Thursday, August 23, 2012

தோல்வி

தோல்வி 

கண்டு துவண்டதும்  இல்லை
துன்பப்படவும் தெரிவதில்லை
தோல்வியைத் தவிர 
எதுவும் அறியாத போது!

இதோ இன்னொன்று நம் முன்னே 
வருகிறதென்று தெரிய  வரும் போது
தளராத எனக்கு  
முன்கண்ட தோல்வியை விட
எவ்வகையில் சிறந்ததென்று 
யோசிப்பதைத் தவிர 
வேறெதுவம் வருவதில்லை!

சரி! தோல்வி என்றால் என்ன?
நினைப்பது நடக்கா விட்டால் 
அது தோல்வியா அல்லது
நடப்பவற்றை நினையாததா?

தோல்வியைக் காணும் போதெல்லாம்
துவண்டு விழுவது அறியாத எனக்கு
தோல்வி என ஏற்றுக் கொள்ள வேண்டியது 
அடுத்து நடப்பவைகளைக் கண்டு அஞ்சுவதே!

2 comments:

vimalanperali said...

தோல்விகள் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்கிறார்கள்.உண்மைஇப்படியிருக்கையில் நமக்கேது தோல்வி/

ஓலை said...

:-) நன்றி விமலன்.