Sunday, March 12, 2023

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 21

சின்ன வயசுல நாலு பக்கம் எழுத தரையில எங்க வேணா உட்கார்ந்து உருண்டு புரண்டு எழுத முடிஞ்சுச்சு.

இப்ப போன வாரம் சர்ச் கிளாஸ்ல நடந்த பாடத்தை ஸ்பானிஷ்ல எழுதிப் பழகலாம்ன்னா, தரையில உட்கார்ந்து எழுத முடியலை, சோஃபால உட்கார்ந்து எழுத முடியலை. ஒரு பக்கம் எழுத ஒரு மணிநேரமாவுது.

உடம்பு ஒரு அகலமான மேஜை நாற்காலியைத் தேடுது. வயசான காலத்துல பள்ளிக்கூடம் போனா படிக்கிறது எழுதறதுக்கு கூட உடம்பு உதவ மாட்டேங்குது. மனசு என்னமோ இன்னும் சின்னபுள்ளையாட்டம் படி படி எழுதுங்குது. இதற்காக ஒரு இடம் தேடனும்.

இளமையில் கல் முதுமையில் கல்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡No puedo sentarme en el suelo y escribir!

No comments: