கையெடுத்து கும்பிடும் கைகள்
கையில் கடப்பாறை தூக்கி
கோவிலையையும் மசூதியையும்இடிக்க புறப்பட்ட போதே
அந்த கூர்மையான கடப்பாறை
நிலத்தில் ஆழமாக
இறங்கி விட்டது.
கும்பிடும் ஆத்திகனே
இடிக்கும்
நாத்திகனாகி விட்டான்.
வம்பிடும் நாத்திகனோ
இடிக்காதே எனும்
ஆத்திகனாகி விட்டான்.
நீங்கள் நடத்தும்
செய்கைகளுக்கு
நீங்கள் வணங்கும்
தெய்வங்களே வந்து
மறுபடியும்
அவதரித்து இன்னொரு
இதிகாசம் வழங்க
வேண்டி வரும்!
இன்று இருப்பவர்களை
இறந்ததாக புரளி கிளப்பி
இருக்கின்ற மற்றவர்களை
சமாதிக்கு அனுப்பி
ஆறுதலடையப் போவதாக
நம்பும் சனமாக
அடிமையாக உருவாக்கி
கொள்கையினால் பிரியாமல்
சுயலாபத்திற்குப் பிரிந்தவர்கள்
வைத்த விதையும்
நிலத்தில் ஆழமாக
இறங்கிவிட்டது.
கொள்கையற்று நீங்கள்
பிரித்த கூட்டம்
இன்று உங்களை
உயிருடன் சமாதிக்கு
அனுப்ப இருக்கிறது.
மொழி வாரி மாநிலமாகப்
பிரித்தால் மொழி வளரும்
நாடு வளரும் செழிக்குமென
நினைத்தவன் விதைத்த விதையும்
வளரத் தெரியாமல் வளர்ந்து
இயற்கை வளத்தையும்
மொழி பிரித்து
நிலத்தில் இறக்கி
விட்டு வைத்திருக்கிறது.
இன்று அதே
மொழியின் காரணத்தினால்
இயற்க்கை வளம்
பகிர மறுக்கப்படுகிறது.
ஆண்டான் அடிமை உறவு
என்றும் உடையாமல் இருக்க
படைத்தவன் விட்டுச் சென்ற
சாதிகளும் உரமிட்டு வளர்ந்து
நிலத்தில் நீண்டு
இறங்கி விட்டது.
இன்று ஆண்டானையும்
அடிமையையையுமே
ஆட்டுவிக்கும் சக்தியாகி விட்டது
அவர்கள் வைத்த விதை.
விஞ்ஞானம் பொருளாதாரம்
வளர்ந்தாலும்
அதையும் உரமாக
உபயோகிப்பதற்கு ஏற்றவாறுதான்
விதைத்த விதை
நிலத்தில் இறங்கியிருக்கு.
இனி பிரிப்பதற்கு
ஏதேனும் உருவாக்க
முயற்சித்தால்
நீங்கள் விதைக்கும் விதை
உங்களை
இதே மண்ணில் சமாதியாக்காவே வளரும்.
3 comments:
இனி பிரிப்பதற்கு
ஏதேனும் உருவாக்க
முயற்சித்தால்
நீங்கள் விதைக்கும் விதை
உங்களை
இதே மண்ணில்
சமாதியாக்காவே வளரும்.//
அழகாக அருமையாக ஆழமாகப்
பிரிவினைக் குறித்துச் சொல்லிப்போகும் கவிதை
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
ரமணி சார் ! மிகவும் நன்றி.
கலக்குங்க ஐயா!!
Post a Comment