நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
You are blessed
இந்த வார்த்தைகளை நான் அஸ்ஸாம்ல இருக்கும் போது அசாமியர்களிடம் கேட்டது அதிகம் . அவங்க அசாமி மொழியில சொன்னாலும் அதன் பொருள் அதே தான்.
ஆனால் எதைப்பார்த்து சொன்னாங்க/சொல்றாங்கன்னு நேர்ல பார்த்தபோது ஆச்சரியமாக இருந்துச்சு! புல்வெளிகளில் மேய்ஞ்சுகிட்டிருக்கிற rhino, ஆடு மாடுகளைப் பார்த்து சொல்வார்கள்! புல் பசுமையாக இருந்தாலும் காய்ஞ்சு இருந்தாலும் கவலையில்லாம வாழறீங்கன்னு ரொம்ப பொறாமையாகச் சொல்வாங்க! எங்க கஷ்டம் உனக்கில்லைன்னு!
அடுத்து
we are blessed !
நாங்கள் ஆசீர்வதிக்கப்பபட்டவர்கள்!
அமெரிக்கா வந்த நாளிலிருந்து எல்லா இடங்களிலும் மிக அதிகம் புழங்கக்கூடிய வார்த்தைகள் we are blessed.
எந்த ஒரு அமெரிக்க gatheringலையும் ஒருத்தர் முன் வந்து பிரேயர் சொல்வார்! அதில் முக்கியமாக இருப்பது நமக்கு இந்த ஒருவேளை உணவைக் கொடுத்து உதவிய கடவுளுக்கு நன்றி சொல்லி, எங்களை இவ்வாறு படைத்ததால் we are blessedம்பாங்க!
அதைத் தவிர ஆபீஸ்ல புழங்கும் போது கூட, ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் கிடைச்சவன் கிடைக்காதவனையும், பென்ஷன் கிடைச்சவன் பென்ஷன் கிடைக்காதவனையும், ரிடையர் ஆகிறவன் இன்னும் ரிடையர் ஆக பல வருஷம் இருப்பவனைப் பார்த்தும், நீண்ட க்யூவில நிற்கும் போது ஒரு சின்ன க்யூவுல நின்னுட்டு வாங்கிட்டுப் போறவங்கெல்லாம், சில சமயம் அடுத்த நாட்டு மக்கள் படும் அல்லல்களைப் பார்த்து அந்த கஷ்டம் நாம் படலை என்கிறபோதும் இவர்கள் அடிக்கடி சொல்கிற வார்த்தை we are blessed!
ஒருத்தருக்கு நல்லது நடக்கும் போது சொல்லக்கூடியது you are blessed நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்ன்னு!
ஆகவே இந்த மாதிரி போஸ்டுகள் எல்லாம் வெட்டியாக எழுதி பொழுதி போக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
No comments:
Post a Comment