Sunday, January 10, 2021

நிதானம் அவசியமாம்

 இரவு தூங்கப் போகும் போது சங்கடங்கள் வந்தால் என்ன செய்ய!

பையனுக்கு புதிதாய் வாங்கிய மேக் ஏர் எப்படி இருக்கு பார்க்கலாம்ன்னு பையன் வெளிய போனவுடனே அதை எடுத்து நோண்ட ஆரம்பிச்சேன். வந்தா என்னோடத ஏன் எடுத்தேன்னு கத்துவான், அதுக்குள்ள ஒழுங்கா வச்சிரலாம்ன்னு எடுத்தேன்.

இரவு லேட்டா வந்தவன் தன் ரூமுக்குப் போயிட்டு ஷாக் அடிச்சவன் மாதிரி திரும்பி வந்து என் லேப்டாப்ஐத் தொட்டது யாருன்னு கத்தினான். அவனுக்குத் தெரியும் என்னைத் தவிர யாரும் செய்ய மாட்டாங்கன்னு.

என்னடா ஆச்சுன்னு கேட்டா, புத்தும் புது மேக் freeze ஆகி லாகின் ப்ராம்ப்டே வரலை. பிளான்க் ஸ்க்ரீன் நிக்குது. என்ன பண்ணினேன்னான்.

ஒன்னுமில்லைடா, ஒரு சிஸ்டம் அப்டேட் இருந்துச்சு அதை ஆன் பண்ணிட்டு வந்தேன்டான்னேன். 

அதைத்தான் செய்யக்கூடாது அது freeze ஆவுதுன்னு எல்லாம் சொல்றாக, இந்த புது எம்1 பிராசஸர்க்கு சரியான அப்டேட் வரலை இன்னும்ன்னு உன்கிட்ட சொன்னேனா இல்லையான்னான்.

அவன் சொன்னதுகப்புறம் தான் அது ஞாபகத்துக்கு வருது.

அவ்வளவு அப்ளிகேஷன்ஸ் டைப் பண்ணி வச்சுருக்கேன், ஏகப்பட்டது திறந்து வச்சுருக்கேன், இப்படி freezeஆகி நிக்குது உள்ளயே நுழைய முடியலைன்னு, ஒரே கிலி அவனுக்கு, என் மேல சக்க கோவம். நொக்கேஸ்தாரு விழியால.

கோவத்துல அதைத் தூக்கிப்போட்டிருவானோன்னு பயம் எனக்கு. அம்புட்டு துட்டும் நட்டமாயிரும்ன்னு கவலை. அவன் இவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணின அப்ளிகேஷன்ஸ் என்ன ஆகுமோன்னு கவலை. சேவ் ஆகிருக்கும், பேக்கப் இருக்கும். இருந்தாலும் அந்த கவலையில மனசு துவண்டுருச்சு.

லேப்டாப் என் கிட்ட கொடு நான் பார்க்கிறேன்னேன். கடுப்புல கொடுத்தான்.

எல்லா பட்டனையும் தட்டிப் பார்த்தேன். வேலைக்காவல. எப்3 பட்டன் தட்டனிப்ப மல்டிஸ்க்ரீன் வந்துச்சு, தொட்டா மறுபடியும் ப்ரீஸ். என்னடா கொடுமைன்னு அரை மணி போராட்டம் இரவு 11 மணிக்கு மேல.

எப்படி unfreeze பண்றதுன்னு கூகுளாரைக் கேளுடான்னா, நீ கேளுன்னு பதில்.

இதையெல்லாம் பார்த்த அம்மிணி freeze.

கூகுளாண்டவர் வழி சொன்னார். அதைச் சொன்னேன். அப்படி ஒரு பட்டனே கிடையாதுன்னான்.

கூகுளாண்டவர் நம்பித் தானே நம்ம வாழ்க்கை ஓடுது. அதுபடியே செய்தேன்.

பாதியில நின்ன ஆப்பிள் அப்டேட் மறுபடியும் வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு. 

நிதான சுபாவம் புத்தியை freeze பண்ணாம விட்டதால், தூக்கம் போகாம தப்பித்ததால், பையனிடமிருந்து தப்பித்ததால்,

வாழ்வினிது
ओलै सिरिय !

No comments: