கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 10
ஒருவரது வாழ்வில் மிக முக்கியமான period அவர்களது 40 - 50 வயது காலத்தில் தான் இருக்கும். ஒரு பக்கம் தன் சிறு குழந்தைகள் வளர ஆரம்பித்து இருப்பார்கள். இன்னொரு பக்கம் நம் பெற்றோர் முதுமை அடைந்து நம் உதவி தேடி அமர்ந்திருப்பார்கள். குழந்தைகளின் வளர்ச்சிக்கு படிப்புக்கு என்ன செய்வது? பெற்றோரின் நோய் நொடிகளை சமாளிப்பது எப்படி?
இதே கால கட்டத்தில் தான் நாம் வளர்ந்து வந்த சூழ்நிலையைப் புரட்டிப் பார்க்கும் காலம் கூட. நம்மை நம் வழிகாட்டுதலை நம்பி வாழ்வோரின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டிய நிலைமை இருக்கும். நம் எதிர்கால வாழ்க்கைக்கான திட்டமிடுதல் துவங்க வேண்டிய காலம் கூட. திட்டமின்றி செயல்படும் நிலையினால் ஏற்படும் தவறுகள் பிற்காலத்தில் ஒரு கடினமான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும். நாம் தயாராக வேண்டிய நேரம் இது.
ஏன் 60 வயதில் ஒரு தொழில் தொடங்கி முன்னேற முடியாதா என்கிற கேள்வி எழலாம். முடியும். ஆனால் தொழில் தொடங்க மூலதனத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முன்பிருந்தே திட்டமிடுதல் தேவை.
வீட்டில் எழக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் இந்த காலகட்டத்தில் (40-50) அடையா விட்டால் இதுவே நம்மை வீழ்த்துவதற்கு எளிய கருவியாகி விடும்.
என்ன செய்ய வேண்டும்? எதை எப்பிடி செய்ய வேண்டும்? எவ்வளவு தேவைப் படலாம்? எவ்வாறு கடன் வாங்காமல் சமாளிக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு திட்டமிடுதல் வேண்டும்.
இதை சம்பாதிக்கத் தொடங்கிய நாளிலிருந்து அல்லது 30 வயதிலேயே ஆரம்பித்து விட்டால் எளிதாக் கோடீஸ்வரன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.
என்னவெல்லாம் செய்ய வேண்டும்.
முதலில் சேமிக்கத் தொடங்க வேண்டும். எதில் எதில் சேமிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
1. எமெர்ஜென்சி fund ற்கான சேமிப்பு - கடன் வாங்குவதைத் தவிர்க்க.
2. Retirement fund, பென்ஷன் fund,
3. லைப் insurance / disability இன்சூரன்ஸ்
4. லாங் term health இன்சூரன்ஸ்
5. சில்ட்ரேன்ஸ் education fund
6 fixed deposits, Shares / Mutual funds போன்றவை
இவைத் தவிர நீங்கள் வருங்காலத்தில் நிகழக்கூடிய சம்பவங்களுக்கு, உதாரணமாக, வீடு வாங்க, கார் வாங்க, ... முன்கூட்டியே சேமிக்கத் தொடங்க வேண்டும்.
கடன் இருக்கும் போது மேலுள்ளவற்றிக்கான சேமிப்பு முழுவதும் தொடங்குவது தவறு. வீட்டுக் கடன் தவிர ஏனைய கடன்களை முழுதும் அல்லது பெருமளவு அடைத்து விட்டே இதைத் துவங்குவதாக இருக்க வேண்டும். வீட்டுக் கடனையும் முழுதும் அடைத்து விட்டால் சேமிப்பு எளிதில் பல மடங்காகும்.
கடன்களை வைத்துக் கொண்டு சேமிப்பையும் தொடங்குவது என்பது எளிதல்ல. கடனுக்கு வாங்கிய வட்டியை விட சேமிப்பின் வட்டி வருமானம் குறைவாகத் தானிருக்கும். கடன் வாங்கிய இடத்தில் கட்டாமல் சேமிப்பில் போடுவது நேர்மைக்கும் இழுக்கு. கடன் போன பிறகு கிடைக்கும் நிம்மதி, எளிதில் சேமிக்க அல்லது தேவைப் படுபவற்றை வாங்குவதற்கான ஒரு தெம்பை மன நிலையை உருவாக்கிக் கொடுக்கும்.
பெரும்பாலான வீ ட்டுக் கடன்கள் அடைய 15 வருடங்கள் ஆகலாம். அதுவரை பிறவற்றிற்காக சேமிக்காமல் இருப்பது தவறு. வீட்டுக் கடனை 10 வருடத்தில் முடித்தால், அதன் பிறகு அதற்கு கட்டி வந்த பணமும் முழுதாக சேமிக்க முடியும்.
வீட்டை முழு பணம் கொடுத்து வாங்குவதாலும் நல்ல பலனே. பெருமளவு சேமிக்க முடியும். Tax benefits க்காக வீட்டுக் கடன் வாங்குவதால் பலன் இல்லை என்று போன பதிவுகளில் விவரங்களுடன் குறிப்பிடிருந்தேன். சில இடங்களில் வீட்டுக் கடன் பேங்க் செக்யூரிட்டி என்கிறார்கள். பேங்க் பத்திரத்தை தொலைத்து விட்டது என்று அறிவித்து விட்டால் என்ன செக்யூரிட்டி இருக்கு? செக்யூரிட்டி இல்லாத இடத்தில் வீடு எதற்கு?
கடனற்ற வீட்டில் வாழும் நிம்மதி எவ்வளவு சுகமானது என்பதை அறிய வேண்டும்.அத்துடன் முதலில் கடன்களை அடைத்துக் கொண்டு ஒரு சுகமான சேமிப்புடன் நடைபோடும் போது ஒரு வலுவான எதிர்காலத்தை அமைத்துக் கொள்கிறோம் என்கிற நம்பிக்கை மனதில் உருவாகும். எல்லாப் பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஒரு பலத்தை இது அளிக்கும்.
ஆகவே, இனி வரும் தொடர்களில் சேமிப்பு பற்றிப் பார்க்கலாம்.

1 comment:
சேமிப்பு பற்றி விலேவாரியாக எதிர்பார்க்கிறோம்!!
Post a Comment