அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 5
தேர்தல்ல வேலை செய்யறப்போ பொதுவாக எந்த அரசியல் கட்சி பத்தியோ, தங்கள் கட்சி சார்பு பத்தியோ எதுவும் பேசிக்க மாட்டோம். பேசக்கூடாது கூட. மேலும் இந்த தேர்தல்ல கட்சி சார்ந்த பார்வையாளர்களே (observers) நேரில் poll place உள்ளே இருந்ததால் யாரும் தன் வேலையைத் தவிர வேற எதுவும் பேசலை.
தேர்தல் முடிஞ்சு டேபுலேட்டர் கவுண்ட் முடிச்சு எல்லாம் க்ளோஸ் பண்ணிய பிறகு, ஒருத்தருக்கொருத்தர் நன்றி சொல்லி, polling place எல்லாம் க்ளீன் பண்ணி, விடைபெறுகிற நேரம், அதிகாரிகளில் ஒருத்தர் நடுவுல மேடைப்பேச்சு பேசற மாதிரி வந்து நின்னார்.
இது தான் அவர் முதல் தடவையாக எலக்ஷன் ட்யூட்டி பார்க்கிறது. புதுசா என்ன சொல்லப்போறார்ன்னு வேடிக்கைப் பார்த்தோம். எங்க பிரிசின்கட் ரிசல்ட் பார்த்து கொஞ்சம் மனசுடைஞ்சுட்டார்ன்னு சொல்லலாம். ஆனாலும் பெருமையாக ஆரம்பிச்சார்.
வெடரன் காங்கிரஸ் மேன் மறைந்த ஜான் லூயிஸ் போன்றோர் நடத்திய அந்த வாஷிங்க்டன் நடைபயணத்தில் கலந்துகிட்ட இரண்டு வெள்ளை இனத்தவர்களில் இவரது அப்பாவும் ஒருவராம். அப்போது இவருக்கு 1 1/2 வயதாம், அதனால் மார்ட்டின் லூதர் கிங்கை சந்தித்தது நினைவு இல்லையாம், ஆனால் அவர்களிடமிருந்து இவரது அப்பா பாராட்டு பெற்றதை அன்று நினைவுகூர்ந்தார். நாம் இந்த நாட்டில் இத்தகைய பாரம்பரியத்தோடு வந்துள்ளோம், ஆதலால் இந்த எலக்ஷன்ல உங்களோடு வேலை செய்தது எனக்கு மிகப் பெருமையாக இருக்கு, இன்று என் பிறந்த நாள் கூட.
எல்லோரும் பிறந்த நாளுக்கு லீவு எடுத்து எங்கோ விடுமுறைக்குப் போவாங்க! ஆனால் என் பிறந்த நாளை இந்த 14-15 மணி நேரம் உங்களோடு தேர்தலில் பணியாற்றியதையே பெருமையாக நினைக்கிறேன்னார்.
எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்து சொன்னோம். சிலர் MLKவை நேரில் பார்த்தீங்களா என்றனர். எனக்கு அப்ப 1 1/2 வயசு ஞாபகமில்லை, ஆனால் என் அப்பா அவரோடு குடும்பத்துடன் கலந்து கொண்டது என்றார்.
மேற்கொண்டு எந்த அரசியலும் பேசக்கூடாதுன்னு நினைவுபடுத்திகிட்டு எல்லோரும் 14 மணி நேர வேலையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பினோம்.
இப்ப எல்லோரும் ஈமெயில் மூலம் நன்றி சொல்லிக்கும் போது இன்னொருவர் என் பெயரைக்குறிப்பிட்டு இந்த தனிப்பட்ட வேலையை கற்றுக்கொள்ள நான் உதவியதற்கு நன்றி சொல்லும் போது நம் கடமையை நாம் செவ்வனே செய்தது நிறைவு தருகிறது.
No comments:
Post a Comment