Thursday, October 28, 2021

உறவும் சுற்றமும் கடனும்

 வாழ்க்கையில் பணத்தேவை எல்லோருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் வரும். மற்றவர்களிடம் போய் நிற்க வேண்டி வரும் போது இத்தனை நாள் பெற்ற பணம், புகழ், கௌரவம், சுயமரியாதை, ஆணவம் மற்றும் எல்லாம் சேர்த்து அடி வாங்கும். தலைகுனிய வைக்குது.

டேவ் ராம்ஸி தன்னோட புத்தகத்துல வலியுறுத்துவது, இத்தகைய இக்கட்டான தருணத்தில் நெருங்கிய உறவுகளிடமும் நட்பிடம் மட்டும் கடன் வாங்காதீர்கள், வாங்கினால் உறவு கெட்டுவிடும் என்பார்.

உறவுகளின் முக்கியத்துவத்தை, அவர்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமெனும் அவசியத்தை, எங்கோ தள்ளி வேறொரு இடத்தில் வாழும் போது தான் அந்த உறவுகளின் முக்கியம் தெரியும், புரியும். அப்ப தான் அவங்களோட போட்ட சண்டையை மறந்து சமரசமாயிக்கத் தோணும்!

டேவ் ராம்ஸி இப்ப சொல்றதை எங்கப்பா அம்மா அவங்க வாழ்க்கையில முன்பே வாழ்ந்து காட்டிட்டுப் போனாங்க! அதையெல்லாம் கடன்றற வாழ்வு வாழ்வதெப்படின்னு என் blogல முன்பு எழுதியிருக்கேன். 

சேமிப்பு, இன்சூரன்ஸ் நமக்கான ஒரு சேஃப்டி நெட்டை கூடவே உருவாக்கிக்கிடனும். இது நம் 30-35 வயதில் துவங்க வேண்டிய ஒன்று.

ஏன் எதுக்கு இது இப்பன்னு கேட்கறீங்களா!

இருக்கு!

அத்தகைய தருணங்கள் மற்றவர்களுக்கு இருக்கு, நம்மிடம் வராங்க! ஓரளவுக்கு மேல செய்ய முடியலை. முடியலைன்னு சொல்லி விலகும் போது, அதைச் சொல்வது கூட கடினமாக இருக்கு!

அத்தகைய தருணங்கள் வராமல் வரவழைத்துக்கொள்ளாமல் இருந்தால்

வாழ்வினிது
ओलै सिरिय !

No comments: