Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Saturday, July 8, 2023

செங்கோலுக்கு வரலாறு தேவை

ஆதீனம் செங்கோல் கொடுக்க விமானத்துல போறதைப் படம் போடறாங்க!

யப்பா ஆதீனம் கிட்ட சொல்லி அனுப்பிடுங்க! அங்கிட்டு யாராவது கேமராக்காரன் முன்ன குறுக்கப் போயிரப் போறாரு! தள்ளி விட்டுரப் போறாங்க!

முதல்ல செங்கோல் கொடுத்ததை ஆவணப்படுத்தி பிரின்ஸ்டன் லைப்ரரில எப்படியாவது கொண்டு சேர்த்திருங்கப்பு. அப்பத்தான் எங்க ஏகேவோட பேரன் பேத்தியெல்லாம் அங்ஙனப் போய் படிச்சு நாட்டுக்கு கன்ஃபர்ம் பண்ண முடியும்!

பனை ஓலையில எழுதனதெல்லாம் இப்ப செல்லாது அப்பு! 

குறிப்பாக அந்த செங்கோலுக்கு ஒரு வரலாறு வேணும்.

இப்பவெல்லாம் எதால செய்யப்பட்டதுன்னு ஆவணப்படுத்தனும், ஒரு பழையப் பத்திரிகையில வந்துருக்கனும், லைப்ரரீல சேர்க்கனும், காப்பீடு வாங்கி வைக்கனும், காப்புரிமை வாங்கி வைக்கனும்!

நிறைய வேலையிருக்கப்பு உங்களுக்கு!

அப்பதான்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La historia necesita pruebas para estar en la historia!

Friday, October 28, 2022

சப்பாத்திக்கு சாம்பார்

பக்கத்து ஊரிலுள்ள பஞ்சாபி நண்பனின் பெண் வந்து எங்களைப் பார்த்து விட்டுப் போனாள். 

நம்ம பையன் அம்மிணிகிட்ட தனக்கு வேணும்கிற சாம்பார் உருளைக்கிழங்கு சமைச்சு வைக்கச் சொல்ல, பஞ்சாபி பெண்ணுக்கு தோசை சட்னி சாம்பார் வச்சு ஏமாத்திரலாம்ன்னு அம்மிணி ட்ரை பண்ணாங்க, வேலைக்காவல.

நல்ல கொலைப்பசியில வந்த அந்த பொண்ணு சப்பாத்தியே சாப்பிட்டுக்கிறேன்னு சொல்ல, இங்ஙன வீட்டுல முழிக்கிற முழி ஆஹா!

வாழ்க்கையில ஒரு வீர பஞ்சாபி மங்கைக்கு வந்த சோதனை, சப்பாத்திக்கு சாம்பாரையும் உருளைக்கிழங்கையும் தொட்டுகிட்டு, சாப்பிட முடியாம சாப்பிட்டுவிட்டுப் போயிடுச்சு. பாவம் குழந்தை.

அப்புறம் ஏன் சார் அவங்க நம்மளை சாம்பார்ன்னு சொல்ல மாட்டாங்க.

வாழ்வினிது
ओलै सिरिय !
¡Come cualquier cosa cuando tengas hambre!

Saturday, October 8, 2022

சாம்பார் ஆகினோம்

பக்கத்து ஊரிலுள்ள பஞ்சாபி நண்பனின் பெண் வந்து எங்களைப் பார்த்து விட்டுப் போனது. 

நம்ம பையன் அம்மிணிகிட்ட தனக்கு வேணும்கிற சாம்பார் உருளைக்கிழங்கு சமைச்சு வைக்கச் சொல்ல, பஞ்சாபி பெண்ணுக்கு தோசை சட்னி சாம்பார் வச்சு ஏமாத்திரலாம்ன்னு அம்மிணி ட்ரை பண்ணாங்க, வேலைக்காவல.

நல்ல கொலைப்பசியில வந்த அந்த பொண்ணு சப்பாத்தியே சாப்பிட்டுக்கிறேன்னு சொல்ல, இங்ஙன வீட்டுல முழிக்கிற முழி ஆஹா!

வாழ்க்கையில ஒரு வீர பஞ்சாபி மங்கைக்கு வந்த சோதனை, சப்பாத்திக்கு சாம்பாரையும் உருளைக்கிழங்கையும் தொட்டுகிட்டு சாப்பிட முடியாம சாப்பிட்டுவிட்டுப் போயிடுச்சு. பாவம் குழந்தை.

அப்புறம் ஏன் சார் அவங்க நம்மளை சாம்பார்ன்னு சொல்ல மாட்டாங்க.

வாழ்வினிது
ओलै सिरिय !
¡Come cualquier cosa cuando tengas hambre!

Sunday, September 25, 2022

மூஞ்சியில் வாசனை வீசுது

போன வெள்ளிக்கிழமை அம்மிணி கிட்ட ‘ நான் இரண்டு வாரம் இந்த மாதக்கடைசி வரை வெளிய சாப்பிட மாட்டேன், இன்னிக்கு எனக்குப்பிடிச்ச பஞ்சாபி ரெஸ்டாரண்ட்ல போய் சாப்பிடப் போறேன்’ன்னு சொல்லிபுட்டு அங்க போய் அவங்க மெனுவை நமக்கு ஏற்ற மாதிரி மாற்றி ஒரு வெட்டு வெட்டிவிட்டு வந்தேன். அம்மிணி கூப்பிட்டும் வரலை.

கடந்த ஒரு வாரமாக காபி தண்ணி கூட வீட்டுலத் தான்.

இன்னிக்கு அம்மிணி அவங்க ஆபீஸ் ஆட்களோடு அதே ரெஸ்டாரண்ட் போகப் போறாங்களாம்.

என்னைப் பழி வாங்கனும்ன்னு நினைச்சாப்புலயா இல்லையான்னு தெரியலை இதுவரை மூனு நாளு தடவை கேட்டு உசுப்பேத்தறாப்புல: நீ அந்த கடையில எந்த காம்போ ப்ளேட் வாங்கின, காம்போ நம்பர் என்ன, என்னென்ன நீ அதுல மாத்தினேன்னு மாறி மாறி கேள்வியா அடுக்கறாப்புலயே.

இரண்டு வாரம் வாயைக் கட்டி உட்காரனும்ன்னு உட்கார்ந்துகிட்டு இருக்கேன். திருப்பித் திருப்பி என் ஃபேவரிட் கடை மெனுவைக் கேட்டு ஆட்டம் காமிக்கறாப்புல.

இருபது வருடமாக அந்தக் கடையில் சாப்பிடறேன். அதே சர்தார் குக் அதே முதலாளி. நம்மைப் பார்த்தா நமக்கு வேணுங்கிற மாதிரி மாத்தித் தருவாங்க!

இரண்டு வாரம் முடியட்டும். இன்னிக்கு சத்திய சோதனையாக ஆட்டம் காண்பிக்கறாக அம்மிணி!

நாவடக்கத்தில் வாழ்வினிது
ओलै सिरिय।
¡Espera tu regalo!

கண்ணாடி மாற்றிய பொழுது

ஒரு கண்ணாடி மாத்தினதுக்கே நம்ம மக்கள் அதகளம் ஆடிட்டாங்க!

இதுக்கு என்ன சொல்வாங்களோன்னு கெதக்ன்னு இருக்கு.

எனக்கு இந்த மருவாதை வேண்டாம் அன்பர்களே!

அமைதியாக இருப்போம் அதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Gafas de sol!

Friday, July 15, 2022

வீட்டுப்பெண்கள் பேச்சைக் கேளுங்கள்

சின்ன வயசுல பள்ளிக்கூடம் போய்விட்டு சாயந்திரம் 4.30மணிக்கு வீட்டுக்குள்ள நுழையும் போதே இன்னிக்கு அம்மா பூரி மசால் பண்ணியிருக்காங்களா, பக்கோடா, பஜ்ஜி இருக்கா, இல்லாட்டி புளிமாவு அல்லது மோர்க்களி பண்ணியிருக்காங்களா அல்லது முள்ளு முருக்கு தட்டையாவது இருக்கான்னு எதிர்பார்த்தே வருவேன். குடும்பம் பெருசு, அம்மா ஏதாவது செய்து வச்சிருப்பாங்க. எதுவுமில்லைன்னா என்ர முகத்துல பசியில அம்புட்டு கோவமும் பிரதிபலிக்கும்.

இப்ப காலம் வேற.

அம்மிணிக்கு கோவிட் காலத்திலும் தினமும் வேலைக்குப் போயாவனும். சாயந்திரம் உள்ள நுழையும் போதே முகத்தில் பசியில் அவ்வளவு கடுகடுன்னு இருக்கும்.

வர்க் ஃப்ரம் ஹோம்ன்னு சொல்லிகிட்டு வீட்டுல  உட்கார்ந்துகிட்டு துன்கறவனுக்கும் சேர்த்தி இப்ப வந்து என்ன சமைக்கனும்ன்னு யோசிச்சு கிட்டு, இருக்கிற பசிக்கு எதைத் திங்கலாம்ன்னு ஒரு கொலைவெறியோட இருப்பாப்புல.

அம்மிணிக்குப் பிடிக்காத வேலை பாத்திரம் கழுவுற வேலை. அதை மட்டும் செய்ஞ்சு கொடுத்து ஓபி அடிச்சு ஓட்டிருவேன். லன்ச் டைம் மற்றும் கிடைக்குற காபி ப்ரேக் அப்பவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பாத்திரம் லோடு பண்ணி அம்மிணி வர்றதுக்குள்ள டிஷ் லோடு பண்ணிருவேன். இல்லாட்டி அந்த வெறுப்பும் உச்சி மண்டையில ஏறுச்சுன்னா செத்தோம். எப்படியெல்லாம் தப்பிப் பிழைக்க வேண்டியிருக்கு.

நேற்று வந்து படபடன்னு உள்ள நுழைஞ்ச ஆளு ஒவ்வொன்னா ஆரம்பிக்க மிக்ஸி வர்க் ஆவலை. தான் பிளான் பண்ணிய எல்லாம் ஆப்பு. அது என்னவா, ஒன்னுமில்லை. வெறும் அதுல தேங்காய்ச் சட்னி அரைச்சு வச்சா பழைய சாம்பர் இருக்கு, இந்த வீட்டுல உட்கார்ந்து துன்கிறவனுக்கு ஐஞ்சு தோசையை வார்த்துக் கொடுத்தா ஆச்சுன்னு நினைப்புல வந்தாப்புல, அதுக்கு ஆப்பு. மிக்ஸி போச்சு.

இருக்கிற அப்செட்ல கன்வெர்ட்டர் ஃப்யூஸ் போயிடுச்சான்னு நேராத் திருவி ஃப்யூஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாப்புல. அரண்டு போயிட்டேன். விட்டா அப்பவே மிக்ஸியை பார்ட் பார்ட்டா கழட்டியிருப்பாப்புல.

படபடப்பா இருக்கிறவங்கிட்ட நிதானமாகப் பேசற பழக்கம் எனக்கு. ஏன்னா சேதாரம் கம்மி பண்ணிக்கனுமில்ல.

கவலைப்படாதே நான் திருச்சி ஶ்ரீரங்கத்திலிருந்து வந்த அந்த அருமையான தோசை இட்லி மிளகாய்ப்பொடியை வச்சு சமாளிச்சுக்கிறேன் டோண்ட் வொர்ரின்னு சொல்லி ஓட்டியாச்சு.

இன்னிக்கு காலையில வேலைக்குப் போகும் போது எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் எடுத்து வச்சு, சாயந்திரம் வர்றதுக்குள்ள சரி பண்ணி வையுன்னு ஒரு லிஸ்ட்டு கொடுத்துட்டுப் போயிருக்காப்புல.

ஒரு நாள் லீவுல சும்மா இருக்கலாம்ன்னா முடியலை. உழைக்கிற பெண்கள் கிட்ட சொன்ன பேச்சு கேட்டு நடந்துக்கங்கப்பா, சேதாரம் கம்மியாக இருக்கும்.

மிக்ஸியை சரி பண்ணிவிட்டு அமைதியாக காலை ஆட்டிக் கொண்டிருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Escuchar a las mujeres!

Saturday, December 4, 2021

பெண் பார்க்கப் போனான்


பெண் பார்க்கப் போனான்
   மண்டபத்தில் கூட்டமோ பெரிதாய் 
மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் வேறெவரோ!

தூரத்திலிருந்து பார்த்தவள் பெண் பார்க்க வரலாமென்றாள்
  சொஜ்ஜியும் பஜ்ஜியும் வருமெனக் காத்திருந்தான்
காத்திருந்தனவோ அவளது கேள்விகள்!

கேள்விக்கனைகள் அனைத்தும் வியப்பளிக்கவில்லை
  எல்லாம் சரியென்று தலையாட்டிய பின்
 சொஜ்ஜியும் பஜ்ஜியும் வந்தன சிறிதென!

மண்டபத்தில் மணவாளனை தெரிவு செய்தவள் கேட்கிறாள்
  பஜ்ஜி சொஜ்ஜி திங்க இவ்வளவு பேரா?
வாயில் போன பஜ்ஜி கீழே விழுந்து விட்டது!

காலங்கள் ஓடிய பின்னும் கனவில் தெரிகிறாள்!

வாழ்வினிது
ओलै सिरिय ।

Friday, June 12, 2020

அம்மிணி ஆர்டர்

அம்மிணி பண்ற ரகளை தாங்க முடியாது! தினமும் வேலைக்குப் போயிட்டு வர்ற ஆளு கோவிட்னால காஸ்ட்கோ உள்ள போகமாட்டாகளாம். இது என்னய்யா ரீல்வுடறேன்னா, ஆபீஸ்ல தனிக்காட்டு ராணி, யாரும் வர்றதில்லை, கதவு வாசல்ல நின்னு பேசிட்டு போயிடுவாங்கலாம். காஸ்ட்கோ கதை அப்படியில்லையாம். அதனால அங்கு ஆன்லைன் ஆர்டர், வீட்டு டெலிவரி தான்.

இன்னிக்கு காஸ்ட்கோவிலே வாங்கப்போறேன்னு டெக்ஸ்டு வேற. சரி பெரிய மனுஷி நேர்ல போறான்னு நினைச்சா இல்லையாம். அதே ஆன்லைன் ஆர்டர்.

உனக்கு என்ன வேணும்.

எனக்கு முந்திரி வேணும்.

அதுல கொழுப்பு ஜாஸ்தி! தேவையா இப்ப!

உனக்கு இருக்கிறதை விடவா! சரி நானே வாங்கிக்கிறேன்.

சரி சரி பொழைச்சு போங்க.

ஆர்டர் பண்றாலாம் ஆத்தி! இரண்டு மணி நேரத்துல வருதாம், எடுத்து எல்லாம் உள்ள வைங்கன்னு ஆர்டர்.

இந்த WFHக்கு இன்னொரு பேரு தண்டசோறா சார்! வீட்டுல இருந்தாலே இளக்காரம் தான். இரண்டு பேரும் காரைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க! வெள்ளிக்கிழமை கோவில் போக முடியலை, உண்டகட்டியும் போச்சு!

ஏங்க அவங்க டெலிவர் பண்ணி இரண்டு மணி நேரமாச்சு உள்ள எடுத்து வைக்கலையா!

இரு பார்க்கிறேன்! இல்லையே! வாசல்ல ஒன்னுமேயில்லையே!

என்ன ஆளுங்க நீங்க! அவன் டோர் டெலிவரி பண்ணி கதவு பக்கத்துல வச்சிருக்காங்க பாருங்க, படம் அனுப்பியிருக்கான் வேற! வந்து இரண்டு மணி நேரம் ஆச்சு என்ன ஆளுங்க! வீட்டுல இப்படி இருந்தா எப்படி!

கதவுக்கு வெளிய ஒன்னுமேயில்லையே! அட்ரஸ் கரெக்டா கொடுத்தியா!

படத்தைப் பாருங்க! அட்ரஸெல்லாம் கரெக்டா தானே இருக்கு! படத்துல மிதியடியெல்லாம் தெரியர மாதிரி போட்டோ போட்டிருக்கான். என்னங்க நீங்க!

ஆமாம் இது யார் வீட்டு மிதியடி!

ஙே ஙே ஙே!

போன் பண்ணி கேளு! யார் வீட்டுல போய் டெலிவர் பண்ணியிருக்கான் பாரு!

அந்த டெலிவரி நம்பரை எங்க தேடறது? கஸ்டமர் சர்வீஸுக்குத் தான் கேட்கனும்!

நீயும் உன்னோட ஆன்லைன் ஆர்டரும் டெலிவரியும். மதியம் தூக்கம் போவுதுயா!

வீதியில இறங்கி ஒவ்வொருத்தன் வீட்டு வாசப்படியைப் பார்த்து எவன் வீட்டுல இறக்கிருக்கான்னு கண்டுபுடிச்சு, அவங்க வீட்டு காலிங்பெல் அடிச்சு புட்டு திரும்ப பத்தடி தள்ளி ரோட்டுக்கு வந்து நின்னு, அவங்க வந்து கதவைத் திறந்த பிறகு விவரம் சொல்லி எடுத்து வாரதுக்குள்ள நமக்கு பின்னி எடுக்குதுயா!

பத்து வருசமா எதிரும் புதிரும் இருக்கிறவங்களின் முகத்தை இன்னிக்குத்தான் நேரில் பார்க்கிறேன். யார் பெத்த மகராசியோ தெரியலை! இது என்ர சாமானில்லை அதனால நீ எடுத்துட்டுப் போய்க்கன்னு சொன்னதால எடுத்து வந்து சேர்ந்தேன்.

ஏம்மா! முதல்ல காஸ்ட்கோக்கு போனைப்போடு! ஏன் இப்படி ராங்க் டெலிவரி பண்றாங்கன்னு கேளு!

முடியாது! கேட்க முடியாது!

ஏன் ஏன்!

முடியாது. ஏன்னா, கேட்டா டெலிவரி பாய்க்கு வேலை போயிரும். போய் உங்க வேலையைப் பாருங்க! சாமான் கிடைச்சிருச்சுல்ல. ப்ரிட்ஜ்ல வைக்க வேண்டியதைப் பாருங்க!

அடி ஆத்தீ! இந்த போடு போடறாளே!

Sunday, February 19, 2012

வயசாயிடுச்சு

புதிதாக ஒரு நண்பர் அறிமுகமானார். பார்க்க நம்ம விட கொஞ்சமே வயசானவர் மாதிரி இருந்தார். நானும் நல்ல மரியாதையுடனே பேசி வந்தேன். அவருக்கு முடி அதிகம் போயிட்டுது. தடித்த முகம், பழக மிக நல்ல மனிதர். எப்போதும் மரியாதையாவே பேசுவார். இரண்டு மூணு வாரம் நன்கு பேசிட்டிருந்தோம்.

இந்த வாரம் சந்திக்கும் போதும் நாங்க நல்லா பேசிக்கிட்டிருந்தோம். அவருக்கு ஒரு போன் வந்து தள்ளிப் போய் பேசிவிட்டு வந்தார். அரைகுறையாக காதில் விழுந்தது. திரும்பி வந்து மரியாதையாகவே குனிந்து நிமிர்ந்து பேசும் போது நன்கு புரிந்து விட்டது, நமது வயசுக்கு மதிப்பு கொடுக்கிறார்ன்னு. வணக்கம்னே!

சமீபத்தில் நண்பர்கள் வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தனர். இன்னும் மூன்று family வருவதாகச் சொல்லியிருந்தனர். போகும் வழியில் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், வீடு நிறைவாக இருக்கும் என்று மனைவியிடம் பேசிக் கொண்டு காரில் பயணத்திருந்தோம்.

நண்பர் வீடு அடைந்தவுடன் வந்தவர்களை அறிமுகப் படுத்தினர். ஒரு இளம்பெண் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தது. எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அந்தப் பெண் என் மனைவியிடம் 'ஆண்ட்டி! அந்தக் காய் கொஞ்சம் எடுத்துப் போடறீங்களான்னு' கேட்டது. என் மனைவிக்கு முகமே மாறி விட்டது. கையிலிருந்த தட்டு கீழ இறங்கிட்டது. சிரிச்சுக்கிட்டே அந்தப் பெண்ணுக்கு கொடுத்து விட்டு, என்னை ஒரு பார்வை பார்த்தாங்க பாருங்க!

அமைதியா, காரில திரும்பும் போது சொன்னேன். நமக்கு மனசு இளசு தான், உடல் காமிச்சுக் கொடுத்துருது இல்லன்னு. என்ன நடந்திருக்கும்ன்னு யோசிச்சுப் பாருங்களேன்!