கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 2
அப்பாக்கு பசங்க கேட்கிறத எப்பிடியாவது வாங்கிக் கொடுக்க முடியுமான்னு பார்ப்பார். அம்மா கறாரா முடியாது என்பாங்க. இந்த மாச budget ல பணம் ஒதுக்கல, முடியாதும்பாங்க. இல்லாட்டி வேற எது கட் பண்ணலாம்ன்னு யோசிப்பாங்க.
வீட்டு பக்கத்திலேயே சித்தப்பா, மாமா இருந்தாலும், அவர்களை கேள் என்றோ, அவர்களிடம் கடன் வாங்கி செய்வது என்றோ துளி கூட இருவருக்கும் பிடிக்காது. பிறரிடம் கடன் வாங்கினால் அவர்களிடம் அடிமையாகவோ, பணிந்து போக வேண்டிய நிலைமை யாயிடும் சாத்தியமில்லை என்று சொல்லி விடுவார்கள்.
தீபாவளிக்கு தீபாவளி மாமா செமையா பட்டாசு வாங்கித் தருவார். அது மட்டுமே.
பால் மற்றும் நெய் கடன் கூட சம்பளம் வந்த அந்த வாரமே முழுதும் கொடுத்து அடைச்சிருவாங்க. கலர் டிவி புதுசா வந்த போது கூட தனியார் யாரிடமும் கடன் வாங்காம, கம்பெனி தொழிலாளர் கூட்டுறவு வங்கியில கடன் வாங்கி சீக்கிரமே மாத budget ல போட்டு அடைச்சிட்டாங்க.
மாத செலவு போக பத்து சதவீதமாவாவது சேர்க்க முடியுமான்னு ரொம்ப யோசிப்பார் அப்பா. அம்மாக்கு நகை வாங்கிக்கணும் என்பது தவிர வேற எந்த எதிர்கால சேமிப்பு பற்றி ஒன்றும் தெரியாது. இதுக்காகவே நவாப்ஜான் நகைக் கடையில எப்பிடியாவது சீட்டு போட்டு பணம் கட்டிருவாங்க.
தீபாவளிக்கு மட்டும் எப்பிடியாவது ஒரு பட்டுப் புடவை வாங்கனும்ன்னு ரொம்ப ஆசைப் படுவாங்க. இரண்டு தீபாவளிக்கு வாங்கினா அடுத்த இரண்டு தீபாவளிக்கு நூல் அல்லது சுங்குடிப் புடவை தான். கல்யாணம் காட்சிகளுக்கு பழைய பட்டுப் புடவை தான். அழுக்கு படியாம தூசி படியாம வைச்சிருப்பாங்க. பழசு எதையும் விடாம பாத்திரக்காரனுக்குப் போட்டு பாத்திரம் வாங்கிடுவாங்க.
பக்கத்து வீட்டு Lambrador ஸ்கூட்டர் பார்த்து எங்களுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தி கடைசியில ஒரு 2nd hand சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். இரண்டு வருஷம் கழித்து யாரும் ஒட்டலைன்னு பார்த்தவுடன் வந்த காசுக்கு கொடுத்துட்டாங்க.
இவ்வளவும் ஏன் சொல்றேன்னா இதைத் தான் Dave தன் புக் ல சொல்றார். Budget இல்லாம வரவும் தெரியாது செலவும் தெரியாது. என்ன பண்ணனும் என்றே தெரியாது .
கடன் வாங்குபவன் கடன் கொடுப்பவனுக்கு அடிமையாகி விடுவான். சொந்த தாத்தா பாட்டியிடம் பணம் வாங்கி பீஸ் கட்டினா கூட நாளை அவர்களது ஏச்சு பேச்சுக்கு பணிய வேண்டியிருக்கும்.
யாரிடமும் கடன் வாங்காதே. கடன் வாங்கிக் கொண்டிருந்தால் எப்போது முழு கடனும் அடைப்பாய். தேவைக்கு மீறிய பொருட்களை வைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு கடன் அடைக்கனும்.
கடன் முழுவதும் அடைக்கும் வரை விடாது இதை செயல் படுத்த வேண்டும். எந்த புது கார் வாங்கினாலும் முதல் இரண்டு வருடத்தில் வீழ்ச்சி அடையும். நிறைய கடன் இருக்கும் போது புது வண்டி வாங்குவதில் அர்த்தம் இல்லை. மூன்று வருட பழையது தேவைக்கு ஏற்ற அளவுக்கு திறம்பட செயல் படும் என்கிறார் Dave.
இது என் பெற்றோரின் உண்மை வாழ்க்கை.
இங்கு என் அம்மாவின் சேமிப்பு முறை சீட்டு போடுவதில் இருந்தது. ஆனால் இது சரியல்ல என்பது என் நிலை. கண்டிப்பாக இதை பரிந்துரைக்க மாட்டேன். இதை ஒரு வங்கி deposit, mutual fund, insurance சேமிப்பு என்று எடுத்துக் கொள்ளவும்.
அடுத்த தொடரில் தொடர்கிறேன்.
(கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 1)

4 comments:
இருக்கிற கொஞ்ச நஞ்சத்தை எப்படி சேமிப்பில போடுறதுன்னு சொல்லிச் சொல்லுங்க.
உண்மையான சேமிப்பு பழக்கம் என்பது சிறுவயதிலேயே வந்திரணும்.. இதை பெற்றவர்கள் கற்றுக்கொடுப்பது அவசியம்.. தன்னுடைய காசைக்கொடுத்தாவது வங்கியில் போடச்சொல்லவேண்டும், அப்போதுதான் சேமிப்பின் அருமையும், பயனும் தெரியும்.. பழமையின் கேள்வியால் சொல்லத்தோன்றிய பதில்.. அவருக்கு பயனில்லை.
அடுத்ததுக்கும் வெயிட்டிங்...
உண்மைதான். சேமிப்பு பழக்கத்திற்காக என் ரெண்டு பெண்களுக்கும் தனியா அக்கவுண்ட் துவங்கி கொடுத்திருக்கேன். அவங்களுக்குனு வரும் என்ன ஒரு தொகையையும் அவங்க பேரில செக் கொடுத்து அவங்களையே பேங்க்ல போட சொல்லிடுவேன். எந்த ஊருக்கு போனாலும் 100 ரூபாய் தான் அவங்க பட்ஜெட் அதுக்குள்ள என்ன வேணாலும் வாங்கிக்க சொல்லிடுவேன். ஆனா அவங்க அதையும் வாங்காமல் கணக்குல சேர்த்திடுவாங்க.
Mathaji ! Super. Very nice pappu and varshu.
Post a Comment