ஸ்கிரத புத்தகத்தின் 450 பக்கங்களின் அவசியம் இப்போது மிகவும் தேவைப்பட்டது. ஆகவே, அந்த புத்தகத்தை திரும்ப வாசிக்க எடுத்து ஆரம்பித்து அதன் 200வது பக்கத்தில் எனது இரண்டாவது தடவை வாசிப்பில் நிற்கிறேன்.

இந்த கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு 100 வருடத்திற்கு முந்தையது. சிலவை செய்யுள்/poetry வடிவில் அர்த்தம் மொழி பெயர்த்து கூறப்பட்டுள்ளது. பல ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. ஏனெனில்அவை இன்றைய உபயோகத்தில் இல்லாத ஆங்கில வார்த்தைகள்.

சம்ஸ்கிரதத்தில் சந்தி பிரித்து அர்த்தம் இருந்தாலும், சம்ஸ்கிரதத்தில் அதன் வாக்கிய அமைப்பில வார்த்தைகள் ( subject verb object) பலவித மாற்றங்களோடு மாறி மாறி வரும். மிக விரிவானதொரு மொழி. அதை வைத்து, அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை வைத்து, அந்த முழு கீதை ஸ்லோகத்தின் அர்த்தத்தைக் கூட்டி அமைப்பது சிரமமாக இருக்கு!

ஆகவே இன்னொரு கீதை புத்தகம் சம்ஸ்கிரதம்-தமிழ் மொழிபெயர்ப்போடு எடுத்து படித்து வருகிறேன். ஆங்கிலத்தில் தெரியாத வார்த்தைகளுக்கு இப்போது தமிழில் அர்த்தம் எளிதாகப் புரிவதால், அந்த ஸ்லோகத்திலுள்ள ஒவ்வொரு சம்ஸ்கிரத வார்த்தைக்கும் அர்த்தம் புரிகிறது. சம்ஸ்கிரத மொழியின் சந்தி அதன் இலக்கணம் இப்போது புரிய வருகிறது.

ஏன் இந்த சிக்கல்? 

இத்தனை வருடம் ஆங்கிலம் கற்றும் பேசியும் இருந்தும், ஆனால் அதிலுள்ள நிறைய வார்த்தைகள் புழக்கத்தில் இல்லாததாலும், ஆங்கிலத்தை முழுமையாக கற்பதில் நம்மில் பலரிடம் உள்ள சிரமத்தை என்னிடம் இப்போது பார்க்க முடிகிறது!

ஏன் இந்த கஷ்டம்?

ஆங்கிலம் நம்மேல் திணிக்கப்பட்ட மொழி. நம் தாய்மொழியல்ல அது. அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நாம் நம் தாய் மொழியிலுள்ள அதே வார்த்தையைத் தேடி ஓடுகிறோம்.

ஸ்பானிஷ் கற்பதிலும் உள்ள சிரமம் இது தான். ஸ்பானிஷ் மக்களுக்கும் ஆங்கிலம் கற்பதில் உள்ள சிரமமும் மிக அதிகம். அவர்களும் இதே போல் அவர்கள் தாய்மொழியில் வார்த்தைகளைத் தேடுகிறார்கள்.

இத்தகைய ஆங்கிலத் திணிப்பு நம்மீது ஏன், எதனால், யாரால்?

பதிவு நீண்டு விட்டது. அடுத்ததில் பார்ப்போம்!

அனைத்தையும் சகிப்புத்தன்மையுடன் கற்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprende todo todos los días!
மே 31 2023

சுரப்பு அழைப்பு

எங்க குலதெய்வம் கோவிலில் சொரப்பு விடுதல் என்பது அம்மனுக்கு அளிக்கும் ஒரு குடும்ப வழிபாடு. எங்கள் குடும்பத்தில் மூன்று நான்கு தலைமுறைகளாக இது முக்கியத்துவம் வாய்ந்தது!

உறவினர் (தாயாதி) ஒருவர் இந்த வாரம் கோவிலில் சொரப்பு விடுகிறார். அதற்கான அழைப்பை அவர் எனக்கு பத்து நாள் முன்பே அனுப்பிவிட்டார்.

அவரது அழைப்பை நான் எனது சகோதரர்களுக்கும் அத்தை மற்றும் சில உறவினர்களுக்கு நேரத்தில் இன்ஃபார்ம் பண்ணத் தவறிவிட்டேன்.

இன்னிக்கு வாரந்திர ராசிபலன் படிச்சப்ப சகோதரர்களிடம் பார்த்து மரியாதையாகப் பேசுன்னு போட்டிருந்துச்சு!

அப்படி என்னடா ஆயிரப்போவுதுன்னு நினைச்சேன். கரெக்டா என் அண்ணன் ஃபோன் பண்றாப்புல. நம்ம கோவில்ல ஊர்ல சொரப்பு விடறாங்க, இப்ப தான் தகவல் வந்துருக்குன்னு. 

பக்குன்னுச்சு. அந்த உறவினர் எனக்கு நேரத்துக்கு தகவல் சொல்லிவிட்டார். நான் கோட்டை விட்டாச்சு. அண்ணனுக்கு நேரத்துக்கு அதில் நம்ம பணம் போவலையேன்னு கடுப்பு.

மற்ற உறவினர்கள் என்ன சொல்லப் போறாங்களோ!

திக் திக் ன்னாலும் அம்மன் காப்பாத்துவாகங்கிற நம்பிக்கையில்

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Comunicar a tiempo es muy importante!
மே 29 2023

பாராளுமன்றத் திறப்பு விழா

பாராளுமன்ற திறப்பு விழாவை எனது நண்பர் ஒருவர் மிகக் கடுமையான தரகுறைவான வார்த்தைகளில் சித்தரித்து வருகிறார். 

படிக்க அருவருப்பாக இருக்கு! அவரிடம் சொல்லவும் தயக்கமாக இருக்கு. அடிபட்டு திருந்தட்டும், என்ன செய்ய! 

ஏற்கனவே அவரது நண்பர்களே அவரது தோளை உரசிப் பார்த்து அவரது ஜாதிரீதியாக அவரைத் தாழ்த்திப் பேசுகிறார்கள். அது உரைத்தாலும் அவர்களோடு சமரசமாகவே வாழ விரும்புகிறார். அதிலிருந்து விலக விருப்பமில்லை!

ஜனநாயக அமைப்பு முறையில் நடக்கும் நிகழ்வுகளை ஏற்பதும் விமர்சிப்பதும் இயல்பு தான். ஆனால் தரம்தாழ்த்தி இறங்கும் போது அவர்களது வாதம் வலுவிழந்து போய்விடுகிறது!

சொந்த மண்ணின் கலாச்சாரம், பண்பாடு,  பண்டிகைகள், வாழ்வியல் முறை, தொன்றுதொட்டு தொடரும் பழக்கவழக்கங்கள், சிலருக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், மக்கள் ஏதாவது ஒரு முறையில் தொடர்வது கடைபிடிப்பது  தவிர்க்க இயலாது.

ஒரு அந்நிய கலாசாரத்தை அந்நிய அரசியலை மக்களிடம் புகுத்துவதில் ஏற்படும் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தேவை!

விஞ்ஞானரீதியாக நோக்கினாலும், எந்த ஒரு செயலையும் பரிசோதனை மற்றும் ஆய்வு செய்யும் போது, அது தோல்வியடையும் பட்சத்தில், அந்த எக்ஸ்பரிமெண்ட்டை நிராகரிப்பது இயல்பு!

அத்தகைய பரிசோதனையே அந்நியக் கலாசாரம் மற்றும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை நுழைப்பதிலும் செய்து பார்த்ததில் பெரும்பாலான மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகும் அதைக்கட்டி அழுவது நமது வீழ்ச்சி மற்றும் மனநிலை பாதிப்பை நோக்கியே இட்டுச்செல்லும்!

இன்னும் அதே மனநிலையில் இருந்து கொண்டு இந்தக் கட்டடத் திறப்புவிழாவையும் கேவலமான முறையில் விமர்சிப்பதால் இழப்பு கட்டிடத்திறப்பு விழா நடத்தியவர்களுக்கல்ல! இன்னும் வீழப்போவது நீங்கள் தான்!

எப்படி சொல்லி புரிய வைப்பது!

இதுவே அரபு நாடுகளிலோ, சீன கொரிய க்யூப சோசலிஷ நாடுகளில் இத்தகைய கீழ்த்தர விமர்சனம் செய்தால் நம் தலை தப்பாது. கம்பி எண்ண வேண்டியது தான், இல்லை நாய்க்கும் கழுகிற்கும் இரையாக வேண்டியது தான். 

ஜனநாயக அமைப்பிலாவது ஒரு தேர்தல் மூலம் மக்களுக்குப் பிடிக்காதவர்களை தேர்தல் மூலம் மாற்றி அமைக்க முடியும். அது அரபு சீன கொரிய க்யூப அரசியல் அமைப்பில் சாத்தியமில்லை.

ஜனநாயக பாரளுமன்ற அமைப்பில் இருக்கும் வரை தான் நமக்கு சுதந்திரம் பேச்சுரிமை கருத்துச்சுதந்திரம் இருக்கும். அதை துஷ்பிரயோகம் செய்யும் போது இழப்பு மக்களுக்கு, ஜனநாயக அமைப்பு முறைக்குத் தான்!

ஜனநாயகத்தைக் காக்க துஷ்பிரயோகம் செய்யாமலிருந்தால்

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La democracia prevalece en nuestras acciones!
மே 28 2023

உண்டக்கட்டி கிடைத்த பெருமை

பெரும்பாலும் உண்டக்கட்டியை விரும்பித் திங்க அங்கு போனாலும், கொஞ்சம் தாமதமானாலும் நமக்கு கிடைக்காமப் போகும்.

நேற்று அரை மணி நேரம் லேட், எனக்கு கிடைக்கலை. ஆனாலும் எங்க பெருமாளும் சிவனும் விரும்பி வந்தவங்களை வெறும் கையோடு அனுப்புவதில்லை.

மலர்ந்த முகத்தோடு அந்த இன்முகத்தோடு அர்ச்சகர்கள் நம் கை நிறைய அளிக்கும் பழமும் பூவும் கோடி பெறும்! சில வார்த்தைகள் கூடிய குசல விசாரிப்போடு தான் சில அர்ச்சகர்கள் வழியனுப்புவார்கள்!

திரும்பி வரும் வரும் போது, பிரசாதம் அளித்து வந்த வாலண்டியர் தனக்கு நாலு டப்பா தனியே ஒதுக்கி வைத்து எடுத்துச் செல்வதை, ஒரு மலர்ந்த முகத்தோடு, இன்னொருவரிடம் சுந்தரத் தெலுகில் சொல்லி, அவருக்கு ஒன்றைப் பகிர்ந்தளிக்க முன் வரும் போது, அவர்களது மலர்ந்த முகத்தோடு கூடிய அவர்களது உரையாடல், நமது ஐம்புலன்களையும் நிறைவு செய்யும் திருப்தியுடன் வர முடிந்தது!

இத்தகைய பெருமை வாய்ந்த, எனக்கு ஆத்ம த்ருப்தி அளிக்கும் இடத்தை உள்ளூர் தொலைக்காட்சியிலும் பெருமையாகச் சொல்லும் பொழுது

நம் வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Los lugares divinos dan paz y satisfacción!
மே 27 2023

செங்கோலுக்கு வரலாறு தேவை

ஆதீனம் செங்கோல் கொடுக்க விமானத்துல போறதைப் படம் போடறாங்க!

யப்பா ஆதீனம் கிட்ட சொல்லி அனுப்பிடுங்க! அங்கிட்டு யாராவது கேமராக்காரன் முன்ன குறுக்கப் போயிரப் போறாரு! தள்ளி விட்டுரப் போறாங்க!

முதல்ல செங்கோல் கொடுத்ததை ஆவணப்படுத்தி பிரின்ஸ்டன் லைப்ரரில எப்படியாவது கொண்டு சேர்த்திருங்கப்பு. அப்பத்தான் எங்க ஏகேவோட பேரன் பேத்தியெல்லாம் அங்ஙனப் போய் படிச்சு நாட்டுக்கு கன்ஃபர்ம் பண்ண முடியும்!

பனை ஓலையில எழுதனதெல்லாம் இப்ப செல்லாது அப்பு! 

குறிப்பாக அந்த செங்கோலுக்கு ஒரு வரலாறு வேணும்.

இப்பவெல்லாம் எதால செய்யப்பட்டதுன்னு ஆவணப்படுத்தனும், ஒரு பழையப் பத்திரிகையில வந்துருக்கனும், லைப்ரரீல சேர்க்கனும், காப்பீடு வாங்கி வைக்கனும், காப்புரிமை வாங்கி வைக்கனும்!

நிறைய வேலையிருக்கப்பு உங்களுக்கு!

அப்பதான்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La historia necesita pruebas para estar en la historia!