இடைஞ்சலாய் ஓரு நடைபயணம்
மாலையில் இரை தேடி வந்தவரை
மேலெழுந்து கிளையிலமர்ந்து
எனை நோக்கும் அக்கணப்பொழுதில்
தப்பிய அணிலும் முயலும்
பார்த்த பார்வையை நன்றியென ஏற்பதா!
அது
தேடும் படலத்தில் இடைஞ்சலானதால்
பசியால் வாடும் பாபமே
இவரது பார்வையா!
எதுவாயினும் இரைச்சலாய் ஓர் நடைபயணம்!
——
இரை தேடி வந்தவரை எனது மாலை நேர நடைபயணம் அவரை இடைஞ்சல் செய்ததால் மேலெழுந்து கிளையிலமர்ந்து என்னை நோக்கும் ஒரு கணப்பொழுதில்!
இவரிடமிருந்து அப்போது தப்பிய அணிலும் முயலும் என்னைப் பார்த்த பார்வை நன்றியுடனா, அல்லது இவரது உணவைத் தேடும் படலத்தில் இடைஞ்சல் செய்த இவரது பார்வையா!
எதுவாயினும்
வாழ்வினிது
No comments:
Post a Comment