2009 - சென்ட்ரல் டு திருவான்மியூர் - ராத்திரி பத்து மணிக்கு ஆட்டோ புடிச்சேன். 200 கேட்டார். 150க்கு பேரம் பேசி போயிட்டிருக்கும் போது எப்பிடியும் ஊர் சுத்தி ஏமாத்திருவார் ங்கிற மாதிரி நினைச்சுகிட்டிருந்தேன்.
ராயப்பேட்டை வழியா போகும் போது ஏதோ ஊர் தெரிஞ்சா மாதிரி அவர்கிட்ட ஏன் இப்பிடி போறீங்கன்னேன் . பயப்படாம வாங்க சார் ன்னார். நம்ம கால் ஆடறது தெரிஞ்சிடுத்தா என்று நினைச்சேன்.
மந்தைவெளி தாண்டும் போது எல்லா ஆட்டோ காரங்களும் ஏமாத்தரவங்க இல்லைன்னார். என்ர வாய் சும்மா இருக்காம எப்பிடி சார் அதை முகத்தைப் பார்த்து தெரிஞ்சிக்கிறதுன்னு கேட்டு வைச்சுட்டேன். வண்டியை அங்கேயே நிப்பாட்டி இறக்கி விட்டுருவாரோன்னு கொஞ்சம் பயம் கூட.
பிறகு மெதுவா சொன்னார். நான் AGS ஆபீஸ் ல வொர்க் பண்றேன். பையங்க இன்ஜினியரிங் படிக்கிறாங்க. தேவைக்காக மாலையிலிருந்து இரவு ஒரு மணி வரை ஆட்டோ ஓட்டுவேன் என்றார். ஏமாற்றி பிழைக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
அதுக்கப்புறம் வீடு போறவரை நான் தான் அவரை சார் போட்டு அழைச்சேன்.
இறங்கும் போதும் அவரை என் பெட்டி எடுத்துக் கொடுக்க விடவில்லை. நானே!
சார் உங்க போன் நம்பர் கொடுங்க. சென்னையில் இருக்கிறவரை உங்களைக் கூப்பிடறேன் என்றேன். அவர் சொன்ன பதில் கேட்டு அமைதியாயிட்டேன்.
அவர் 'நான் கொடுத்தாலும் உங்களுக்கு use இல்லை. நான் வசிப்பது தண்டையார்பேட் பக்கம். அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்து போவது சாத்தியமில்லை' என்று விட்டார்.
எக்ஸ்ட்ரா கொடுத்த பணம் மட்டும் வாங்கிக்கிட்டார்.
பாட்சா படம் பார்த்து வந்தா மாதிரி இருந்தது.
1 comment:
இப்படியும் இருக்காங்க
Post a Comment