இன்னிக்கு கார் வீட்டுல இருந்ததால கோவில் போலாமான்னு தோனிச்சு. எடு வண்டிய.
சிவன் கோவில் தரிசனம் முடிச்சு பிரசாதம் எடுத்து வந்து கார்ல வச்சிட்டு, பெருமாளைத் தரிசிக்கப் போனேன்.
நம்ம குருக்கள் கூப்பிட்டு பெருமாளுக்குத் தீபாராதனை காட்டி பெரிய ரோஜாப்பூ ஆப்பிள் எல்லாம் பிரசாதமாக கொடுத்து நிறைய மந்திரத்தோட வாழ்த்தினார்.
சந்நிதி வெளியே ஹாலில் அவர் கையில் இன்று அமாவாசை தக்ஷ்ணையைக் கொடுத்தேன். அது அவருக்குத் தான். ஆனால் மனுசன் நேரா கோவில் உண்டியலில் போட்டுவிட்டார்.
இதை எதுவும் பார்க்காமல் வெளியே மாத்யானிகம் பண்ணிகிட்டு இருந்த இன்னொரு குருக்கள் உள்ளே வந்தவர், என்னை பத்மாவதி தாயார் சந்நிதிக்குப் கூப்பிட்டு பழமும் பூவும் ஆசீர்வதிச்சுக் கொடுத்தார். அவரிடமும் அமாவாசை தக்க்ஷணையைக் கொடுத்துவிட்டு மிகமிக மனநிறைவோட வெளிய வந்து உண்டகட்டியோட வீட்டுக்கு வந்து லேட்டாக சாப்பிட்டேன்.
அம்மா நினைவு வந்தது. ஒவ்வொரு அமாவாசையப்பவும் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த கோவிலுக்குப் போய் அங்க இருக்கிற ஐந்து குருக்கள்கள் கையில் 20 ரூபாய் கொடுத்துவிட்டு வருவாங்க. அப்பா தன்னோட 86வது வயதில் காலமாவதற்கு முதல் நாள் மிகுந்த தள்ளாமையிலும் சேர்ல உட்கார்ந்து அமாவாசை தர்ப்பணம் பண்ணிவிட்டு மறுநாள் மறைந்தார். அம்மா இதை சொல்லிகிட்டே இருப்பாங்க. கடைசியில் அம்மாவால் எழுந்து நடக்க முடியாமல் போனப்ப, பெங்களூரில் அந்த கோவிலுக்குப் போய் அந்த ஐந்து குருக்களிடமும் கொடுத்துவிட்டு வரச்சொன்னார்கள். போய் வந்தேன்.
இன்றும் அத்தகையை மனநிறைவுடன்
வாழ்வினிது
உங்கள் ஆசியுடன்
ओलै सिरिय !
No comments:
Post a Comment