Saturday, January 2, 2021

பழையன புதிதல்

 இங்கு வந்தப்ப சம்பளம் மாதம் 2500. அதுக்குள்ள தான் இருவர் வாழனும். அந்த காலகட்டத்துல லேப்டாப் மார்க்கெட்ல வரலை. எங்கும் டெஸ்க்டாப் தான். ஒரு சாதாரண எச்பி கம்ப்யூட்டர் 1800$. வாங்குற சம்பளத்துல 1800 போட்டு வாங்க இயலாது. பேங்க் லோன் அல்லது கிரெடிட் கார்ட் லோன்ல தான் சாத்தியம்.

எனக்காவது ஆபீஸ் டெஸ்க்டாப்ல காலம் ஓடிடுது. ஆனால் வீட்டுல இருந்த அம்மிணிக்கு கம்ப்யூட்டர் இல்லாம எதுவும் செய்ய முடியாத நிலை. ஏதோ காரணம் சொல்லி ஒரு வருடம் ஓட்டிட்டேன்.

எங்க ஊர் வழியாப்போன உறவுக்காரப்பையன் அவன் கார் நின்னதால என் அபார்ட்மண்டுக்கு வந்தான். வந்தவன்ட்ட அம்மிணி புலம்ப, அவன் போகும் போது அண்ணா நீ செய்யறது பெரிய தப்பு அது இதுன்னு திட்டிட்டுப் போயிட்டான். அவன் போன உடனே ரொம்ப வருத்தமாப் போச்சு. உறவுகளுக்கிடையில் நம்ம மானம் போகப்போவுதுன்னு உறைக்க ஆரம்பிக்க, கொஞ்ச நாளில் கம்ப்யூட்டர் வாங்கிட்டேன். அது கிட்டத்தட்ட 5-6 வருடம் ஓடிச்சு.

அந்த படிப்பினையிலிருந்து, ஒவ்வொரு தேங்க்ஸ்கிவிங் சேல்ஸ் அப்ப, ஸ்டேபுள்ஸ் ஆபீஸ்டிப்போ என பல கடைகளுக்குப் போய் அந்த சமயத்துல இவங்க ரொம்ப சீப்பாக கொடுக்கிற கம்ப்யூட்டர் பார்ட்ஸ் ஒவ்வொன்னும் 20, 25$க்குள்ள வர்றது எல்லாம் வாங்கி வைப்பேன். அதை வச்சு இருக்கிற சிஸ்டத்தை அப்கிரேட் பண்ணி பண்ணி காலத்தை ஓட்டிகிட்டிருந்தேன்.

இரண்டு மூனு வருசத்துல தேவையானது சேர்ந்த பாகங்கள் அதிகமாக, பழசு புட்டுக்க, இருக்கிற பார்ட்ஸ் வச்சு, பழைய மதர்போர்ட் எடுத்துபுட்டு புது மதர்போர்ட் பிரசாஸர் எல்லாம் மாத்தி 200-300க்குள்ள ஒரு டெஸ்க்டாப் பண்ணி அதை வச்சு கொஞ்ச காலம் ஓட்டிகிட்டிருந்தேன். 

லேப்டாப் மார்க்கெட்ல வர ஆரம்பிச்ச பிறகும் இது ஓடுச்சு, ஆனால் லேப்டாப் வாங்கி, அதை அப்கிரேட் பண்ணி ஓட்டறதுன்னே பிறகு காலம் ஓடிச்சு.

மூன்று வருடம் முன்ன வந்த தேங்கஸ்கிவிங் சேல் ல லேப்டாப் 200-225க்கு கிடைக்க எனக்கு ஒன்னு (8gb மெமரியோட) யூஸ் பண்ண, இன்னொன்னு 4gb தான், ஊர் போகும் போது உறவினர்க்கு கொடுத்தரலாம்ன்னு ஒரு வருசமா வாங்கி டப்பா ஓபன் பண்ணாம வச்சிருந்தேன்.  

அதை அம்மிணி தனக்கு வேணும்ன்னு எடுத்துக்கிட்டாப்புல. எடுத்து கிட்ட அன்னியிலிருந்து இது ஸ்லோவ் ஸ்லோவ்ன்னு தினமும் அதை யூஸ் பண்ணும் போதெல்லாம் கம்ப்ளைண்ட். 200$ க்குத் தர்றவன் என்னத்தைப் பெருசாக் கொடுத்திறப் போறான்.

போன வருசம் முழுதும் அதைக் கழட்டி எப்படி அப்கிரேட் பண்ணலாம்ன்னு ட்ரை பண்ணா, பின்னாடி மூடியைத் திறக்கவே வரலை. சரின்னு விட்டுட்டேன்.

இப்ப எல்லோரும் wfh ஆனதாலையும் சீனாவோட போடற சண்டையினாலும் எல்லா கம்ப்யூட்டர் விலையும் அநியாயத்துக்கு ஏறிருச்சு. பையனோட மேக்  புட்டுகிச்சு, என்னோடத எடுத்துட்டுப் போய் ஸ்கூல்க்கு உபயோகப்படுத்திகிட்டிருந்தான். தினமும் அந்த 8gbயும் ஸ்லோவ்ன்னு திட்டிகிட்டிருந்தான். இப்ப புது மேக் வாங்கிக் கொடுத்ததுக்கப்புறம் கம்பளைண்ட் இல்ல.

இந்த மூனு பழைய லேப்டாப்பும் எப்படி அப்கிரேட் பண்றது, திறக்க முடியலைன்னு நினைச்சேன். கடையில போய் கேட்டேன். மெமரிக்கு அமேசானை விட விலை ஜாஸ்தி மட்டுமல்ல, லேபர் விலையும் சேர்த்து ஒவ்வொன்னுக்கும் 100க்கு மேலச் சொன்னான். சரி ஒன்னு அம்மிணிது மட்டும் பண்ணிரலாம்ன்னு கொடுத்தேன். ஒரு வாரம் கழிச்சு டைம் கொடுத்தான். 

கடைசியா ஒரு வார்த்தை கேட்டேன், இதை ஏன் என்னாலத் திறக்க முடியலைன்னேன். மறைந்திருந்த ஸ்கூரூவைக் காண்பிச்சான். முடிந்தது கதை. பிறகு வர்றேன்னு வந்துட்டேன்.

அமேசான்ல மூனு லேப்டாப்க்கும் மெமரி ஆர்டர் பண்ணி மாத்தியாச்சு. அது மட்டுமல்ல எச்பி, இன்டல், ஏஎம்டி, ரேடியான் கிராபிக்ஸ் வெப்சைட் போய் எல்லாம் புதுசாடவுன்லோட் பண்ணி எல்லாம் அப்டுடேட் ஆக்கியாச்சு. பறக்குது இப்ப. இன்னும் 3-4 வருசத்துக்கு கவலையில்லை ஓடும்.

போன பத்து நாளா இதைத்தான் நோண்டி நோண்டி ஒவ்வொன்னா சரி பண்ணியாச்சு. நம்ம பீத்தல் சும்மாயிருக்குமா, அண்ணன்ட்ட பீத்த, அவனுதை அப்கிரேட் பண்றது அடுத்த பிராஜக்ட்.

வாழ்வினிது
ओलै सिरिय !

2 comments:

Venkatakrishnan said...

Recycling electronic items is important. Congratulations for your success.

ஓலை said...

நன்றி