ஒரு மொழி கற்கும் வாய்ப்பை சிறு வயதில் இழந்து விட்டால் பிறகு வயதான பிறகு கற்பது சுலபமல்ல! பாடவழித் திட்டமாக கற்பிக்கப்படும் போது ஒரு மொழியின் அடிப்படை இலக்கணத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்வழிக் கல்வியிலேயே ப்ளஸ்2 வரை அரசுப்பள்ளியில் படித்த போது ஆங்கிலம் இரண்டாம் பாடமாக இருந்தால் அதைக்கூட முறையாக கற்றுக்கொள்ள பிரயத்தனப்படவில்லை என்றால் பின்னாட்களில் கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் புரிந்து கொள்ள மற்றவர்களுடன் பேசத் தடுமாறிய காலமும் நிறைய வரும்!
பின்னாட்களில் இந்த கம்யூனிகேஷன் பிரச்சனையினாலேயே பல ப்ரொமோஷன்களை இழந்து கடைமட்ட ஊழியனாகவே வாழ வேண்டி வருகிறது பலருக்கு!
ஆங்கிலம் ஹிந்தி சரளமாகப் பேசத்தெரியாத பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் மாநிலத்தை விட்டு தங்கள் கட்சியின் அகில இந்திய தலமைப்பதவியில் இடம்பெற முடியாதவர்களையும் பார்க்கிறோம்!
ஆங்கிலம் ஹிந்தி தெரிந்த பல மாநில மக்கள் ரயில்வே, ias, ifs, ips எக்ஸாமெல்லாம் ஆங்கிலம் ஹிந்தியில் எழுதி சீக்கிரம் அத்துறையில் அதிகாரிகளாகி வருகிறார்கள்! ஆனால் ஹிந்தி மறுப்பு என்ற பெயரில் வேறு மொழிகளைக் கற்காமல், எல்லா போஸ்ட்லையும் ஹிந்திக்காரன் வந்து நிற்கிறான்னு அலறும் நிலைக்கு மக்களைத்தள்ளுவது இத்தகைய குணமே! தவறு அவர்கள் மேலில்லை என்று உணரும் காலத்தில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் போது தெரியும்.
பொதுவாக தெலுகு மக்கள் அமெரிக்காவில் நிறைய பார்ட்டி வைத்து கொண்டாடுவார்கள். உரையாடல்கள் தெலுங்கிலிருக்கும். பிற மாநிலத்தவர்கள் சேரும்போது உரையாடல் ஆங்கிலம் கலந்த ஹிந்தியோடு சலனமின்றி மாறிவிடும். ஹிந்தி தெரியாத தமிழ் மக்கள் மட்டும் அநாதையாக ஒதுங்குற நிலைவருது!
சிறுவயதில் கற்கக்கூடிய வாய்ப்பை இழந்தால் பின்னர் தேவைப்படும் போது கற்றுக்கொள்ளலாம் என்றால் நினைத்தால் கூட வராது!
ஹிந்தியும் ஆங்கிலமும் சரளமாகப் பேசக்கூடியவர்கள் வாயைப் பார்த்து கிட்டு அவங்க வளர்ச்சியைப் பார்த்து பொறாமைபட்டுகிட்டு நிற்க வேண்டியது தான்!
தாய்மொழியை உயர்வாக நினைப்பவன் பிற மொழிகளையும் கற்றுத்தேர்ந்து அதன் பிறகு அவர்கள் தன் தாய்மொழியில் எழுதும் போது செழுமை பெற்ற சொற்கள் வார்ததைகள் வாக்கியங்களைப் படைக்க முடியும்!
ஆதிசங்கரர் அருளிய சமஸ்கிரத ஸ்தோத்திரங்கள் நீங்காத நீண்ட ஆயுள் பெற்றவை! காரணம் ஒரு மொழியில் அவருக்கு கிடைத்த பற்று, அறிவு, ஞானம்! அவை இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து செல்லும்!
அமெரிக்காவில் கல்லூரி க்ரெடிட்காக பள்ளிகளில் ஸ்பானிஷ், ப்ரென்ச், ஜெர்மனி மற்றும் பிற மொழிகள் கட்டாயப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அதில் அதிகம் மாணவர்கள் எந்த மொழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள், எத்தனை வருடம் கற்கிறார்கள், ஏன் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்வது உதவியாக இருக்கும். இதைத் தவிர நம் தமிழ், தெலுகு மக்கள் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக மூன்றாவது மொழியும் திணிப்பதுண்டு.
இன்னொரு மொழி கற்பதைத் தவிர்ப்பதால் நஷ்டம் பிறருக்கல்ல! அது உங்களுக்கே! உங்கள் குடும்பத்திற்கே!
மொழி கற்போம்!
No comments:
Post a Comment