Thursday, August 22, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி. இது தான் Dave Ramsey தன்னோட புக் மற்றும் டாக் ஷோ, பிற கோர்ஸ் கள்  மூலம் கட்டணத்துடன் சொல்லித்தருவது.

ஆனால் இவரது புத்தகத்தைப் படிக்கும் போது என் பெற்றோரின் 59 வருட திருமண வாழ்க்கை என் முன் வந்து நிற்கிறது.

இந்த தடவை ஊர் போன போது அம்மா மேல் வீட்டு உறவினர் உதவியுடன் தான் எழுதி வரும் வரவு செலவு கணக்கு புத்தகத்தை என் கையில் நீட்டிய போது ஒரு குற்ற உணர்வுடன் அதைப் பார்த்தாலும், அவர்களது சிறந்த வாழ்க்கை என் கண் முன் வந்து நின்றது. அப்போது இந்த ராம்சே புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கவில்லை.

அப்பா ஏழாவது கூட பாஸ் பண்ண வில்லை. அம்மா பள்ளிக் கூடம் போனதில்லை. இன்றும் கூட ஒரு கடன் இல்லாமல் தன் வரவு செலவு கணக்குகளை எழுதி வரும் போது அதில் அவர்களது மாதாந்திர strength அண்ட் weakness புரிந்து செயல் படுவது  இன்றும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

நான் பிறந்து வளர்ந்த அந்த வீட்டை முன்பு பிளஸ் ல் பகிர்ந்திருந்தேன். சிறு வயதில் நான் பார்த்த வரை அந்த வீட்டில் நடமாடியவை இன்றும் நினைவுக்கு வருகிறது.

மாத சம்பளம் வருவதற்கு முதல் நாள் இரவு அப்பாவும் அம்மாவும் சேர்ந்து அந்த மாத budget போடுவார்கள். அம்மா, கட்ட வேண்டிய வீட்டு லோன், வாடகை வரவு,  பால் கணக்கிலிருந்து ஒவ்வொன்றாக சொல்லி வர, அப்பா ஒரு notebook ல் எழுதிக் கொண்டே வருவார். அந்த மாதம் வரும் பண்டிகை அல்லது எதிர்பார்க்கும் திவசம் செலவு வரை இருக்கும்.

அப்பாவின் சம்பளம் குறைவாக இருந்தாலும், அது ஒரே அளவு தான்.  இருந்தாலும் மாத budget இருவர் கையிலும் இப்ப. சாலரி வந்தவுடன்அப்பா cheque கொடுக்க வேண்டியது போக மீதி தொகையை அம்மாவிடம் cash ஆகா கொடுத்து விடுவார். பிறகு மாதம் முழுவதும் அம்மா administration தான்.

முதலில் கொடுக்க வேண்டிய சிறு சிறு கடன்களை, சீட்டுகளை, பால்காரர்க்கு கொடுப்பதெல்லாம் கொடுத்து விடுவார்கள். கையில் budget இல் எழுதியது தவிர மீதிக்கு எதிர்பாராத செலவிற்கு ஒரு தொகை வைத்திருப்பார். திடீர் உறவினர் வருகையெல்லாம் இதில் சமாளித்து விடுவார். சினிமாக் கொட்டகையில் நாங்க தரை டிக்கெட். வந்த உறவினருக்கு மேல 2nd கிளாஸ் அல்லது 1st கிளாஸ் டிக்கெட் கொடுத்து சரி கட்டிவிடுவார்.

ஒவ்வொரு இரவும் அன்று தான் செய்த செலவை எங்களிடம் சொல்லி அந்த வரவு செலவு கணக்கு புத்தகத்தில் எழுதச் சொல்வார். ஒரு வாரத்தில் அப்பாவிடம் வந்து total போடச் சொல்லி தன் கையில் மீதியுள்ளதை சரிபார்த்துக் கொள்வார். இவர்கள் budget ல் துண்டு விழுவதை துல்லியமாக அறிந்து கொள்வார்கள். சரி செய்ய எதை குறைத்துக் கொள்ள வேண்டும் எதை வாங்கக் கூடாது என்று அப்போது முடிவாகி விடும்.

இதென்ன பெரிய விஷயம் என்கறீர்களா. Dave Ramsey சொல்லித் தருவது இதோ மேலே உள்ள என் அப்பா அம்மாவின் வாழ்க்கை முறையை. இதை தான் முதல்லிருந்து முதல் ஆறு சாப்ட்டர் களில் கவர் செய்துள்ளார்.

கல்லூரி படிப்பற்ற இவர்கள் வாழ்க்கையை இப்போது அலசிப் பார்க்கிறேன்.

மீதியை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

5 comments:

vasu balaji said...

குட்:)

பெம்மு குட்டி said...

அளவுக்கு அதிகமா ஆசைப்படாம இருந்தாலே இப்படி இருக்கலாம்ன்னு தோணுது ..... நாம தான் எந்த பொருட்களையும் உபயோக்கிக்காட்டியும் வாங்கி வாங்கி வீட்டை நிரப்புறோம்மே ;-((((

க.பாலாசி said...

ஒவ்வொரு மாசமும் கடைசியில ஒரு திட்டமிடல் இருக்கத்தான் செய்யுது.. ஆனாலும் முதல் அஞ்சி தேதிக்குள்ளாரையே எல்லாம் சொதப்பிடுது.. அனுபவம் பத்தல... தொடருங்க..

விஜி said...

நானும் தினம் கணக்கு எழுதிடுவேன். அதனால பெரிய அனாவசிய செலவுகள் கண்டிப்பா தவிர்க்கபடுது, சிக்கனம் எவ்வளவு முக்கியம்னும் தெரியுது

priyamudanprabu said...

good