நமக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்.
குளிச்சுட்டு சாப்பிடலாம்ன்னு தயாரானேன்.
வாசலில்வீ ட்டுக்கு வந்த தபால் எடுத்து வந்தேன். அதில் ஒரு அழைப்பிதழ்இ ருந்தது. ஆவலுடன் பிரிச்சுப் பார்த்தேன்.
அது ஒரு Funeral Homeலேர்ந்து வந்திருக்கு. மற்றவர்களோட இழப்புகளுக்குப் போன அதே funeral home லிருந்து. பக் ன்னுச்சு.
கையில செக்புக்கோட வர வேண்டாம். நாங்க மாதாந்திர தவணை எடுத்துப்போம்ன்னு சொல்லி விருந்துக்கு அழைப்பிதழ்.
உன் இறப்பிற்கு தயாராகிக்க. அதற்கு நாங்க உதவறோம்ன்னு ஒரு அழைப்பிதழ். தேவையானது தான். ஆனால் எதிர்பார்க்காத நேரத்தில், அதுவும் நேற்று கோவிலில் கிடைத்த பிரசாத்ததில் இன்னும் திளைப்பதிலிருந்து விடுபடாத நேரத்தில் இது ஒரு அதிர்ச்சி அலையாக.
எங்க போக எங்கிருந்து வரும்அ ழைப்பிதழ். அதுவும் என் பேர் போட்டு பிரிண்ட் அடிச்சு தனிப்பட்ட அழைப்பிதழாக வேற வருது! முருகா! தனிப்பட்ட பெயரில் என் பேர் போட்டு பிரிண்ட் அடித்து வரும் போது கொஞ்சம் ஆடிப்போச்சு.
வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்த ஓர் அழைப்பிதழ்!
வாழ்வினிது
ओलै सिरिय !
No comments:
Post a Comment