மாற்றம்
நம்ம அன்றாட வாழ்க்கையில திடீர்ன்னு ஒரு மாற்றம் வருதுன்னு வைச்சுக்குங்க. அதற்கு நாம முன்கூட்டியே தயாராயிட்டோம் என்றால் அது நமக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காது. மாற்றம் சொல்லிக்கிட்டா வரும்.
ஆறு மாசத்துக்கு ஒரு முறை வந்தா ஒரு பல்லைக் கடிச்சிகிட்டே அதற்கு ஏற்ப தேவைகளை ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஆனால் வரும் மாற்றம் நமக்கு அதிர்ச்சி அளிக்ககூடிய வகையில் இருந்தால், எப்பிடி மீண்டு வருவது. சிலருக்கு depression வரும். சிலருக்கு அலுவலகத்தில் பகை வரும். வீட்டுல அமைதியின்மை வரும்.
உதாராணமா, அலுவலகத்தில நல்ல பதவியிலிருந்து அல்லது நல்ல காசு பார்க்கக் கூடிய இடத்திலிருந்து வெகு சுமாரான இடத்துக்கு மாத்திட்டாங்கன்னா என்ன பண்ணுவது. எத்தனை பேருக்கு இதை சமாளிக்க மன தைரியம் இருக்கு.
வழி இல்லையா? இருக்கு. கொஞ்சம் உட்கார்ந்து யோசிங்க. :-)
எங்கிருந்து உங்களை மாற்றியிருக்காங்க. என்ன தகராறு ஆயிருக்கு? இதை மேலும் பிரச்சனை பண்ணினா என்ன நடக்கும். அந்த தகராறில உங்க பக்கம் நியாயம் இருந்து நீங்க வெற்றி அடைஞ்சிட்டா, என்ன நடக்கும். திருப்பி அதே மக்களோட சேர்ந்து வேலை செய்யணும். பழையப் பகையை வைச்சு மறுபடியும் குடைச்சல் தரலாம். நிலைமை இன்னும் மோசமாகலாம்.
விடுங்க. இப்ப புதுசா வந்திருக்கிற இடத்தைப் பாருங்க.
இங்க நீங்க அதிக experience உள்ள ஆளா இருக்கலாம். அல்லது ஒரு பெரிய பாப்புலரான பதவியிலிருந்தோ அல்லது அதிக தொழில்நுட்பம் தெரிஞ்ச இடத்திலிருந்து வந்திருப்பதால புதிய இடத்தில் மதிப்பும் மரியாதையும் தர வாய்ப்பு உள்ளது. இங்கு பெரிய பதவி கிடைக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.
அங்கு நீங்கள் பத்தில ஒருத்தர். இங்க நீங்க பத்தில முதல்வர். உங்களை மதித்து நடக்க புதிய இடத்தில் வாய்ப்பு அதிகம்.
பழைய இடத்துப் பகைமையை நினைத்து வருந்துவதினால், நமக்கு மன உளைச்சலும், அதனால் குடும்பத்தில் மாறுபட்டு நடக்க வாய்ப்பு உள்ளது.
பழைய ஆளுங்களோட மறுபடியும் மல்லுக்கு நின்னா புது இடத்திலும் உங்களை கண்டு பயப்பட வாய்ப்பு உள்ளது. புது இடத்திலும் பெரிய பதவிக்கு உங்கள எடுப்பதற்கோ அல்லது கூட வேலை செய்பவர்கள் உங்களோடு அணுகுவதற்கு, பேசுவதற்கோ பயப்பட மாட்டாங்களா?
விட்டுத் தள்ளுங்க மக்கா. toilet பேப்பர் தொடைச்சி தூக்கி விட்டேறிஞ்சிட்டு வருவதில்லையா? திருப்பி அது நம்ம மேல ஒட்டாமப் பார்த்துக்கணும். இல்லையா மக்கா.
மாற்றம் நம்ம வீழ்த்திடாம, நம்ம முன்னேற்றத்திற்கு உதவுவதற்கு மாற்றத்தை சாதகமாக மாற்றிக் கொள்ளுங்க. நம்மால முடியும். நம்ம கையிலத் தானிருக்கு.
5 comments:
மாற்றம் நம்ம வீழ்த்திடாம, நம்ம முன்னேற்றத்திற்கு உதவுவதற்கு மாற்றத்தை சாதகமாக மாற்றிக் கொள்ளுங்க. நம்மால முடியும். நம்ம கையிலத் தானிருக்கு//.
இன்றைய சூழலில் அனைவருக்கும்
அவசியம் அடையவேண்டிய பக்குவம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Ramani sir !
Romba nanringa.
குட் ஒன்.
நல்ல உண்மை கூறியிருக்கறீர்கள். மாற்றத்தை ஏற்றிட்டால், அனுசரித்தால் வாழ்வே இனிக்குமே! பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
Bala sir, kovaikkavi,
Nanringa.
Post a Comment