தலைகுனியும் மானுடம்
பிஞ்சுடலைப் பறித்து
பசியாற நினைக்கும் வெறியர் கூட்டம்
வெல்வது மதமும் அல்ல மானிடமும் அல்ல
மதவெறியைத் தூண்டுபவனுக்கு
மாலையிடும் கயமைத்தனம்!
பிஞ்சுடலைப் பறிப்பதால்
யாரை வெல்ல நினைக்கிறாய்
இவ்வுலகில் எவரும் நிலையான
நண்பனுமல்ல எதிரியுமல்ல!
பறித்தவை மண்ணுள் மறையும் முன்
உன் மேல் எழும் வெறுப்பு கனலாய் மாறிடும் !
எரியும் கனலில் வெந்து போவப் போவது
உன் மதவெறிக் கூட்டம்!நீ பிஞ்சைப் பறிக்கவில்லை
மனித குல கழிவிரக்கத்தைப் பறிக்கிறாய்!
மரித்துப் போகிறது மானிடம்
வெட்கப்படு உன் செயலைக் கண்டு !
மதவெறியால் மானிடம் அழிகிறது
மனிதகுலம் அழுகிறது
மனிதகுலம் அழுகிறது
இவ்வுலகில் வெல்லப் போவது
நீ வெல்ல நினைக்கும் மதமன்று
அன்பும் பாசமும் கொண்ட மானிடம் மட்டுமே!