காரத்தொழுவு - இது என் அம்மா பிறந்த ஊர். ஒரு தடவை தான் போயிருக்கிறேன். ஆனால் சிறுவயதிலிருந்து இன்று வரை இந்த ஊர் பெயரை வீட்டில் கேட்காத நாட்கள் குறைவு.
அம்மா தன் சகோதரன் சகோதரிகளோடு சிறுவயதிலேயே இந்த ஊரை விட்டு வந்தாலும், ஊரையும் ஊர் மக்களையும் பற்றி பேசாத நாட்கள் இல்லை. அம்மா பாட்டி அனைவரது அடிமனதிலும் காரத்தொழுவு பற்றி ஒரு ஆழ்ந்த நினைவலைகள் இருந்து கொண்டே இருந்ததை சிறு வயதிலிருந்தே அறிவேன்.
என் மாமா, பாட்டி மற்றும் அம்மா அடிக்கடி உரையாடலில் மிகவும் அதிகமாக குறிப்பிட்ட ஒரு குடும்பம், என் மனதிலும் அந்த குடும்பத்தின் மீதான ஒரு மரியாதை மிகவும் உயர்ந்து இருப்பதாக நினைப்பது, தியாகராஜ தீக்ஷிதர் - குஞ்சம்மா தம்பதியரின் குடும்பம்.
தீக்ஷிதரும் அவர் மனைவியும் நான் பிறக்கும் முன்னரே இவ்வுலகில் இல்லை. ஆனால் அவர்கள் பெயரில் உள்ள ஆளுமை எங்கள் வீட்டில் இன்றும் உணரலாம்.
என் அம்மா குடும்பத்தைப் போல, தீக்ஷிதர் குடும்பத்திலும் நிறைய குழந்தைகள் உண்டு. எல்லோரும் இன்று முதியோராய் தளர்ந்து கொண்டிருந்தாலும், எங்கள் குடும்பத்தின் மீதுள்ள அன்பில் இன்றும் உயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
தீட்சிதர் மகன்களில் ஜெயராமன் அவர்களை மட்டும் சில தடவை பார்த்திருக்கிறேன். இந்த தடவை எங்களது அடுத்த தலைமுறை கல்யாணத்திற்குப் போயிருந்த போது, தீக்ஷிதரின்இன்னும் இரு மகன்களையும் அவர்கள் குடும்பத்துடன் அங்கு ஒரு சேரப் பார்த்த போது ஆச்சரியமும் மரியாதையும் கலந்தோடியது.
இளையவர் விசு அவர்களிடம் போய் கொஞ்சம் உளறி கொட்டினாலும், அவரது எளிமையும், எப்போதும் அமைதியாகவே இருக்கும் அவரது அண்ணன் நாகு வையும் பார்த்து மனதில் இவர்களை ஒரு போட்டோ எடுத்து பத்திரப் படுத்திக் கொள்ளத் தோன்றியது. நாகு அங்கிளின் மனைவி தான் பழைய விஷயங்கள் சிலவற்றை சொல்லி பரவசப் பட்டுக் கொண்டார். ஆனால் பரவசத்திலிருந்தது நான் தான்.
இவர்கள் என் அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஓரிரு போட்டோக்கள் எடுத்து வைத்துக் கொண்டேன். விவரங்களை என் அம்மாவிடம் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் முகத்தில் ஒரு பரவசம் தெரிய வந்தது.
போன வாரம் தீக்ஷிதரின் மகளும் என் அம்மா தன் நெருங்கியத் தோழியாக இன்று வரை நினைத்து வரும் அவரது மகள் இந்திராவை போய் பார்த்து வந்திருக்கிறார்.
நாங்கள் அறியாமலேயே எங்கள் குடும்பத்தில் ஒன்றியிருக்கும் தீக்ஷிதர் குஞ்சம்மா தம்பதியருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.