பையனுக்கு 16 வயசு. 11வது படிக்கிறான். கடைசியில ஸ்கூல் மூடியதால ஆன்லைன் கோர்ஸ் மூலமா பள்ளிப்படிப்பு முடியுது. சம்மர் வாலண்டியரிங் பண்ணனும்.
பையன் இரண்டு நாளா சீக்கரம் நல்லபுள்ளையா தானே அலாரம் வச்சு எழுந்து குளிச்சு புதுசா வாங்கி வச்சிருக்கிற மெடிகல் ஸ்கரப்ஸ் எடுத்து போட்டுகிட்டு பெருமையா வாலண்டியரிங்கு கிளம்பிடறான். இன்னிக்கு காலையில ஏழு மணிக்கே புது உடையில கிளம்பியாச்சு. 30 மைல்ஸ் தள்ளி இருக்கிற கிளினிக்குக்கு தானே கார் ஓட்டிப் போய் வரனும்.
நேற்று மதிய இடைவேளையில போன் பண்ணி, டாட் guess what I got to doன்னான். நான் அவன்ட்ட தமிழில் தான் பேசுவேன். சொல்றது புரியலைன்னா ஆங்கிலம். என்னடான்னேன்.
முதல்ல பேஷண்ட் சீட் க்ளீன் பண்ணி வேற உட்கார்ற ஷீட் மாத்தர வேலை கொடுத்தாங்க ஒவ்வொரு பேஷண்ட்டுக்கும். அடுத்து கொஞ்ச நேரத்துல கதையே மாறிடுச்சு அப்பா! பேஷண்ட் ஹிஸ்ட்ரி ரெக்கார்ட் பண்ணச் சொன்னாங்க! ஆர்த்தோ ஷூ ஃபிட்டிங் எல்லாம் பண்ணினேன்னு செம பெருமை! அவங்க எல்லா வேலையும் செய்யக் கொடுக்கறாங்க! சின்ன பையன்னு எடுபுடி வேலை மட்டுமில்லை டாட்ங்கிறான்!
நேற்று காலை எட்டு மணிக்கு கிளம்பி 9 மணியேலேர்ந்து 5 மணி வரை அங்கு வேலை செய்ஞ்சுட்டு வீட்டுக்கு கிளம்பும் போது எல்லாம் பெருமையாக சொல்லிகிட்டே வந்தான். நேரா சீக்கிரம் வீட்டுக்கு வாடான்னேன்.
நோ டாட். ஐ ஹேவ் டு செலிபிரேட் மை டே! ன்னு பெருமையாக சொல்லிகிட்டு போய் கால்ஃப் ரேஞ்ச் போய் அரை மணி நேரம் விளையாடிட்டு வர்றேன்னு போய்ட்டு வர்றான்!
கிளிக்கு இறக்கை முளைச்ச மொமண்ட் இப்ப!

No comments:
Post a Comment