Sunday, March 12, 2023

அம்மா மாதிரி வாடா

கொஞ்ச நேரம் முன்ன மத்யமர்ல சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன் என்பவர் ராகு-கேது மேஷம்-துலாம் ராசியில் இப்ப சஞ்சரிப்பதன் பலன் சொல்லியிருக்கார் (மார்ச் 10 2023). இவர் பெயரை முன்பு அப்து பதிவில் பார்த்திருக்கேன். இப்போது தான் மார்க்கான் இவர் போஸ்ட்டுகளை முன்னாடி கொண்டு வர்றான்.

அம்மிணி மேஷம், ராசியில ராகு, என் ராசியில இப்ப கேது குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருக்கார். எங்க இரண்டு பேர் ராசிக்கும் இடையில தான் மத்த கிரகங்கள் கடந்த ஒரு வருடமாக இருந்துச்சு.

மத்யமர் போஸ்ட்ல அவர் எழுதியிருக்கிற மாதிரி தான் அம்மிணி தூள் கிளப்புறாப்புல. அந்த தைரியம் சக்தி வீராப்பு கொஞ்சம் நமக்கு இருந்தா நல்லாயிருக்கும்ன்னு நினைப்பேன்.

என்னை விட பையன் அவன் அம்மா மாதிரி எல்லா குணங்களும் பெற்று இருக்கக் கூடாதான்னு நினைப்பேன். ஆனால் அவன் என்னை மாதிரி, எல்லா குணத்திலும். தடங்கல் கஷ்டங்கள் எல்லாத்தையும் இப்பவே அநுபவிக்கறான்.

அவன்ட்ட எப்போதும் சொல்வேன்: அம்மா தான் நம்பர் ஒன், அதுக்கப்புறம் தான் நானெல்லாம் என்பேன். ஆனால் அவன் என் கிட்டத் தான் எல்லாத்துக்கும் முதல்ல வருவான். முதல்ல அம்மாட்ட கொடுத்துட்டு அப்புறம் என்கிட்ட வான்னு அனுப்பிருவேன் அவனை.

படிப்புல வேலையில அம்மா மாதிரி இருடா அப்ப தான் அம்மா மாதிரி மேலேப் போலாம்டான்னா அவன் பாதையே தனி. என் மாதிரியே தனி வழி.

அவன் சொல்றான்: அப்பா இந்த ஜர்னல்ல படிச்சேன். மிக கஷ்டமான ஆபத்தான நிலமையில ஒருத்தன் அவதிப்படும் போது கூட அமைதியாக இருக்கான்னா அதற்கு காரணம் அவன் ஜீன்கிட்டேர்ந்த வந்த காரணமாக இருக்கும்ன்னு போட்டிருக்கு. என் வேலையில அவ்வளவு மோசமானதைப் பார்த்திருக்கேன் dad. அப்ப என் கூட வேலை செய்யறவன்ட்ட இருக்கிற சலசலப்பு என் கிட்ட இல்லாம அமைதியாக situationஐ ஹேண்டில் பண்ண முடியுதுப்பா. அது எங்கேர்ந்து வந்திருக்குன்னு நான் சொல்ல மாட்டேன், கண்டிப்பாக அம்மாட்டேர்ந்து இல்லைங்கிறான்.

நம்ம குணம் அப்படியே அவன்ட்ட இறங்கியிருக்கு. படற கஷ்டங்களைப் பட்டு பக்குவமாயிடுச்சு எனக்கு, அதில் கிடைத்த படிப்பினைகளே ஒவ்வொன்றையும் அமைதியாக ஹேண்டில் பண்ண உதவுகிறது. அவனும் இப்ப என்னைப் போலவே பல கஷ்டங்கள் பட்டு பக்குவப்பட்டு வர்றான்.

அம்மா மாதிரி குணம் மற்றும் படிப்பு வந்தால் அம்மிணி போல் சிறப்பாக மேலே வர முடியும். அவன்ட்ட அதையே சொல்லி வருகிறேன்: அம்மா மாதிரி வாடான்னு.

அவரவர் கையில் தானிருக்கு.
நண்பனைப் போல் உரையாடும் மகனுடன்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Mi hijo es mi amigo!

No comments: