Friday, December 25, 2020
டிசம்பர் மாத அலங்காரங்கள்
Wednesday, December 23, 2020
துலாபாரம் தடுமாறும் பொழுதில்
Thursday, December 17, 2020
தனிமையில்லை இவ்வுலகில்
Saturday, December 12, 2020
செயலற்று நின்ற பொழுதில்
Tuesday, December 8, 2020
உறங்கா தனிமையில் ஒரு நாள்
உறங்க உயிலா மனவலைகள் வகுடாய்
தூரதேசத்தில் ஒவ்வொன்றாய் நிழலாட
தொலைபேசி தொடர்புகளே உறவாடுது!
ஏற்றம் இறக்கம் வாழ்விலில்லை தனிமையே
பனிவிழும் சூழலில் புயலாய் மன ஓசைகள்
தொடர்ந்து வரும் நிகழ்வுகளுக்கு
வழி வகுக்கும் இயல்புகளின் திசைகரங்கள்!
எண்ணங்கள் சிதறாமல் செல்லுதல் கொடுப்பினை
வழித்தடம் வகுத்துக் கொடுக்கும் உறவுப்பிடிகள்
எக்கரையில் ஒதுங்கினாலும் மறுகரையில் பாசமாய்
வந்து செல்லும் பாதையில் தடையற்ற பயணம்!
உறங்கா தனிமையில் ஒரு நாள்!
புனர்வாழ்வு புனர்ஜென்மம்
Sunday, December 6, 2020
வேலைக்கான தகுதி எடைபார்த்தலில்
குழந்தைகளே ஆசிரியர்கள்
1987 ஜூலை 7ந்தேதி கடைசியாக தமிழகத்தை விட்டு கிளம்பியது. சேலத்திலிருந்து கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ்ல அப்பா அம்மாவோட ஏறி 10ந்தேதி கௌஹாத்தி வந்து இறங்கினோம். மூனு பேருக்கும் ஒரு வார்த்தை इिन्दि தெரியாது. அண்ணன் ஸ்டேஷன் வந்து கூட்டிப் போனதால தப்பிச்சோம்.
பக்கத்து வீடு சர்தார்ஜி குடும்பம். இரண்டு குட்டிப் பெண் குழந்தைகள், இன்னும் ஸ்கூலுக்கு கூட போகலை அது. வீட்டுல கணவன்-மனைவி பஞ்சாபியில பேசிகிட்டாலும், குழந்தைங்க கிட்ட ஹிந்தி தான் பேசுவாங்க. ஸ்கூல் போக ஆரம்பிச்சா அஸ்ஸாமி வேற கத்துக்கனும்.
அந்த இரண்டு குழந்தைகளும் தான் எனக்கு हिन्दि டீச்சர்ஸ். முதல்ல நான் கத்துகிட்ட வரிகள் ये (यह्) क्या है தான். இதைச் சொல்லிச்சொல்லியே அந்த குழந்தைங்களைத் துளைச்சு எடுத்து ஒவ்வொரு வார்த்தையாக் கத்துகிட்டேன். ஏதோ தப்பா சொல்லிட்டா வாசல்ல எச்சையைத் துப்பிட்டு ஓடிரும். तू मत करன்னு அதுங்க கிட்ட சொல்ல வராது! துப்பாதே துப்பாதேன்னு தமிழிலேயே சொல்லி சொல்லியே அதுங்க முதல் வார்த்தை து வை வைச்சு புரிஞ்சுக்கும்.
இப்ப அந்த குழந்தைங்க பெரிய யுவதி ஆகியிருக்கும். தொடர்பு இல்லாமப் போயிருச்சு! அசாமில இருந்த பிரச்சனைகளால சொந்த ஊர் அம்ரித்ஸர் போயிடுவேன்னாங்க. தெரியலை. தேடனும்.
அக்குழந்தைகள் நினைவில்
வாழ்வினிது!
ओलै सिरिय !
Tuesday, December 1, 2020
சுயமாய் செய்திடல் காலத்திற்கேற்ப
பல இடங்களில் பல க்ரூப்களில் சேமிப்பது, ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மண்ட் பத்தியெல்லாம் நிறைய க்ரூப்ல நிறைய பேர் பேசறாங்க!
நாம எவ்வளவு பேசினாலும் கொஞ்சம் யோசித்து செய்ய வேண்டியது அன்றைய சூழ்நிலையில் எந்த மாதிரி ஸ்டாக் வாங்கனும்ன்னு பார்த்து வாங்கினால் தான் ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும்.
மத்தவங்க சொல்லி வாங்கிப் போடலாம்ன்னு செய்யுற செயல்கள் அதிக பலனைத் தராது. எல்லோரும் சுயமாக யோசித்து, இன்றைய சூழ்நிலைக்கு என்ன வாங்கனும்ன்னு பார்த்து வாங்கினால் தான் லாபம் பார்க்க முடியும்.
ஒபாமா வந்த காலத்துல அவர் புது ஹெல்த்கேர் பிளான் கொண்டு வரப்போறேன்னார். அந்த சமயத்துல ஹெல்த்கேர் ஸ்டாக் அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட்ல இன்வெஸ்ட் பண்ணவங்க இன்று 300-500% சம்பாதிச்சுருக்க வாய்ப்பிருக்கு.
ட்ரம்ப் வந்தப்ப முதல்ல இன்ஃப்ராஸ்டர்க்ச்சர், பார்டர்ல சுவர் எழுப்பறதைப்பத்தி தான் அதிகம் பேசினார். அந்த கட்டத்துல கேட்டர்பில்லர், ஜான் டியர் போன்ற கம்பெனிகளின் ஸ்டாக் வாங்கியிருந்தா டபுள் ஆகியிருக்கும்.
இன்றைய கொடுநோய் கொரோனா காலத்துல ட்ரம்ப் அதிகம் கவனம் செலுத்தியது செலவழித்தது எல்லாம் கொரோனாக்கு தடுப்பூசி, சுவாசத்திற்கு வென்டிலேட்டர் போன்றவற்றில் தான். அதைத் தயாரிக்கும் கம்பெனிகள் ஸ்டாக் மற்றும் ஃபார்மசிகள் ஸ்டாக் மற்றும் ஹெல்த்கேர் ஸ்டாக்கில் இன்வெஸ்ட் பண்ணும் போது மட்டுமே அதிகம் சம்பாதிக்க முடியும்.
மேலும் இந்த கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டிலிருந்தே படிக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் வரும்போது, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், கம்யூனிகேஷன் டெக்னாலஜி ஸ்டாக்குகள் ம்யூச்சுவல் ஃபண்ட்ஸும் தான் பலன் கொடுக்கும்.
அடுத்து வரும் பைடன் ஆட்சியில் அவர் எதில் அதிக கவனம் செலுத்தப்போகிறார் என்று தெரிந்து கொண்டு இன்வெஸ்ட் செய்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும்.
மற்றவர்கள் சொல்லி வாங்குவதும் சரி. கொஞ்சம் சுயமாக சிந்தித்து நாமே வாங்கி விற்பது அதிக பலனீட்டும்.
முயல்பவற்களுக்கு வாழ்வினிது!