Sunday, June 14, 2020

சுமைகளை இறக்க ஒரு தொந்தி சுமைதாங்கி

வாட்சப் போனா எல்லா க்ரூப்லையும் அந்த நடிகரின் தற்கொலைக்கு இரங்கல் செய்திகளாகவே இருக்கு! இங்க முகநூலிலும் அதுவே! ஆனால் அவங்க மேனேஜர் இறந்தப்ப கூட இவ்வளவு இரங்கல்பா வரவில்லை! அது இனி தடம் மாறிப் போகலாம்.

பொதுவான காரணம் சொல்லப்படுவது ‘மன அழுத்தம்’ தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது என.

அம்மா தான் மனதில் வருகிறார்கள். பிறந்த சிறிது நாட்களிலேயே வறுமையை பார்த்துப் பழகிய ஏழ்மை நிலை. திருமணம் ஆன பின்னும் தொடரும் கவலைகள் குடும்ப கஷ்டங்கள். 20-21 வயதில் திருமணம் ஆகி வந்த பின்னும் வந்த இடத்திலும் இரண்டு நாத்தனார்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் பிரசவங்களையும் தன் வீட்டில் வைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம். தொடரும் குடும்பச் சுமைகள் ஏழ்மை இல்லாத நாட்களே கிடையாது!

சுமைகளை இறக்க ஒரு சுலபமான வழி வைத்திருந்தார். அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய் அர்ச்சனைத் தட்டில் 5 பைசா போட்டு தன் சுமையை அந்த தொந்திப் பிள்ளையாரிடம் இறக்கிவிட்டு வந்து விடுவார்.

அடிக்கடி என்னிடம் சொல்லும் ஒரு வார்த்தை! வாழ்க்கையில கஷ்டம்ங்கிற வார்த்தை விலக ஆரம்பிச்சதே நீ பிறந்ததலிருந்து தாண்டான்னு கடைசி வரை சொல்லி கிட்டு இருந்தாங்க!

எந்தவொரு மனக்கலக்கம் ஏற்பட்டாலும் அம்மா ஓடுவது அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு. அர்ச்சனைத் தட்டில் போடற அந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாயில் தன் மன அழுத்தங்களை கவலைகளை வருத்தங்களை இறக்கி விட்டு வந்து விடுவார்கள்.

கடந்த டிசம்பரில் அம்மா படுக்கையில் விழுந்த பின்னும் சொன்னது: டேய் இன்னிக்கு அமாவாசை. வீட்டு பக்கத்திலுள்ள அந்த பிள்ளையார் கோவிலில் 4 கன்னட அர்ச்சகர்கள் இருப்பார்கள். ஆளுக்கு 20 ரூபாய் கொடுத்துர்றா. அதில் ஒருத்தர் வெளியே உட்கார்ந்து பிரசாதம் கொடுப்பார், அவருக்கு கொடுக்காம விட்டுராதே!

இங்க ஒரு டாக்டர் anti-depressionக்கு மாத்திரை எழுதித் தரலாமான்னு கேட்டார். சில சமயம் தேவைப்படுபவர்கள் எடுக்கலாம். சிலருக்கு தேவை கூட. எடுத்தால் செம தூக்கம் வரும். தூக்கத்தில் கவலைகளை மறக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தக் குடும்பத்தில் அனைவரும் தன் கவலைகளிலிருந்து வெளிவர மாத்திரை எடுத்தால் தூக்கத்தில் குடும்பம் நடத்த முடியுமா!

என் அம்மிணியின் stress busters அவரது வீணை வாசிப்பு தான். அதீத கவலைகள், சிரிப்பு, அழுகை, வருத்தம், சண்டைகள் எல்லாம் மறந்து தன்னோட வீணை வாசிப்பில் இறக்கிவிட்டு வந்து விடுவார். ஆட்டம், ஆர்ப்பரிப்பு, ஆரவாரம், கவலை, அழுகை, சண்டைகள் கொடுக்கும் வலிகள் தன் வீணையின் தொந்தியில் இறக்கிவிடும் ஒரு அபரீதமான anti-depression மருந்து அம்மிணியிடம்.

சுமைகளை இறக்க ஒரு தொந்தி சுமைதாங்கி!

Friday, June 12, 2020

கிளிக்கு இறக்கை முளைச்ச மொமண்ட்

பையனுக்கு 16 வயசு. 11வது படிக்கிறான். கடைசியில ஸ்கூல் மூடியதால ஆன்லைன் கோர்ஸ் மூலமா பள்ளிப்படிப்பு முடியுது. சம்மர் வாலண்டியரிங் பண்ணனும்.

பையன் இரண்டு நாளா சீக்கரம் நல்லபுள்ளையா தானே அலாரம் வச்சு எழுந்து குளிச்சு புதுசா வாங்கி வச்சிருக்கிற மெடிகல் ஸ்கரப்ஸ் எடுத்து போட்டுகிட்டு பெருமையா வாலண்டியரிங்கு கிளம்பிடறான். இன்னிக்கு காலையில ஏழு மணிக்கே புது உடையில கிளம்பியாச்சு. 30 மைல்ஸ் தள்ளி இருக்கிற கிளினிக்குக்கு தானே கார் ஓட்டிப் போய் வரனும்.

நேற்று மதிய இடைவேளையில போன் பண்ணி, டாட் guess what I got to doன்னான். நான் அவன்ட்ட தமிழில் தான் பேசுவேன். சொல்றது புரியலைன்னா ஆங்கிலம். என்னடான்னேன்.

முதல்ல பேஷண்ட் சீட் க்ளீன் பண்ணி வேற உட்கார்ற  ஷீட் மாத்தர வேலை கொடுத்தாங்க ஒவ்வொரு பேஷண்ட்டுக்கும். அடுத்து கொஞ்ச நேரத்துல கதையே மாறிடுச்சு அப்பா! பேஷண்ட் ஹிஸ்ட்ரி ரெக்கார்ட் பண்ணச் சொன்னாங்க! ஆர்த்தோ ஷூ ஃபிட்டிங் எல்லாம் பண்ணினேன்னு செம பெருமை! அவங்க எல்லா வேலையும் செய்யக் கொடுக்கறாங்க! சின்ன பையன்னு எடுபுடி வேலை மட்டுமில்லை டாட்ங்கிறான்!

நேற்று காலை எட்டு மணிக்கு கிளம்பி 9 மணியேலேர்ந்து 5 மணி வரை அங்கு வேலை செய்ஞ்சுட்டு வீட்டுக்கு கிளம்பும் போது எல்லாம் பெருமையாக சொல்லிகிட்டே வந்தான். நேரா சீக்கிரம் வீட்டுக்கு வாடான்னேன்.

நோ டாட். ஐ ஹேவ் டு செலிபிரேட் மை டே! ன்னு பெருமையாக சொல்லிகிட்டு போய் கால்ஃப் ரேஞ்ச் போய் அரை மணி நேரம் விளையாடிட்டு வர்றேன்னு போய்ட்டு வர்றான்!

கிளிக்கு இறக்கை முளைச்ச மொமண்ட் இப்ப!

பையன் வளர்கிறான் பெத்த மனம் பித்து என்று

பையன் நாலு நாளா செய்யற வாலண்டியரிங்ல செமையாக முழுகிட்டான். காலையில ஏழு மணிக்குப் போறவன் சாயந்தரம் ஐந்து வரை வேலை செய்து வீடு திரும்ப ஆறாகிறது!

அவன் திரும்பற நேரம் நான் வாக்கிங் போற நேரம்! வழியில ரோட்டுல நிறுத்தி கொஞ்சம் அன்றைய கதையைச் சொல்லிட்டுப் போவான்!

இரண்டு நாளாக ஆர்த்தோ சர்ஜரியை நேர்ல வேற பார்க்கிறான். சர்டிபிகேசன் இல்லாதவங்க சர்ஜரி பக்கம் போக முடியாததால மற்ற வைடிங் ரூம் வேலை மற்றும் பிற வேலைகள் தான். நேற்று ஒருத்தர் மயக்கம் போட்டதைப் பார்த்து கூட இருந்திருக்கான். இன்று இரண்டு மூன்று சர்ஜரிகளை வேற நேரில் பார்த்திருக்கான். 17 டாக்டர்களுக்கு நான் எடுபுடிமான்னு பெருமை வேற!

யாரும் என்னை 16 வயசு பையன்னு நினைக்க மாட்டேங்குறாங்க! ஏதோ 22-24 வயசு பையன் நினைச்சுகிட்டிருக்காங்க! பெரிய டாக்டருக்கு என் வயசு நல்லா தெரியுமான்னான்!

எல்லா பீத்தலும் பீத்திய பிறகு ஒரு குண்டைப் போட்டான் பொடிப்பய!

ஹைஸ்கூல் முடிஞ்ச உடனே அந்த டாக்டர் எனக்கு அங்க வேலை கொடுத்தா ஒரு வருசம் படிப்புக்கு sabbatical எடுத்துட்டு வேலை செய்து மெடிகல் எக்ஸ்பீரியன்ஸோட அப்புறம் தான் காலேஜ் போவேன்னான்.

அம்மிணி உடனே அதெல்லாம் முடியாது! காலேஜ் முடிச்சு தான் வேலை எல்லாம்ன்னு ஆரம்பிக்க, உங்க கிட்ட பேசறது வேஸ்ட்டுன்னு கிளம்பிட்டார் பெரிய மனுசன்!

முடிஞ்சுது கதை! அம்மிணி ஒரே அழுகை! இந்த வயசுல பணத்தைப் பார்த்தா படிப்பு போயிருமேன்னு ஒரே ஒப்பாரி! ஒப்பாரி முடிய 10 நிமிஷமாச்சு!

எல்லாம் கேட்டுகிட்டு அமைதியா நம்ம தொழிலைப் பார்த்து கிட்டு இருந்தேன்! தட்டுல விழற அடையும் தோசையும் நின்னுருமோன்னு!

பையன் வளர்கிறான் பெத்த மனம் பித்து என்று!

அம்மிணி ஆர்டர்

அம்மிணி பண்ற ரகளை தாங்க முடியாது! தினமும் வேலைக்குப் போயிட்டு வர்ற ஆளு கோவிட்னால காஸ்ட்கோ உள்ள போகமாட்டாகளாம். இது என்னய்யா ரீல்வுடறேன்னா, ஆபீஸ்ல தனிக்காட்டு ராணி, யாரும் வர்றதில்லை, கதவு வாசல்ல நின்னு பேசிட்டு போயிடுவாங்கலாம். காஸ்ட்கோ கதை அப்படியில்லையாம். அதனால அங்கு ஆன்லைன் ஆர்டர், வீட்டு டெலிவரி தான்.

இன்னிக்கு காஸ்ட்கோவிலே வாங்கப்போறேன்னு டெக்ஸ்டு வேற. சரி பெரிய மனுஷி நேர்ல போறான்னு நினைச்சா இல்லையாம். அதே ஆன்லைன் ஆர்டர்.

உனக்கு என்ன வேணும்.

எனக்கு முந்திரி வேணும்.

அதுல கொழுப்பு ஜாஸ்தி! தேவையா இப்ப!

உனக்கு இருக்கிறதை விடவா! சரி நானே வாங்கிக்கிறேன்.

சரி சரி பொழைச்சு போங்க.

ஆர்டர் பண்றாலாம் ஆத்தி! இரண்டு மணி நேரத்துல வருதாம், எடுத்து எல்லாம் உள்ள வைங்கன்னு ஆர்டர்.

இந்த WFHக்கு இன்னொரு பேரு தண்டசோறா சார்! வீட்டுல இருந்தாலே இளக்காரம் தான். இரண்டு பேரும் காரைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க! வெள்ளிக்கிழமை கோவில் போக முடியலை, உண்டகட்டியும் போச்சு!

ஏங்க அவங்க டெலிவர் பண்ணி இரண்டு மணி நேரமாச்சு உள்ள எடுத்து வைக்கலையா!

இரு பார்க்கிறேன்! இல்லையே! வாசல்ல ஒன்னுமேயில்லையே!

என்ன ஆளுங்க நீங்க! அவன் டோர் டெலிவரி பண்ணி கதவு பக்கத்துல வச்சிருக்காங்க பாருங்க, படம் அனுப்பியிருக்கான் வேற! வந்து இரண்டு மணி நேரம் ஆச்சு என்ன ஆளுங்க! வீட்டுல இப்படி இருந்தா எப்படி!

கதவுக்கு வெளிய ஒன்னுமேயில்லையே! அட்ரஸ் கரெக்டா கொடுத்தியா!

படத்தைப் பாருங்க! அட்ரஸெல்லாம் கரெக்டா தானே இருக்கு! படத்துல மிதியடியெல்லாம் தெரியர மாதிரி போட்டோ போட்டிருக்கான். என்னங்க நீங்க!

ஆமாம் இது யார் வீட்டு மிதியடி!

ஙே ஙே ஙே!

போன் பண்ணி கேளு! யார் வீட்டுல போய் டெலிவர் பண்ணியிருக்கான் பாரு!

அந்த டெலிவரி நம்பரை எங்க தேடறது? கஸ்டமர் சர்வீஸுக்குத் தான் கேட்கனும்!

நீயும் உன்னோட ஆன்லைன் ஆர்டரும் டெலிவரியும். மதியம் தூக்கம் போவுதுயா!

வீதியில இறங்கி ஒவ்வொருத்தன் வீட்டு வாசப்படியைப் பார்த்து எவன் வீட்டுல இறக்கிருக்கான்னு கண்டுபுடிச்சு, அவங்க வீட்டு காலிங்பெல் அடிச்சு புட்டு திரும்ப பத்தடி தள்ளி ரோட்டுக்கு வந்து நின்னு, அவங்க வந்து கதவைத் திறந்த பிறகு விவரம் சொல்லி எடுத்து வாரதுக்குள்ள நமக்கு பின்னி எடுக்குதுயா!

பத்து வருசமா எதிரும் புதிரும் இருக்கிறவங்களின் முகத்தை இன்னிக்குத்தான் நேரில் பார்க்கிறேன். யார் பெத்த மகராசியோ தெரியலை! இது என்ர சாமானில்லை அதனால நீ எடுத்துட்டுப் போய்க்கன்னு சொன்னதால எடுத்து வந்து சேர்ந்தேன்.

ஏம்மா! முதல்ல காஸ்ட்கோக்கு போனைப்போடு! ஏன் இப்படி ராங்க் டெலிவரி பண்றாங்கன்னு கேளு!

முடியாது! கேட்க முடியாது!

ஏன் ஏன்!

முடியாது. ஏன்னா, கேட்டா டெலிவரி பாய்க்கு வேலை போயிரும். போய் உங்க வேலையைப் பாருங்க! சாமான் கிடைச்சிருச்சுல்ல. ப்ரிட்ஜ்ல வைக்க வேண்டியதைப் பாருங்க!

அடி ஆத்தீ! இந்த போடு போடறாளே!