புதிதாக ஒரு நண்பர் அறிமுகமானார். பார்க்க நம்ம விட கொஞ்சமே வயசானவர் மாதிரி இருந்தார். நானும் நல்ல மரியாதையுடனே பேசி வந்தேன். அவருக்கு முடி அதிகம் போயிட்டுது. தடித்த முகம், பழக மிக நல்ல மனிதர். எப்போதும் மரியாதையாவே பேசுவார். இரண்டு மூணு வாரம் நன்கு பேசிட்டிருந்தோம்.
இந்த வாரம் சந்திக்கும் போதும் நாங்க நல்லா பேசிக்கிட்டிருந்தோம். அவருக்கு ஒரு போன் வந்து தள்ளிப் போய் பேசிவிட்டு வந்தார். அரைகுறையாக காதில் விழுந்தது. திரும்பி வந்து மரியாதையாகவே குனிந்து நிமிர்ந்து பேசும் போது நன்கு புரிந்து விட்டது, நமது வயசுக்கு மதிப்பு கொடுக்கிறார்ன்னு. வணக்கம்னே!
சமீபத்தில் நண்பர்கள் வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தனர். இன்னும் மூன்று family வருவதாகச் சொல்லியிருந்தனர். போகும் வழியில் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், வீடு நிறைவாக இருக்கும் என்று மனைவியிடம் பேசிக் கொண்டு காரில் பயணத்திருந்தோம்.
நண்பர் வீடு அடைந்தவுடன் வந்தவர்களை அறிமுகப் படுத்தினர். ஒரு இளம்பெண் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தது. எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அந்தப் பெண் என் மனைவியிடம் 'ஆண்ட்டி! அந்தக் காய் கொஞ்சம் எடுத்துப் போடறீங்களான்னு' கேட்டது. என் மனைவிக்கு முகமே மாறி விட்டது. கையிலிருந்த தட்டு கீழ இறங்கிட்டது. சிரிச்சுக்கிட்டே அந்தப் பெண்ணுக்கு கொடுத்து விட்டு, என்னை ஒரு பார்வை பார்த்தாங்க பாருங்க!
அமைதியா, காரில திரும்பும் போது சொன்னேன். நமக்கு மனசு இளசு தான், உடல் காமிச்சுக் கொடுத்துருது இல்லன்னு. என்ன நடந்திருக்கும்ன்னு யோசிச்சுப் பாருங்களேன்!
7 comments:
ஒரு 55 வயசு அம்மா ஒரு 33 வயசுப்பெண்ணை ஆண்ட்டின்னு கூப்புட்டதைவிட இது தேவலை இல்லையா:-))))))
:-))
மனத்துக்கு மூப்பு இல!!
I am unable to guess.please explain
kalakarthik
இப்ப எல்லாம் ரெண்டே உறவுகதான் அங்கிள் ஆண்டி ..
@பழமை. நமக்குத் தெரியுது. உடலுக்குத் தெரிய மாட்டேங்குது. :-)
@பொன்னியின்செல்வன். :-) ஆஹா எம்புட்டு சந்தோசம்ல. :-)
@கார்த்திக். :-)
என்ன கொடும சரவணா!
Post a Comment