கடனற்ற வாழ்வு வாழ்வது எப்பிடி - 8
நம்மிடம் ஒரு தொகையை சேமித்து வைப்பதன் மூலமே மறுபடியும் கடன் வாங்க வைக்கும் நிலைமையிலிருந்து தப்பிக்கமுடியும். இந்தத் தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பது நமது மாதந்திர பட்ஜெட் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். எவ்வளவு நாள் இந்த பணத்தை வைத்து சமாளிக்க முடியும் என்கிற ஒரு மனநிலை, ஒரு நம்பிக்கை நம் மனதில் கொண்டு வர 6 மாத சேமிப்பு என்கிறேன். இது ஒவ்வொருவரது குடும்ப நிலைமையைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால் கடனற்ற வாழ்வு வாழ இது அவசியம் தேவை.
இந்த சேமிப்பு பணம் இல்லாமல் கடனற்ற வாழ்வு வாழ முடியாது. இதிலிருந்து எடுத்து செலவு பண்ண வேண்டிய கால கட்டாயம் உருவானாலும், மறுபடியும் இந்த சேமிப்பு சேரும் வரை பிற செலவுகள், இன்வெஸ்ட்மென்ட்கள் தவிர்க்க வேண்டும். இதை சேர்த்து வைக்க வேண்டும்.
மாதந்திர பட்ஜெட் பணத்தில் செலவுகள் போக முதலில் இந்த safety இருப்புத்தொகையை சேமிக்கத் தொடங்க வேண்டும். இது தான் உங்கள் முதல் சேமிப்பாக இருக்க வேண்டும். இதுவே உங்களை கடன் வாங்கும் நிலையை உருவாக்காமல் தடுக்கும் சொத்து.
இந்த 6 மாத அத்தியாவசிய செலவுகளுக்கான சேமிப்பு என்பது, முதலில் நான் சொல்லிய emergency செலவுக்கான 2000-5000 தவிர்த்து பிறவற்றிர்க்கானது.
இந்தப் பணத்தை எங்கு எதில் வைத்திருக்க வேண்டும் என்பதிலும் ஒரு தெளிவு வேண்டும். தேவைப் படும் நேரத்தில் உடனடி எடுத்து உதவும் வங்கிகளில் சாதாரண savings account ல் மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒரு term டெபொசிட் பண்ணி வைத்து தேவைப்படும் எடுக்க வேண்டிய சமயத்தில் எடுக்க முடியாமல் போகவோ அல்லது எடுப்பதற்கு பெனால்டி கட்டி எடுத்து நஷ்டப் படக்கூடிய வகையில் எடுத்து வைக்கக் கூடாது.
பேங்க் கில் வைப்பதன் மூலம் இதில் வரும் வட்டியைப் பார்த்து ஆசைப்பட்டு, தேவைப் படும் போது இன்னொருவரிடம் கடன் வாங்கி சமாளிக்கும் மனோபாவம் கூடவே கூடாது. கடனற்ற வாழ்வே நோக்கம்.
Emergency பணம் வீட்டிலிருக்க வேண்டும். இந்த 3-6 மாத கால அத்தியாவசிய சேமிப்புத் தொகை வங்கியில் அல்லது எளிதாக எடுக்க முடிய வகையில் ஒரு சேமிப்பு நிறுவனத்தில் இருக்க வேண்டும். இதை வைத்து முதலீடு செய்யும் மற்ற தனிநபர்களிடம் அல்ல.
பிறரிடும் கொடுத்து வைத்தல் அல்லது குறைந்த வட்டிக்கு பிறருக்கும் கடன் கொடுத்து வைக்கக் கூடாது. தேவைப்படும் நேரத்தில் நீங்கள் மறுபடியும் பிறரிடம் புரட்டும் நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது.
இந்தப் பணத்தை எடுத்து மாதாந்திர பட்ஜெட் ஐட்டத்தில் இடம் பெற்றுள்ள செலவுகளுக்கு செலவழிக்கக் கூடாது. இதை வைத்து புதுப் பொருட்களை அல்லது பட்ஜெட்தில் இல்லாத திடீர் தேவைக்கான பொருள் அல்லது வேற செலவுகளுக்காகவும் இதைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
வருமானம் தடைபடும் போதும், வேலை போகும் போது ஒருவரது வருமானத்தில் பட்ஜெட் செலவுகளை சமாளிக்க முடியாமல் போகும் போது மட்டுமே இதில் கை வைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் இதில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றால் உங்கள் பட்ஜெட் சரிவர நிர்ணயிக்கப் படவில்லை என்றே அர்த்தம். முதலில் பட்ஜெட்டை சரி செய்யுங்கள்.
இந்த பணத்தைத் தொடும் நேரத்தில் இனி இதை மறுபடியும் சேமித்து பூர்த்தி செய்வதற்கான சேமிப்பை உங்கள் மாத பட்ஜெட்டில் இடம் பெறச் செய்ய வேண்டும்.
இதைத் தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் செய்து வந்தால், உங்கள் வாழ்வில் வரவு செலவுகளை சமாளிக்க கடன் வாங்காமல் வாழக் கூடிய ஒரு பக்குவத்தை உங்களிடம் நீங்கள் பார்க்கலாம்.
இதுவரை நான் எழுதியவற்றில் தேவையானது
1. வாங்கியுள்ள கடன்களின் பட்டியல், சிறிய கடன் முதலில்
2. மாதந்திர பட்ஜெட் தேவை
3. ஒருemergency fund
4. சிறு கடன்களிருந்து ஒவ்வொன்றாக அடைத்தல் (வீட்டுக் கடன் தவிர)
5. எக்காரணம் கொண்டும் மறுபடியும் கடன் வாங்கக் கூடாது (including கிரெடிட் கார்டு)
6. 6 மாத கால தேவைக்கான சேமிப்பு.
மேலுள்ளவற்றை பூர்த்தி செய்த பிறகே பலருக்கு அடுத்த கட்டமான வீட்டுக் கடன் அடைப்பது, ஓய்வு கால சேமிப்பு, இன்சூரன்ஸ், பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு நோக்கி நாம் முன்னேற முடியும். இவைகளை வரும் தொடர்களில் பார்க்கலாம்.

No comments:
Post a Comment