Tuesday, July 23, 2019

அழியாச்சுவடு

மணல் சுவடுகள் அடுத்த அலையில்!
மனச்சுவடுகள் இருட்டின் இருப்பில்!
காலச்சுவடுகள் தலைமுறை கையில்!
நம் சுவடு எவர் கையில்!

மணிலில் பதித்த சுவட்டில் எழுதும் தரவுகள்
மனதில் பூட்டிய இருளின் கதவுகள்
காலம் பூட்டும் சுவடுகள்
காத்திருக்கும் தரவுகளின் வழிச்சுவடுகள்!

விண்ணில் பதிக்கும் சுவடுகள்
காற்றில் பதிக்கும் தரவுகளாயின்
காலம் அளித்த சுவடுகள்
காற்றில் மறையும் தரவுகளாகும்!

பிறரின் இழிவில் உதிக்கும் சுவடுகள்
காற்றில் கரையும் தரவுகளாகும்
காலச்சுவட்டில் பதிக்கும் சுவடுகள்
கல்லில் பொறித்த சுவடுகள்!

பிறர் சுவற்றில் பதியும் சுவடுகள்
காலத்தின் அழியாத்தரவுகள்!
அன்பில் பதியும் சுவடுகள்
காலத்தின் அழியாச்சுவடுகள்!

நம் சுவடுகள் நமது பாதையில்!

2 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

சிறு ஓலையில் கவிதை எழுதிக் கலக்கினால் போதுமென்று இருக்கிறீர்களா? நலமா?

ஓலை said...

நன்றி கிமு சார்! நல்லாயிருக்கீங்களா? உங்க கமெண்ட் பார்த்து சந்தோஷமாக இருக்கு.

பேஸ்புக்கில் இதே பெயரில் காலம் ஓடுது இப்ப.
நன்றி சார்