எனக்கும் ஹிந்தி திணிப்பு பிடிக்காது. ஆனால் தேவைக்காக கற்பது அவசியம்னு தோணுது. ஆங்கிலம் இன்னும் தேவைப் படுது. சரிவர சரளமாக பேச வரவில்லை என்றால் தனிப் பட்ட வளர்ச்சிக்கும் வேலை செய்யுற இடத்தில சில நேரங்களில் அவமானத்திற்கும், உயர் பதவி கிடைக்காமல் போவதற்கும் ஏதுவாகிறது.
எண்பது இறுதியில் தொண்ணுறு ஆரம்பத்தில் தமிழகத்தில் வேலை கிடைப்பதை விட வெளிமாநிலங்களில் தான் சுலபமாக வேலை கிடைத்தது. தெரிந்த சிலர் மொழி தெரியாது என்ற பயத்தால் வேலைவாய்ப்புகள் தேடாமல் இருந்தனர். தமிழ்நாடு விட்டு வேறு இடங்களுக்கு apply பண்ண மாட்டாங்க. வேறு மாநிலங்களுக்குப் போனவர்களுக்கு மொழி சரியான தடையாக இருந்தது. ஆங்கிலம் படிச்சவன் அத்தனை பேரும் அயல்நாடு வேலை தேடி காத்திருக்க முடியாது.
என் பள்ளி ஆசிரியர் என்னை வலுக்கட்டாயமா வரவழைச்சு சில நாள் ஹிந்தி சொல்லிக் கொடுத்தார். டிமிக்கி கொடுத்து விட்டு விளையாடப் போய்விடுவேன். பெரியவனான பிறகு வெளி மாநிலம் செல்ல வேண்டிய அவசியம் வந்தவுடன் அவரிடம் போய் பத்து நாளாவது சொல்லிக் கொடுங்க சார் ன்னு கேட்டேன். இன்னும் பத்து பேரை கூட்டியா சொல்லித் தரேன் என்று சொல்லி விட்டார். சில நண்பர்களுக்கு விருப்பமில்லை.
ஹிந்தி கத்துக்காம வடகிழக்குப் போய் ஒன்னும் புரியல. சின்னக் குழந்தைகளோடு தினமும் அவங்க லெவல்க்கு விளையாடி அவர்களிடம் கற்றுக் கொண்டேன். அப்பவும் சரளமா வராது. கண்ணாடி புட்டியில கோலிகுண்டு போட்டு ஆட்டின மாதிரி தான் வரும்.
அரசாங்க வேலைத் தேர்வுக்குப் போனா உள்ளூர் மொழி தெரியாது என்று IAS commissioner வெளியேப் போகச் சொல்லிட்டான். படித்த படிப்பை விட மொழி அறிவு தான் முக்கியமா தோன்றுகிற அளவுக்கு மனித வளர்ச்சி குறித்து வெறுப்பு தான் வருகிறது.
ஓர் நாட்டுக்குள் எந்த மொழி பேசினால் என்ன ? அனைவரும் இந்தியரே என்ற மனப்பான்மை இல்லை. வேறு மொழி பேசும் அண்டை மாநிலத்தவரோடு வாய்க்கா வரப்புத் தகராறு. அவனைத் திருந்தச் சொல் நான் திருந்துகிறேன் என்ற எண்ணம் தான் எல்லோரிடமும்.
இன்று பள்ளிகளில் ஹிந்தி சொல்லிக் கொடுத்தால் அதை வாய்ப்பாக உபயோகிப்பது நல்லதாக இருக்கும். வெளி மாநிலங்களில் வேலை தேடுவதற்கு பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நாங்க பட்ட கஷ்டங்கள் அவர்கள் படத் தேவையிருக்காது.
அவங்கெல்லாம் தமிழ் கத்துக்கிராங்கலான்னு ஒரு வாதம் வரும். இப்ப வேலை தேடி அதிகம் வருவதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள். கண்டிப்பாக கத்துப்பாங்க அவங்க. மொழிக்கு பயந்து வேறு மாநிலம் போகத் தயங்காதவர்களுக்கு மொழிப் பிரச்சனையாக இருக்காது.
ஹிந்தி கத்துப்பது பிரச்சனை அல்லது விருப்பமில்லை என்றால் ஆங்கிலமாவது சரளமாகப் பேசக் கற்றுக் கொள்வது நல்லது. இல்லாட்டி தேவையில்லாமல் இது நமக்கு ஒரு ஊனமாகப் போய்விடும். தாய் தந்தையிரின் விருப்பு வெறுப்புகளைப் பார்க்காமல் இதை ஒரு additional ஸ்கில் என்று ஊக்குவித்தால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு உதவும்.
2 comments:
good one.
Nanri Bala Sir
Post a Comment