Sunday, January 30, 2022

நாண் விடுக்கும் அம்புகள் கதை சொல்கிறது

வில்லிலிருந்து விடுபடும் அம்புக்கு
  நாண் கொடுக்கும் வீச்சு
நம் எண்ணங்களின் பிரதிபலிப்பு!

கை நீட்டிச் சொல்லும் குறிக்கு
  நாண் தொடுக்கும் பொறி
நம் செயல்களின் தொகுப்பு!

காலம் அதன் ஏற்றத்தில்
   நாண் கூட்டும் அழைப்பு
நம் விதிகளின் கருத்தொற்றுமை!

நாண் விடுக்கும் அம்புகள் கதை சொல்கிறது!

Saturday, January 29, 2022

மூப்பு சொல்லும் பாடம்

மனது அது சிறு பிள்ளை போல்
  உடல் அது தன் முதுப்பை நோக்கி
இரண்டையும் ஒருங்கிணைக்கா உடற்பயிற்சிகள்
  இலைகள் உதிரும் தருணத்தில் பூ பறிக்க!

வானம் அதின் எல்லை போல் நம் மனது
   எறிகல் போல் இறங்கத் துடிக்கும் உடல்
ஆடிப்பாடி இறங்கும் ஆட்டம் துயிலாது!

மனதிற்கு தேவை உடலின் மூப்பு
  மூப்பிற்குத் தேவை மனதின் சுவாசம்
வாழ்க்கை அதன் விளையாட்டில் பயிற்சிகள்!

காலமதில் மூப்பு சொல்லும் பாடம்!

Thursday, January 27, 2022

நீண்டதொரு ஓட்டம் கவிதை சுரக்கையில்


தை பிறந்தால் வழி பிறக்கும்

 பால்ய நண்பனுக்கோ கவிதை சுரக்கும்

ஆறடி தூரத்தில் பந்து வீசியவனுக்கு

  நாலடியில் கவிதை நான்மணிக்கடிகையாய்!


அன்பில் சுரக்கும் அதன் வெளிப்பாடு

  தினமொரு ஆட்டமாய் வருகிறது

பால்ய தினத்தின் ஆக்கிரமம்

  இன்றும் பிரதிபலிக்கும் ஆத்மபந்தத்தோடு!


நீண்ட கைகளில் உயர்ந்து விழுந்த அந்த பந்துகள்

  சிதறி விழும் மூன்று சிறு தடிகளை நோக்கி

சிதறும் இன்றைய இச்சிறு கவிதை முனைப்புகள்

   ஒவ்வொரு நொடியிலும் உயிர் நாடியைத் தொடும்!


நீண்டதொரு ஓட்டம் கவிதையாய் தொடரும் பொழுதில்!


ओलै सिरिय ।

அள்ளமுடியா குருவி வான்வெளியில்

அள்ளிக் கொட்டிய கைகள் அளவிலாத தூரத்தில்
  அள்ளித் திணித்த கைகள் அமைதியாய் இனி
அளவிலா நட்பின் நெஞ்சமது ஆழ்துயிலில்!

வாழ்வின் நிரந்தரமறியா தூரத்தில் நாம்
  வாழ்க்கையை இன்பமாய் கழித்தவன் நினைவில்
வாழ்வின் பயணத்தில் காட்சிப்பொருளாய் !

கூட்டுவெளியில் குருவி ஒன்று பறந்துவிட்டது
  விட்டுச் சென்ற கூட்டில் குருவிகளாய் நினைவுகள்
காலை நடைபயணத்தில் கடைசியாய் பறந்த குருவி
  கூட்டில் என்றும் நினைவுகள் நடைபயிலும்!

அள்ளமுடியாத குருவி பறந்துவிட்டது!

ओलै सिरिय ।

Saturday, January 1, 2022

புதினம் அது ஓர் இயல்பாய் கடக்கையில்


புதினத்தில் புதிதாய் தோன்றும் எண்ணங்கள்

  நாளடைவில் நினைவுகளாய் மாறிடினும்

இயல்பாய் அமைவது அலைமோதும் பணிகள்!


புதினத்தில் மனிதன் மாறுவதில்லை

  மாற்றங்களே புதிதாய் திவிளைகள் போன்று

வருடம் கடக்கும் பாதையில் நம் பயணம்!


புதினத்தின் விடியலில் காலம் மாறுகிறது

  காலமாற்றத்தில் படகு போல் திமிறும் நாம்

வாழ்வை இயல்பாய் வாழும் தருணத்தில்

  புதின உறுதிமொழிகள் காலம் கடந்தவை!


புதினம் அது ஓர் இயல்பாய் கடக்கையில்!


வாழ்வினிது

ओलै सिरिय ।