நமது நண்பர்கள் பிரபலமாவதை, வெற்றியடைவதைப் பார்த்து, நான் பிரபலமாவதை விட பெருமிதம் கொள்கிறேன். ஒருவரது வெற்றியின் பின் ஒரு அயராத முயற்சி உள்ளது. அதில் எத்தனை சதவீதம் நாம் முயன்றுள்ளோம் என்று பார்க்கும் போது நமது நண்பனின் வெற்றியின் ரகசியம் புலப்படுகிறது.
பல தடவை ஏதோ ஒன்றில் வெற்றி அடைய வேண்டும் என்று முயற்சித்துள்ளேன். அனால் வெற்றி கிடைக்கும் முன்னரே தடங்கலோ தவற விட்டவையோ தான் முன் வந்து நிற்கிறது. ஆகவே, வெற்றி அடைந்த நண்பனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பெருமை கொள்கிறேன்.
வெற்றி அடையாததால் அல்லது பிரபலமாகாததால் நமது வாழ்க்கையில் ஏதேனும் மாறுகிறதா? இல்லை! அடுத்த முயற்சியை நோக்கி நமது நடை பாதை அமைகிறது. வெற்றி பெற்ற நண்பனின் வாழ்விலோ பெற்ற வெற்றியைத் தக்க வைக்கப் போராட்டம் நடைபெறுகிறது. இருப்பினும் அவன் வாழ்க்கையிலும் ஏற்படும் போராட்டத்திலும் வெற்றியைக் காணும் போது பெருமை கொள்கிறேன்.
வாழ்வின் இறுதி நாள் வரை இத்தகைய வாழ்வை நோக்கிச் செல்லும் நம் பாதையும் ஒரு வெற்றிப்பாதையே !
4 comments:
Not a comment:))
pazhama vaaththiyar kannula pada munna pizhai thiruththungo. illanna motta veyilla mutti podanum:))
இது ஒரு முக்தி நிலை..
பாலா சார்! தெரிந்த வரை பிழை திருத்தியுள்ளேன். நன்றி. மேலும் தவறு இருந்தால் தெரிவிக்கவும்.
பழமைக்கும் பிழை திருத்தப் பதிவு போட வாய்ப்பு தர வேணாமா ? :-)
பாலாசி ! சாமியாராக்காதப்பா ! பிள்ளைகுட்டிக்காரன்.
:-)
Post a Comment