Saturday, August 14, 2021

விசையின்றி ஒரு திசையில்

விண்ணில் புக முடினும் 

  மண்ணுள் மலர்ந்திடலாம்

மனது தன் அலைதலில்

  இடம் தேடும் தனிமை இது!


என்னுள் ஒருவன் எனையே ஆட்டுபவன்

  தன்னிலை மறவாத தலைவன்

மனதில் இறுக்கத்தை நீக்க

  தேடுகின்ற போது காணான்!


எனையறியா செய்கையால் நிலைமாறினாலும்

  அசையும் படகு போல் கரை சேர

துடுப்பு தேடி புறப்படும் விசையில்

   அலையின் தவிப்பில் தனித்து நின்றேன்!


எனது பாதை எதுவாகினும்

  காலம் காட்டும் வழித்தடம்

அன்றும் இன்றும் என்றுமே!


விசையின்றி ஒரு திசையில்!

No comments: