அமெரிக்க தேர்தல் 2020
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அதிபர், செனட், காங்கிரஸ் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கவர்னர் முதல் மாநில பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து இப்போது ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. இன்றைய pandemic காலகட்டத்தில் இது மாதிரி ஒரு தேர்தலை நடத்துவது எளிதான காரியமில்லை. நடத்தியதே ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி.
நடந்து முடிந்த தேர்தல் பல உலக நாடுகளுக்கு இது ஒரு மிகப்பெரிய பாடமாக, உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களை விட இந்த தடவை மிக அதிக அளவில் மக்கள் ஓட்டளித்துள்ளனர். கடந்த 10-12 வருடமாக ஓட்டு போடாதவர்கள், மற்றும் தேர்தல் பற்றி இதுவரை கவலைப்படாத பல இளைஞர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு ஓட்டளித்துள்ள ஒரு மிகவித்தியாசமான் தேர்தல் இது.
முதலில் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் கிடைப்பதே அரிதான சூழ்நிலையாக மாறிப்போன ஒன்று இந்த கொரோனா காலம். பெரும்பாலும் ரிடையர் ஆன வயதானவர்களே தேர்தல் நடத்த உதவுபவர்கள், இந்த தடவை அவர்கள் வரவில்லை. பல தேர்தல்களில் என்னுடன் அதிகாரிகளாக வேலை செய்தவர்கள் கொரோனா பயத்தில் வரவில்லை.
புதிய அதிகாரிகள் அநுபவமற்றவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ட்ரைனிங் ஆன்லைனில் மட்டுமே கொடுத்து ஒரு தேர்தல் வேலையில் இறக்கி, முறையான பாதுகாப்பு முறைகளை இக்கொரோனா காலத்தில் கடைபிடித்து நடத்துவது மிகப்பெரிய கடினமான வேலை. அதையும் மிகத் திறமையாக செய்துள்ளனர். வந்த பல புதிய அதிகாரிகளுக்கு கூட இருக்கும் அநுபவமுள்ள அதிகாரிகளே தேர்தலிடத்தில் பலவற்றை சொல்லித்தர வேண்டிய கட்டாயம்.
தேர்தல் அதிகாரிகள் கிடைக்காத பல இடங்களில் தேர்தல் சாவடிகள் குறைந்து போக இதுவும் காரணம். சிலர் நீண்ட க்யூ, திட்டமிட்டு தேர்தல் சாவடிகள் குறைப்பு என்று கருதுகின்றனர்.
இதுவரை நடந்த தேர்தல்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு குறைந்தது 3 மணி நேரம் நேரில் ஒரு வகுப்பில் ஒரு ட்ரைனர் முன் நடந்தது. என்னைப்போன்றவர்களுக்கு 6 மணி நேர இரண்டு பகுதி ட்ரைனிங். இவையனைத்தும் இந்த கொரோனா காலத்தில் சாத்தியமில்லாமல் போய்விட்டது. அந்த 3 மணி நேர 6 மணி நேர ட்ரைனிங் எல்லாம் இப்ப ஆன்லைன் மூலம் மாற்ற வேண்டியதாகிவிட்டது.
பல தொலைதூர countyகளில் மிகவேகமாக இயங்கக்கூடிய இன்டர்நெட் வசதி இன்றும் சில ஊர்களில் இல்லை. அந்த ஊர்களில் பகுதிகளில் ட்ரைனிங் நேரில் கொடுக்க முடியாத சூழ்நிலை சில countyகளில்.
தேர்தல் சாவடியில் குறைந்தபட்சம் டேபுள் துடைக்க ஆள் வேண்டுமானாலும் அவர்கள் குறைந்தபட்சம் 3 மணிநேரம் ட்ரைனிங் எடுக்கனும். இது உதாரணத்திற்குச் சொன்னாலும் அனைத்து அதிகாரிகளும் எல்லா வேலையும் செய்யனும். கதவு இடுக்குகளைத் துடைப்பது, ஓட்டு போடும் இடங்களை ஒவ்வொருத்தரம் வந்து போன பிறகு ஒவ்வொரு டேபுள் நாற்காலியையும் சானிடைஸ் பண்ணனும். சாதாரணமாக ஏழெட்டு பேர் வேலை செய்யும் சாவடியில் இந்த தடவை 10-12 பேர் வேலை செய்தனர்.
நெருங்கிய மக்கள் தொகை இருக்கும்இடத்தில் சாவடிகள் கம்மி என்று குறைகூறுவது சுலபம். வேலை செய்ய ஆட்கள் தேவை. ட்ரைனிங் எடுத்தவர்கள் மட்டுமே தேர்தலில் வேலை செய்யமுடியும் என்பது சட்டம். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இந்த 3-6 மணி நேர ட்ரைனிங் அவசியம் என்பதும் சட்டம்.
ஓட்டு போட வரும் ஒவ்வொருவருக்கும் மாஸ்க் மற்றும் பேனா ஒருத்தர் எடுத்துக் கொடுக்கனும். அதை மக்கள் கீழே போடாமல் அவர்களை எடுத்துச் செல்ல வைக்கனும். இல்லாவிட்டால் அவற்றை முறையாக எடுத்து குப்பையில் போடனும். இதுவரை நடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் எலக்ஷனில் வேலை செய்யும் ஆட்களுக்கு/அதிகாரிகளுக்கு டபுள் மடங்கு வேலை. ஆட்கள் குறைவு கூட.
போஸ்டல் ballot பற்றி அடுத்த வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment