ஜனநாயகத்துல முக்கியமானது ஓட்டு போடுவது. ஓட்டு போட்ட பிறகு யாரு ஜெயிப்பாக யாரு தோற்கனும்ன்னு தாயகட்டை உருட்டறது ஒரு சுகம். என்ர சுகம் தேர்தல் அன்னிக்கு தேர்தல் அதிகாரியாகப் போய் மக்களுக்கு உதவுவது.
இந்த தடவையும் எங்க ஓட்டுச்சாவடியில தேர்தல் அதிகாரியாகப் போனேன். முதல்ல மொத்த சாவடிக்கு chiefஆகப் போறயான்னு கேட்டாங்க. முன் அனுபவம் இல்லைன்னு அவங்க கிட்டு சொல்லிட்டு, கொடுத்தால் சரி செய்யறேன்னேன். நம் கீழ 10-12 எலக்ஷன் அதிகாரிகள் வேலை செய்வார்கள். வேற ஒருவர் கிடைத்ததால், நான் இப்ப கொடுத்திருக்கிற வேலையைச் செய்தாப்போதும்ன்னுட்டாங்க. இதுக்கு முன்னாடி எலக்ஷ்ன்ல நீ வேலை செய்தப்ப இருந்த ஒரு சீஃப் ஜட்ஜ் உன்னை ரெகமண்ட் பண்ணியதால் உன்னைக் கேட்டோம்ன்னாங்க.
ஆனால் பாருங்க, இந்த சந்திராஷ்டமம் அன்னிக்குப் போய் இந்த வேலைக்குப் போனால் சந்திராஷ்டமம் சும்மா இருக்குமா!
அம்மிணி விடியற்காலையில் என்னை ஓட்டுச்சாவடியில் விட்டு விட்டு தான் ஓட்டு போட வரிசையில் நிற்க,
6.30 மணிக்குத் திறந்த ஓட்டுச்சாவடியில் வந்த முதல் ஆளே என்கிட்ட வந்த ஆளு செமையா பிடிச்சு வெளுத்து வாங்க, அம்மிணிக்கு ஒரே ஆச்சரியம், பயம். அம்மணி உள்ள வந்ததைப் பார்த்தேன், ஆனால் எப்ப வெளியப்போனாப்புலன்னு பார்க்கக் கூட நேரமில்லை. சந்திராஷ்டமம் வெளுத்து வாங்குறான் மனுசன்.
பத்து வருசமாக ஓட்டுச்சாவடிக்கே வராத மனுசன், கடைசியாக ஓபாமா காலத்துல ஓட்டு போட்ட ஆளு, நேத்து வந்து எங்கடா என் ஓட்டுன்னு கேட்க, அவனுக்கு உதவிய அதிகாரிகள் என் கிட்ட அனுப்பிட்டாங்க. மனுசனுக்கு சக்க கோவம்.
காலையில 6.30 மணி, முதல் ஆளு என் கிட்ட, சந்திராஷ்டமத்தின் உக்ரத்தோட, எங்கயா என் பேருன்னு கேட்க, எல்லாம் வெளிறிப்போச்சு எனக்கு.
எலக்ஷன் கமிஷன் ஆபீஸுக்கு முதல் ஆளா போன் பண்ணி, இந்த ஆளுக்கு என்ன பண்ணன்னு கேட்டு, எலக்ஷன் சட்டப்படி அந்த ஆளுக்கு ஓட்டு போட உதவி செய்யறதுக்குள்ள அடுத்த இரண்டு பேரை என் கிட்ட அனுப்பிட்டாங்க! என்னடா இன்னிக்கு விட்டு வாங்கப்போவுதுன்னு நினைச்சேன்.
மற்ற அதிகாரிகள் என்னைப் பரிதாபமாகப் பார்க்க, அதுக்குத்தான் நாங்க அந்த வேலையை நாங்க எடுத்துக்கிறதில்லைன்னு எனக்கு அவங்க அறிவுரை சொல்ர மாதிரி சொல்ல, வாழ்க்கையில எவ்வளவோ சந்திராஷ்டமங்களைப் பார்த்து நிந்தனைகளை எதிர்கொண்டு வந்தவனுக்கு இதெல்லாம் ஜுஜுபியா!
இந்த தேர்தலில் எவ்வளவு அநுபவம். ஓட்டுச்சாவடிப் பக்கம் பத்து பன்னிரெண்டு வருசமா வராதவங்கெல்லாம் (மூனு கேஸுக்கு மேல) ஓட்டுச்சாவடி பக்கம் வந்து ஓட்டு போட வர்றாங்க!
அனைவருக்கும் உதவுவதே ஒரு ஜனநாயகக்கடமை!
ஜனநாயக கடமையாற்றிய ஒரு நிறைவோடு!
No comments:
Post a Comment