Wednesday, August 28, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 5

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 5

வேலைக்கு சேர்ந்த இரண்டாம் மாதம் வீட்டு வாசல்ல ஒரு LIC agent வந்து நின்னார். எப்பிடியா மோப்பம் பிடிக்கிறாங்கன்னு நினைச்சேன். ஒரு பாலிசி எடுங்கன்னு ஒரே வற்புறுத்தல். மாதா மாதம் கட்டினாப் போதும், ஒரு ஒரு லட்ச ரூபாய் பாலிசி எடுத்துறலாமான்னார். எண்டோவ்மென்ட் பாலிசி, moneyback பாலிசி ன்னு சொல்லிகிட்டே போறார். ஒரு வாரம் கழிச்சு வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டேன்.

2000 சம்பளக்காரனுக்கு 1 லட்சம் பாலிசி எடுத்தா வருடத்துக்கு 3800. மாதா மாதம் கட்டினா 4100 ஆகுது.Maturity period ல அதிக வித்யாசம் இருக்காதுன்னார். எப்பிடி சரி பார்க்கிறது. தெரியாது. எதற்கு அதிகம் கொடுக்கணும். Premium கட்டுவது Annual payment ஆக இருக்கட்டும்ன்னு முடிவு பண்ணி விட்டேன்.

வருட ப்ரீமியம் 3800 எனும் போது இரண்டு மாத சம்பளம் போகும்ன்னு நினைச்சா ரொம்ப ஜாஸ்தின்னு பயமாயிருந்தது. அதனால 50K பாலிசி எடுக்கலாம்ன்னு முடிவு பண்ணினேன். MoneyBack பாலிசி எடுத்தா premium ஜாஸ்தி, 5 வருடம் கழித்து என்ன செய்வது என்ற ஒரு பக்குவம் அப்போது இல்லை.

மாதா மாதம் LIC க்கு கட்டுவதற்குப் பதிலா மாதம் 200 என் பேங்க் அக்கௌன்ட் ல தனியா ஒதுக்கிறது என முடிவு செய்தேன். வட்டியும் 9 டு 10% கிடைச்சது. சுலபமா கட்ட முடிஞ்சது.

இரண்டு இலட்சியம் நிறைவேறியது. ஒரு காப்பீடு கிடைத்த உணர்வு, மாதம் 5% சேமிப்பு கிடைக்க ஒரு வழி பண்ணிக் கொண்டது ஒரு திருப்தி. அதிகம் கட்ட வில்லை, கையக் கடிக்காது என்ற ஒரு திருப்தி.

போன வருடம் mature ஆகி 1.4 lakhs கிடைத்து.  இப்போது deposit பண்ணியுள்ளேன். Inflation க்கு ஈடு கொடுக்க முடியிற அளவு சேமிப்பு இல்லைன்னு இப்ப புரியுது. அப்போது எவ்வளவு சேமிக்கனும்ன்னு தெரியிலை.

இங்க வீடு வாங்கும் முன்னர் கூட வீட்டு வரியைக் கட்ட ஒரு Escrow அக்கௌன்ட் ஓபன் பண்ணச் சொல்லி வீட்டு லோன் வாங்கும் போது வற்புறுத்துவார்கள். அது தேவையா என்று முடிவு செய்து கொள்ளுங்கள். Escrow அக்கௌன்ட் இல் போட்டு அதன் வட்டியை நாம் அனுபவிக்க முடியாமல் போவதை விட, நாமே ஒரு அக்கௌன்ட் ல் தனியாகப் போட்டு சேமித்து வந்தால், வட்டியும் கிடைக்கும், கட்டும் போது  சிரமுமும் இருக்காது.

நான் வேலை சேர்ந்த இடத்தில் 15 பேருக்கு குறைவாக இருந்ததால் PF அக்கௌன்ட் ஓபன் பண்ண முடியாது என்றனர். நான் விடலை. SBI யில போய் PPF அக்கௌன்ட் brochure வாங்கி வந்து எல்லோருக்கும் PPF அக்கௌன்ட் ஓபன் பண்ண வைத்தேன். அலுவலக contribution கிடைக்க வழி செய்ததது இது.

இப்போது வேலை சேர்ந்த முதலே பென்ஷன் அக்கௌன்ட் மற்றும் 401K அக்கௌன்ட் ல் தவறாமல் போட்டு வருகிறேன். மாதம் எப்பிடியும் 12% சேமிக்கிறேன்.

இது துளி கூட retirement period இல் போதாது. குறைந்தது 15% மாதம் தோறும் சேமிக்கணும். உங்கள் வயது 50 நெருங்கும் போது இன்னும் அதிகம் சேமிக்கணும்.

Dave தன்னுடைய புத்தகத்தில் கேட்பது உனக்கு retirement காலத்தில் ஒரு வருடத்திற்கு எவ்வளவு தேவை என்பதை இப்போது முடிவு செய்து கொள். Inflation 4% போக குறைந்தது 8% interest வரும் mutual fund தேடி மாதம் தோறும் இன்வெஸ்ட் செய் என்கிறார். மாதம் தோறும் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று அதில் தோராயமாகத் தெரிய வரும் என்கிறார். அவரது புத்தகமோ அல்லது இணையத்திலுள்ள retirement calculators உங்களுக்கு உதவி செய்யும்.

இந்த எதிர்கால நோக்கு இல்லாததால் தான் LIC saving பண்ணும் போது தெரியாமல், குறைந்த அளவு சேமித்தது. இப்போது வந்துள்ள matured அமௌண்ட், எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

மேலும் தொடர்கிறேன்.

1 comment:

கல்வெட்டு said...

//மாதா மாதம் LIC க்கு கட்டுவதற்குப் பதிலா மாதம் 200 என் பேங்க் அக்கௌன்ட் ல தனியா ஒதுக்கிறது. வட்டியும் 9 டு 10% கிடைச்சது. சுலபமா கட்ட முடிஞ்சது.

இரண்டு இலட்சியம் நிறைவேறியது. ஒரு காப்பீடு கிடைத்த உணர்வு, மாதம் 5% சேமிப்பு கிடைக்க ஒரு வழி பண்ணிக் கொண்டது ஒரு திருப்தி. அதிகம் கட்ட வில்லை, கையக் கடிக்காது என்ற ஒரு திருப்தி.//

மாதம் போடும் சேமிப்பு முறை என்பது போட்டதை வட்டியுடன் எடுக்கும் ஒரு சேமிப்பு முறை.

காப்பீடுத்திட்டங்கள் சேமிப்பிற்கானது அல்ல.

உதாரணத்திற்கு வாகனக்காப்பீடு என்பது கிணற்றில் எரியப்படும் பணம் தான். அதை அனைவரும் செய்கிறோம்.

மருத்துவக் காப்பீடு , உயிர்க்காப்பீடு எல்லாவற்றின் நோக்கமும் அதுவே. " உன் பணத்தை மாதம் மாதம் கிணற்றில்போடு...நீ மொத்தமாக கிணற்றில் விழுந்து விட்டால் உன் குடும்பத்திற்கு அல்லது உன்னை நம்பியுள்ள கடன்காரர்களுக்கு செட்டில் செய்ய ஒரு பெரும் தொகை கிடைக்கும்".... என்பது.

செத்தால் பணம் என்பதுதான் நோக்கமே தவிர சேமிப்பு அல்ல.

****

மாதம் மாதம் பணம் போட்டு, காப்பீடு எடுக்காமல் இடையில் பூட்டால் அந்த‌ மாத சேமிப்பின் வழி வரும் பணம் , காப்பீடின் வழி வரும் அளவிற்கு இருக்காது.


***

காப்பீடை (செத்தால் பணம் ) மட்டுமே கொள்கையாகக் கொண்ட மாப்பீடுத்திட்டங்கள் இன்றும் உண்டு (அம்பேரிக்கா)அதற்கு பிரிமியம் குறைவு.

செத்தால் இவ்வளவு துட்டு சாகாம இருந்தாலும் இவ்வளவு துட்டு என்று வரும் (காப்பீடு + சேமிப்பு) காப்பீட்டுத்திட்டஙகள் அதிக பிரிமியம் கொண்டவை.

****

எனவே நோக்கம் சேமிப்பா? காப்பீடா என்பதில் எல்லாம் அடங்கியுள்ளது.