Saturday, July 8, 2023

பாராளுமன்றத் திறப்பு விழா

பாராளுமன்ற திறப்பு விழாவை எனது நண்பர் ஒருவர் மிகக் கடுமையான தரகுறைவான வார்த்தைகளில் சித்தரித்து வருகிறார். 

படிக்க அருவருப்பாக இருக்கு! அவரிடம் சொல்லவும் தயக்கமாக இருக்கு. அடிபட்டு திருந்தட்டும், என்ன செய்ய! 

ஏற்கனவே அவரது நண்பர்களே அவரது தோளை உரசிப் பார்த்து அவரது ஜாதிரீதியாக அவரைத் தாழ்த்திப் பேசுகிறார்கள். அது உரைத்தாலும் அவர்களோடு சமரசமாகவே வாழ விரும்புகிறார். அதிலிருந்து விலக விருப்பமில்லை!

ஜனநாயக அமைப்பு முறையில் நடக்கும் நிகழ்வுகளை ஏற்பதும் விமர்சிப்பதும் இயல்பு தான். ஆனால் தரம்தாழ்த்தி இறங்கும் போது அவர்களது வாதம் வலுவிழந்து போய்விடுகிறது!

சொந்த மண்ணின் கலாச்சாரம், பண்பாடு,  பண்டிகைகள், வாழ்வியல் முறை, தொன்றுதொட்டு தொடரும் பழக்கவழக்கங்கள், சிலருக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், மக்கள் ஏதாவது ஒரு முறையில் தொடர்வது கடைபிடிப்பது  தவிர்க்க இயலாது.

ஒரு அந்நிய கலாசாரத்தை அந்நிய அரசியலை மக்களிடம் புகுத்துவதில் ஏற்படும் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தேவை!

விஞ்ஞானரீதியாக நோக்கினாலும், எந்த ஒரு செயலையும் பரிசோதனை மற்றும் ஆய்வு செய்யும் போது, அது தோல்வியடையும் பட்சத்தில், அந்த எக்ஸ்பரிமெண்ட்டை நிராகரிப்பது இயல்பு!

அத்தகைய பரிசோதனையே அந்நியக் கலாசாரம் மற்றும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை நுழைப்பதிலும் செய்து பார்த்ததில் பெரும்பாலான மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகும் அதைக்கட்டி அழுவது நமது வீழ்ச்சி மற்றும் மனநிலை பாதிப்பை நோக்கியே இட்டுச்செல்லும்!

இன்னும் அதே மனநிலையில் இருந்து கொண்டு இந்தக் கட்டடத் திறப்புவிழாவையும் கேவலமான முறையில் விமர்சிப்பதால் இழப்பு கட்டிடத்திறப்பு விழா நடத்தியவர்களுக்கல்ல! இன்னும் வீழப்போவது நீங்கள் தான்!

எப்படி சொல்லி புரிய வைப்பது!

இதுவே அரபு நாடுகளிலோ, சீன கொரிய க்யூப சோசலிஷ நாடுகளில் இத்தகைய கீழ்த்தர விமர்சனம் செய்தால் நம் தலை தப்பாது. கம்பி எண்ண வேண்டியது தான், இல்லை நாய்க்கும் கழுகிற்கும் இரையாக வேண்டியது தான். 

ஜனநாயக அமைப்பிலாவது ஒரு தேர்தல் மூலம் மக்களுக்குப் பிடிக்காதவர்களை தேர்தல் மூலம் மாற்றி அமைக்க முடியும். அது அரபு சீன கொரிய க்யூப அரசியல் அமைப்பில் சாத்தியமில்லை.

ஜனநாயக பாரளுமன்ற அமைப்பில் இருக்கும் வரை தான் நமக்கு சுதந்திரம் பேச்சுரிமை கருத்துச்சுதந்திரம் இருக்கும். அதை துஷ்பிரயோகம் செய்யும் போது இழப்பு மக்களுக்கு, ஜனநாயக அமைப்பு முறைக்குத் தான்!

ஜனநாயகத்தைக் காக்க துஷ்பிரயோகம் செய்யாமலிருந்தால்

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La democracia prevalece en nuestras acciones!
மே 28 2023

No comments: