பையனுக்கு இன்றைய நாள் மிக மிக முக்கியமான நாள். இன்று காலேஜ் நிழைவு தினமாயினும், வேற ஒரு திட்டத்தோடு வேற வந்தான். அது கிடைக்குமா கிடைக்காதான்னு அவ்வளவு கவலை, ஆதங்கம், அதீத முயற்சி, சில சமயம் வயதிற்கு மீறிய செயல்.
இன்று எல்லாம் அவன் நினைத்தபடியே நடந்து முடிந்தது.
இந்த வருடம் 12வது முடித்து காலேஜ் போகனும். நடுவிலிருந்த இரண்டு மாத விடுமுறையில் சும்மாயில்லாமல், எங்க ஊருக்கு அடுத்து பக்கத்திலுள்ள county கம்யூனிட்டி காலேஜில் எமர்ஜென்சி மெடிகல் டெக்னீஷியன் கோர்ஸ் பண்ணினான். கடைசியில அங்க போன இடத்துல அது மட்டும் போதாது paramedic கோர்ஸ் பண்ணினால் தான் First line responders ஆக சிறப்பாக செயலாற்ற முடியும்ன்னு தெரிய வந்தவுடன், கிடைச்ச கல்லூரி வாய்ப்பை ஒரு வருடம் தள்ளிப்போட்டுபுட்டு paramedic course அதே கம்யூனிட்டி காலேஜ்ல பண்றேன்னு நின்னான்.
கறாராக முடியாதுன்னுட்டேன். ஒரு மாதிரிப் பார்த்தான். என் மேல பயங்கர கடுப்புல போனான். இந்த ஊர்ல 18 வயது நிரம்பிய பையன் மற்றும் பெண்ணிடம் நாம் (பெற்றோர்கள்) ஆதிக்கம் செலுத்துவது கடினம். ஒன்னும் பண்ண முடியாது. நான் கறாராக சொல்லி விட்டேன், ஒரு பேசிக் டிகிரி முடிச்சுபுட்டு என்ன வேணா பண்ணிக்கன்னுட்டேன். கடுப்புல போனான்.
இரண்டு நாள் கழிச்சு என் கிட்ட வந்தான். இப்ப என் லைஃபை கடினமாக்கிட்ட, சரி அந்த paramedics course, அங்க அதே காலேஜ்ல பண்றேன், அதுக்கு நிறையவே செலவாகும், கட்டுவியான்னு திடீர்ன்னு தமிழில் கேட்டான். இங்க கம்யூனிட்டி காலேஜ்ல ரொம்ப கம்மி, சீக்கிரம் பண்ணி எனக்கு வேலை கிடைக்கும், நீ கெடுக்கிறன்னான். நான் என் முடிவை மாத்திக்கலை, பணம் கட்டறேன், முதல்ல basic டிகிரியோட அதப்பண்ணிக்கன்னேன்.
சரின்னான். இங்க தான் சிக்கல் துவங்கியது.
Paramedics கோர்ஸ் பண்ண எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீஷியன் கோர்ஸ் பண்ணி, சர்டிபிகேஷன் வாங்கனும், அதுவும் நேஷனல் சர்டிபிகேஷன் வாங்கினாத்தான், மற்ற மாநிலத்தில் செல்லும்.
வேற மாநிலத்தில் வந்து இதே கல்லூரியில் படிக்க இங்க ஒரு பெரிய செக் லிஸ்ட் கொடுத்து விட்டனர்
1. கோர்ஸ் கம்ப்ளீஷன் சர்டிபிகேட்
2. ஸ்டேட் சர்டிபிகேஷன் (டெஸ்ட் எழுதனும்)
3. நேஷனல் சர்டிபிகேஷன்
4. கிரிமினல் ரிக்கார்ட் க்ளியரன்ஸ்
5. எஃப் பி ஐ கிளியரன்ஸ்
6. நேஷனல் சர்டிபிகேஷன் வாங்கி state-to-state ட்ரான்ஸ்பருக்கு இரண்டு மாநில அரசு அலுவலங்களில் கிளியரனஸ் வாங்கி வரனும்.
இது அத்தனையும் செய்ய குறைந்தது ஆறு-ஏழு வாரமாகும். இங்க கல்லூரியில் 3 வாரத்தில் paramedics கோர்ஸ் ஆரம்பிக்குது. உன்னால் இதெல்லாம் செய்ய முடியாதுன்னாட்டாங்க.
கல்லூரியை தினமும் தொடர்பு கொண்டு இது அத்தனையும் இரண்டு வாரத்துல செய்யறேன், தன்னை சேர்த்திகங்கன்னான். மேல் சொன்னது அத்தனையும் நடந்து முடியாம எதுவும் சாத்தியமில்லைன்னுட்டாங்க.
18 வயது நிரம்பி பத்து நாள் கூட ஆவலை. தன் பிறந்த நாளன்று நேஷனல் சர்ட்டிபிகேஷன் வாங்கி வந்தான். அடுத்த இரண்டே நாளில் ஸ்டேட் சர்டிபிகேஷன். இரண்டும் வந்த அடுத்த வாரம் மற்ற எல்லாவற்றையும் வாங்கிட்டான்.
கல்லூரியில் அவர்களால் நம்ப முடியலை. இங்க கல்லூரி வந்த பிறகு written test, மற்றும் இன்டர்வ்யூ வச்சு பார்த்து விட்டுத் தான் சொல்லுவோம்ன்னுட்டாங்க.
நேற்று 1000 கிமீ பயணம். இரவு வந்து சேர்ந்தோம். வரும் போது புலம்பி கிட்டு வந்தான். இன்றைய நாள் கிடைக்குமா கிடைக்காதான்னு ஒரே கவலை அவனுக்கு.
காலை எழுந்து வேகமாகப் போனான். பில்டிங் உள்ள விட்டுபுட்டு நானும் அம்மிணியும் இரண்டு மணி நேரம்மேல 90 டிகிரி வெயிலில் பார்க்கிங் லாட்ல தவம் கிடந்தோம். ஆள் நிதானமா வர்றான். ஆனால் அவன் அடிச்ச போன் காலில் அவ்வளவு சந்தோஷம். அவன் தேடி வந்தது கிடைச்சுருச்சு.
ரிடர்ன் டெஸ்ட்ல ஐம்பது கேள்விகளில் 45 கரெக்ட். பிறகு இன்டர்வியூவும் க்ளியர் பண்ணிட்டான். அவங்க எல்லாம் கேள்வி மேல கேள்வி கேட்டாங்களாம், எப்படி 3 வாரத்துக்குள்ள முடிச்சன்னு.
வாங்கின அத்தனை சர்டிபிகேட்ஸ், க்ளியரன்ஸ், நேஷனல் badge (சட்டையில் குத்திக்கொள்ளும் அடையாள முத்திரை) எல்லாம் பார்த்து கடைசியில ஒத்துக்கிட்டாங்களாம்.
பையனுக்கும் எனக்கும் பெரிய நிம்மதி. எனக்கு ஒரு பெரிய கவலை விட்டது. இந்த வயசுல படிப்பை விட்டுவிட்டு வேலைக்குப் போயிடுவானோன்னு பயம் எனக்கு.
இப்ப கடைசியில என்னோட பிடிவாதம், அவனது நல்ல காலம், எல்லாம் ஒன்னா சேர்ந்து அவனோட காலேஜ் ரெகுலர் curriculumமோட சேர்ந்து போச்சு.
பீத்தல் போஸ்ட்ன்னு நினைக்கிறவங்க கடந்து போலாம்.
இது மற்றவர்களுக்கு யாராவது ஒருவருக்காவது உதவலாம்.
கல்லூரி படிப்பு படிக்கிற காலத்திலேயே ஒரு first responder ஆக முன்னேறி சமுதாயத்திற்கு உதவுவது மிக சிறப்பு.
அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இங்கு ஏதாவது ஒரு ஆம்புலன்ஸிலோ, fire-engine உள்ளோ அல்லது ஏதாவது ஒரு எமர்ஜன்சி வார்டில் பணி செய்து கொண்டே கல்லூரி படிப்பை முடிப்பான்கிற நம்பிக்கையோடு
வாழ்வினிது
ओलै सिरिय !