Thursday, July 1, 2021

வெற்றிலை மாலை

பெருமாள் கோவில் ஏகாந்த சேவையில் அம்மிணியோட வீணை. வீணைக்கு ஆடியோ செட் பண்ணிட்டு வெளிய வந்து ஒவ்வொரு சந்நிதியாக வலம் வந்து கொண்டிருந்தேன்.

ஆஞ்சநேயர் சந்நிதிக்கு வந்தப்ப என்னைப் பார்த்த குருக்கள் தனியாக தீபாரதனை காட்டினது மட்டுமல்ல, ஆஞ்சநேயர் கழுத்திலிருந்து ஒரு பெரிய வெத்தலை மாலையை எடுத்து, அதோட இரண்டு ஆப்பிள் பழத்தையும் வச்சு எனக்கு கொடுத்தார். அசந்து போய் நின்னுட்டேன். அவர் எப்போதும் என்னைப் பார்த்தா விசாரிச்சுட்டு நிறைய பழம் கொடுப்பார். தட்டுல போடற பணத்தை அப்படியே உண்டியலில் சேர்த்துருவார்.

கொடுக்கும் போது சொன்னார், இந்த வெற்றிலை மாலை நேற்று முழுதும் பெருமாளுக்கு சாத்தியிருந்தது, இன்னிக்கு ஆஞ்சநேயருக்கு சாத்தியது. இதை உங்களுக்குக் கொடுக்கிறேன். இந்த வெத்தலையை சாப்பிடுங்க. மத்தவங்களுக்கும் கொடுங்கன்னார். புல்லரிச்சுப் போச்சு எனக்கு.

பொதுவாக பெருமாள் மேல சாத்தினதை யாராவது வாங்கிகிட்டுப் போய்டுவாங்க. முக்கியஸ்தர்களுக்கு முதலில் கிடைக்கும். இன்னிக்கு கோவில் மூடற நேரத்துல போனதால கிடைச்சது.

எப்போதும் கோவிலில் பிரசாதமாக கிடைக்கும் பழங்களில் ஒன்னு மட்டும் வச்சுகிட்டு அங்கு வர்ற யாருக்காவது பிரசாதம் கிடைக்காதவங்க, குறிப்பாக சின்னக் குழந்தைகளைப் பார்த்தா கொடுத்துருவேன்.

இவ்வளவு பெரிய வெற்றிலை மாலையை என்ன பண்றதுன்னு யோசிச்சு கிட்டு, கொடிக்கம்பம் பக்கத்துல வரும் போது ஒரு இளம் தம்பதியினர் கைக்குழந்தை மற்றும் ஒரு சின்னக்குழந்தையோட வந்துகிட்டிருந்தனர். அவங்களை நிப்பாட்டி பழம் மற்றும் வெற்றிலை இரண்டைக் கொடுத்து மனதை நிறைவுபடுத்திக்கிட்டேன்.

பெருமாள் என்னை சுயநலக்காரன்னு நினைச்சுடுவாரோங்கிற அச்சம் அப்பப்ப வரும். இது மாதிரி நிவர்த்தி செய்து கொள்வதில்

வாழ்வினிது
ओलै सिरिय !

No comments: