இன்னிக்கு லால்குடி விஜயலக்ஷ்மி மற்றும் உஸ்தாத் சாகித் ஃபர்வேஸ் கானின் ஜுகல்பந்திக்கு போய்ட்டு வந்தோம்.
இரண்டு மணி நேரம் போனதே தெரியலை.
அதுலையும் பண்டிட் பத்ரி சதீஷ்குமாரின் மிருதங்கம், யப்பா அதகளம்.
ஹிந்துஸ்தானி ராக தாள லயத்துக்கு லால்குடி விஜியும் உஸ்தாத் ஃபர்வேஸ் சாகேப்பும் கையில் தாளம் போடறது அவ்வளவு perfect ஆக synchronize ஆவுது.
செம ட்ரீட் இன்னிக்கு!
வீடு திரும்பும் போது இரவு எட்டேமுக்காலானாலும் இன்னும் இருட்டலை இன்னிக்கு.
அம்மிணி திடீர்ன்னு இப்ப வாக்கிங் போலாமான்னாப்புல. இதென்ன புதுசா இருக்கு. ரைட்டு. இரண்டு பேரும் முக்கால் மைல் நடந்துட்டு வந்தோம். இருட்டிடுச்சு வேற.
இரண்டு பேரும் ஒரு வார்த்தை பேசாம நடந்து போய் வந்தோம்.
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Caminar en silencio suena nuestra melodía!
மே 20 2023
No comments:
Post a Comment