ஆக்கி வைத்தேன் ஆறவில்லை
ஆறுவதற்கு சபையில்லை
ஏற்றமது கைவிட்டாலும்
காலில் சலங்கை சங்கமிடும்!
ஊட்டிய நெஞ்சில் உணர்வில்லை
மலையளவு மனதில் இறக்கமில்லை
கூட்டிய கோவிலில் பக்தனில்லை
கைகூப்பி எழுவோர் அமரவில்லை!
அவை ஒடுங்கி அமர்ந்தாலும்
அண்ணல் பேசும் கவியரங்கம்
கை ஒலி விண்ணைப் பிளந்தாலும்
கட்டிய கயிறு தள்ளி நிறுத்தும்!
என்னுள் ஒரு அண்ணல் கவி!
No comments:
Post a Comment