தென்னிந்திய முதல்வர்கள் சந்திப்பு
இன்று இரு மாநில முதல்வர்கள் கோர்ட் உத்திரவு படி சந்திக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இதை நான் வேறொரு விதமாகக் கற்பனையாக நினைக்கிறேன்.
இனி வரும் காலங்களில் நான்கு தென்னிந்திய முதல்வர்களும் ஒரு சுழல் முறையில் ஒவ்வொரு மாநிலத்தின் சிறந்த சுற்றுலா பகுதியிலோ அல்லது அனைவரும் இறை நம்பிக்கை உள்ள முதல்வர்களானால் ஒரு திருத்தலத்திலோ மாதம் ஓரிரு முறை சந்தித்து ஓரிரு மணி நேரம் ஓர் கலந்துரையாடல் நடத்தினால், அல்லது ஒரு சின்ன டீ பார்ட்டி சந்திப்பு நடத்தி வந்தால் அவர்களுக்குள்ளாக ஒரு சுமுகமான நட்புறவு உருவாகும்.
சந்திப்பில் அரசியல் பொருளாதாரம் சமூக உறவுகளுக்கான ஒரு அடித்தட்டு விவாதம் கலந்துரையாடல் நடத்தி வந்தால் பிற்காலத்தில் பிரச்சனைக்குரிய நதி நீர் பங்கீடு, மாநிலங்களுக்கிடையே ஆன வர்த்தகம் போக்குவரத்து போன்றவற்றில் பேச்சு வார்த்தை நடத்தும் போது மிக இலகுவாக எல்லாம் நடை பெறும்.
பிரச்சனைக்குறிய வற்றை கொஞ்சம் தாமதமாக கலந்துரையாடினால் அதற்குள் அவர்களுக்குள் ஒரு நல்ல பரஸ்பர நட்பு உருவாகிவிடும். நாளை மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தும் போது ஒரு தனி மாநிலத்திற்கான அணுகுமுறை இல்லாமல் ஒட்டு மொத்த தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் ஏற்றவாறு ஒன்றாக செயல் பட வாய்ப்பு ஏற்படுத்தக் கூடும்.
முதல்வர்கள் அளவில் ஒரு நட்புறவு வந்தால், பிற்காலத்தில் நான்கு மாநில மக்களுக்கு இடையிலும் ஒரு சகோதரத்துவம் வளர ஏதுவாக இருக்கும். இனி நீ என்ன வந்து எங்களை கொடு என்று கேட்பது. நாங்களே கொடுக்க மாட்டோமா என்கிற அளவுக்கு நட்பு வளர உதவும்.
ஹலோ ஹலோ ஸ்டாப் ஸ்டாப்.
என்ன கனவு ரொம்ப ஓவராப் போய் கிட்டு இருக்கு!!
ஓ ! அப்பிடீங்களா ! பரவாயில்லை. ஒரு நாள் நடக்கட்டும்.
முதல்வர்கள் கவனிப்பார்களா?
4 comments:
//என்ன கனவு ரொம்ப ஓவராப் போய் கிட்டு இருக்கு!!//
அல்ல; இது பகற்கனவா இருக்கு!!
Yessu. நன்றி பழமை.
ஏற்கனவே அப்படி ஒரு சந்திப்பு நடக்குதே சேது
ஆனாலும் சந்திக்கவேண்டிய நிர்பந்தம் இல்லைன்னு நினைக்கிறேன். முதல்வர்கள் சேர்ந்து பேசி முடிவெடுக்கலாம் அப்படின்னு ஒரு கருத்துதான் சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.
பழமை சொன்னதுபோல இது கனவு பகற்கனவேதான்..
Post a Comment