Wednesday, August 18, 2021

முன் செல்லும் பாதை நம் நெஞ்சின் சாரல்

 சாரல் விழுவதில் சாய்ந்திருந்தேன்

  கூவிய குரல் சாரலாய் விழுந்தது

குருவி திருப்பும் முகம் அதில்

  காண்பவன் கண்ணின் சாரலால்!


சாரலாய் விழும் கருணைகள்

  காட்டிய நம் மனதின் சுமைகளால்

ஊட்டிய கைகளால் கருணை கூடியது

   அதை உணர்வதற்கு சாரலாய் திமிலைகள்!


எட்டிய தூரம் ஏணிப்படிகளானாலும்

   தரையில் ஊன்றும் கால் தடுமாறினால்

சலனமற்ற சாரலாய் சறுக்கும் படிகள்

  கை எட்டிய தூரம் கை கூடுமோ!


முன் செல்லும் பாதை நம் நெஞ்சின் சாரல்!

  

No comments: