கண்ணாடி ஜன்னலின் வழி வரும்
சூரியக்கதிரின் சூடு தரும் சுகம்
பின் சூழலில் புன்னாகவராளி
இசை தரும் ஒரு தனி சுகம்!
உறையும் குளிரில் பகலவனின் சூடு இதம்
லஜ்ஜையின்றி சூட்டில் உறங்கும் சுகம் தனி
வெயிலைக் கண்டு குளிரிலிறங்க
மனமின்றி மறுக்கும் உடல் தனி சுகம்!
குளிர்கால சோம்பலில்
மடங்கிக்கிடக்கும் தனி சுகம்
கை கால் அசையாமல்
வாய் கொறிக்கத் தேடும் தனி சுகம்!
சோம்பலில் உழைக்க மறுக்கும்
வலிந்த உடல் தனி சுகம்
அவையின் திசை நோக்காமல்
வெயிலில் உறைவது தனி சுகம்!
தனி சுகம் தரும் ஒரு நாள்!
No comments:
Post a Comment