Saturday, July 8, 2023

ஒரு நட்சத்திரப் பிறந்த நாளில்

கடந்த ஏழெட்டு வருடங்களாகப் பட்ட கஷ்டங்கள் அவமானங்கள் இழப்புகள் என ஒவ்வொன்னா மறைந்து கொஞ்சம் நிம்மதி என்கிற வெளிச்சம் கொஞ்சம் கண்ணுக்குத் தெரியுது.

இங்கு இந்நட்சத்திர நாளைச் சிறப்பாக்கிய கபீஷன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

இன்று எல்லா உறவினர்களோடும் அவர்களின் அன்பு மழையிலும் நனைந்தாகி விட்டது. எனக்கு மனநிம்மதியளிக்கும் உள்ளூர் சிவன் பெருமாள் கோவிலிலும் மனதார அர்ச்சனை, பழங்கள் மற்றும் உண்டக்கட்டி. இரண்டு கை பத்தவில்லை.

நேற்றிலிருந்து என் அத்தை, அப்பாவின் தங்கை, என்னிடம் பேச ரொம்ப முயன்றாராம். எனக்கு அப்போது இரவு என்பதால் ஃபோன்கால்ஐத் தவிர்த்திருக்கார். இன்று காலை அவருடன் 55 மணித்துளிகள் இடைவிடாமல் உரையாடல். உரையாடலில் அவரது வாயிலிருந்து தானாக வந்து விழுந்த குடும்ப வரலாற்றை அவர் பேசப்பேச குறிப்பெடுத்துக் கொண்டேன். நூறு வருட வரலாறு.

அத்தை சேலம் ஐன்டியுசி தலைவர் கல்யாணசுந்தரத்தின் உறவினர். குடும்பத்தில் இப்ப எல்லோரும் 85-95 ப்ளஸ். நீண்டதொரு தனது இன்பதுன்ப வாழ்க்கையைச் சொல்லிக் கொண்டு வந்தார். எல்லோரும் முதுமையின் பிடியில். (படத்தில் சேலம் ஐன்டியுசி கல்யாணசுந்தரம் மாமா 95-96 வயது. போன வெள்ளிக்கிழமை அத்தை வீட்டில்). அப்பாவின் நண்பர். அப்பா இருந்திருந்தால் இப்ப 95.

அந்த அத்தை பையனின் ஃபோன் மதியம். அம்மாவோட ஐந்து நிமிஷம் பேசினால் சண்டை வருது, ஆனால் நீங்க 55 நிமிஷம் பேசறீங்க! எப்படீன்னு தெரியலைன்னு! எனக்கு வயசாச்சுன்னு மறைமுகமாச் சொல்றானோ!

கிரகப்பெயர்ச்சி ராசிபலனில் எனக்கு எழுதியிருந்தது: உன் குலதெய்வத்தை நினை, உன் கண் முன்னே வந்து நிற்பார் என.

எங்கிருந்தோ எங்கள் தாயாதி உறவினர் இன்று குலதெய்வக்கோவிலில் அவர்கள் விட்ட சொரப்பின் நிகழ்வைப் படமாக அனுப்பி வைக்க, அதைக்கண்டு என் அத்தைகள் மற்றும் உறவினர்களுக்கு இன்று என் மேல் ஒரு அளவுகடந்த பாசம் மற்றும் நன்றி!

குலதெய்வத்தை இரவில் நினைத்ததைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. எல்லாம் கண்முன் வந்து நிற்கிறது.

சொரப்பு என்றால் என்ன என்று கேட்டவர்களுக்கு இந்தப்படத்தை சமர்ப்பிக்கிறேன்.

அம்மிணியோட வெளியே ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு வரும்போது இத்தனை நாள் பட்ட கஷ்டங்களுக்கு எப்ப நிவாரணம் நீதி கிடைக்கும்ன்னு சொன்னா, அம்மிணியின் இன்ஸ்டண்ட் பதில், இப்ப நிம்மதியா இருக்க, அதோட ரிடையர் ஆகிட்டு அடுத்த வேலையை நோக்கி நகருன்னு!

இதைவிட ஒரு நிறைவான நாளை கடந்த சில வருடங்களில் பார்த்ததில்லை!

நிறைவாக்கிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி!
வாழ்வினிது
ओलै सिरिय।

ओलै उवाच । Muchas Gracias !
ஜூன்2 2023

No comments: