கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 3
தினசரி அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட கடன் வாங்கிற நிலைமையிலத் தான் நாமிருக்கிறோம் என்கிற நிலை வரும் போது வருமானத்தை உயர்த்த வேண்டிய வழி முறைகளைத் தேடுவது தவிர வேறு வழியில்லை. பார்ட் டைம் வேலைகள் மூலம் கொஞ்சம் உயர்த்த முடியும்.
அப்பா 1986 ல் ரிடையர் ஆனார். 1970லிருந்து பார்ட் டைம் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார். பக்கத்திலுள்ள லேடீஸ் கிளப்பில் கணக்கர் ஆக சேர்ந்தார். மாதம் 70 ரூபாய். அவருடன் வேலை பார்க்கும் இன்னொருவர் மாலை வேளையில் சோடா கடை வைத்தார். அவர் மகன் என் அப்பா லேடீஸ் கிளப் ல் வேலை செய்வதை கிண்டல் செய்வான். கண்டுக்க மாட்டேன். வீட்டைப் பற்றிய புரிதல் உள்ளவர்கள் எதற்கு கவலைப் படனும்.
82களில் அதை 100 ஆக்கிக் கொடுக்குமாறு கேட்டுப் பார்த்தார். முடியாது என்று சொல்லி விட்டு ஓரிரு மாதங்களில் 90 ஆக்கினார்கள்.
அலுவலகத்தில் கிடைக்கும் ஓவர் டைம் வாய்ப்பை விட மாட்டார். கான்டீன் காபி யை விட அம்மா கொடுத்து விடச் சொல்லி நாங்கள் கொண்டு போவது கொஞ்சம் சூடு ஆறிப் போயிருந்தாலும் ஒன்னும் சொல்லாமல் குடிப்பார். இந்த எக்ஸ்ட்ரா வருமானம் அம்மாவின் தீரா ஆசையான நகைக்கடை சீட்டு மற்றும் பலவற்றிற்கு உதவியது.
அத்யாவசியப் பொருட்களுக்காக கடன் வாங்க வேண்டிய நிலைமையை நாங்கள் சந்திக்க விடாமலே செய்து விட்டனர். Dave ராம்சே யும் இதைத் தான் சொல்கிறார். கடன் அடைக்கும் வரை வாரத்திற்கு 60 மணி நேரம் வரை வேலை செய்ய நேர்ந்தாலும், குறைந்தது இரண்டு மூன்று வருடங்களுக்கு கடன் தீரும் வரை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
கடன் அடைப்பது மட்டும் குறிக்கோள் அல்ல. வருங்கால சேமிப்பைத் தொடங்க வேண்டும். அது கடன் தீரும் வரை பார்ட் டைம் வேலை செய்யுங்கள் என்கிறார்.
கடன் வாங்குவதை நிறுத்துங்கள். கடன் அடையுங்கள். அடைத்த பின் கடனிற்கு கட்டிய அத்தனைப் பணமும் சேமிக்க முடியும். ஒரு இடத்தில் Dave சொல்கிறார். உங்களது கம்பெனி யில் ரிடயர் மன்ட் saving பணத்தில் கம்பெனி மாட்சிங் 3 பெர்சென்ட் இருந்தாலும், முதலில் 10 பெர்சென்ட் மேல் வட்டி இருக்கும் இடத்தில் முதலில் கடன் அடையுங்கள் என்கிறார். பிறகு கம்பெனி கொடுக்கும் அந்த 3 பெர்சென்ட் க்கு சேமிக்கலாம். 15 மாதத்தில் கடன் அடைக்க முடியும் என்றால் அதற்காக பொறுத்திருத்தல் நலம்.
நான் செய்தது, பாங்கில் 2 அல்லது 3 பெர்சென்ட் வட்டிக்குப் பணத்தை போட்டு வைப்பதை விட, 7 அல்லது 8 பெர்சென்ட் வட்டிக்கு கார் வாங்காமல், காஷ் கொடுத்து வாங்கினேன். என் மனைவி 8 3/4 பெர்சென்ட் வட்டிக்கு 7 வருடம் முன் கார் வாங்கினார். ஒரு நாள் சொல்லாமல், முழு கடனையும் கட்டி விட்டேன். 2 நாள் செம கடுப்புல இருந்தாங்க. அடுத்த மாத தவணை கட்ட வேண்டிய அவசியமில்லை என்ற நிலை வந்ததும் கொஞ்சம் மனம் மாறியது. அடுத்த சில மாதங்களில் அவர்களது சேமிப்பு மற்ற பிற செலவுகளுக்கும் பற்றாக்குறை இல்லை என்று தெரிய வர பல மாதங்கள் ஆகியது.
மேலும் தொடர்கிறேன்.

2 comments:
Olai annae, nice writeup annae. Will read other parts.
Thanks Pattiks.
Post a Comment