Friday, August 30, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்பிடி - 7

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்பிடி - 7

போன பதிவில் ஒரு emergency கையிருப்பு பணத்தின் அவசியத்தைச் சொல்லியிருந்தேன். அடுத்து செய்ய வேண்டியது என்ன?

இந்த அவசரத்தேவைக்கு சேமித்த பணம் எத்தனை நாட்களுக்கு உதவும். அது போதுமா?

நம் வேலை போய் விட்டாலோ அல்லது இரண்டு பேர் வேலை செய்யும் வீட்டில் ஒருவர் வேலை செய்வதை  நிறுத்திக் கொண்டாலோ, அல்லது இருவரில் ஒருவருக்கு வேலை போய் விட்டால் என்ன செய்வது? இரண்டு பேருடைய வருமானத்தின் அடிப்படையில் போட்டு வைத்த பட்ஜெட்டில் இனி ஒருவரது வருமானத்தில் எவ்வாறு சமாளிப்பது?

சம்பளமற்ற விடுமுறையில் இருவரில் ஒருவர் சில காலம் செல்ல முடிவு செய்து வீட்டு பிரச்சனைகளை சமாளிக்க அல்லது பிரசவத்தை சமாளிக்க, பெற்றோர் உடல் நிலை சரியில்லாது போகிற காலங்களில் கொஞ்ச நாள் சம்பளமில்லைன்னாலும் பரவாயில்லை, போய் உதவி செய்ய முடிவதற்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.

வீட்டில் இருவரும் வேலை செய்யும் போது இரண்டு குழந்தைகள் இருந்தால் daycare expenses ஒருவரது வருமானத்திற்கும் மேல் ஈடு கட்ட முடியாமல் போகும் போது ஒருவர் வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்ப்பதன் மூலம் சமாளிக்க சில காலம் வேலையை விட்டுவிட்டு இருக்க முடிவதற்கு என்ன செய்ய வேண்டும்.

வேலையை விட்டு விட்டு குழந்தைகளைப பார்ப்பதை விட வேலை செய்து கிடைக்கும் வருமானம் முழுவதும் போனால் கூட ஒரு லாங் டெர்ம் பெனிபிட் இருக்கு. குழந்தை பராமரிப்பு பற்றிய பதிவல்ல இது. இது மாதிரி நிகழ்வுகளில் நம்மைத் தயார் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதே பதிவின் நோக்கம்.

இந்த மாதிரி நிகழ்வுகளில் மாத பட்ஜெட்ல் துண்டு விழுவது மட்டுமல்ல, வீட்டில் மன அமைதி போய்  அல்லது சிலருக்கு மன அழுத்தம் (depression ) வர வாய்ப்புண்டு. எப்பிடி சமாளிப்பது. கடன் வாங்காமல் இதை சமாளிப்பது எவ்வாறு?

நமது தேவைக்கு நமது விருப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நம்மைத் தயார் செய்து கொள்வது எப்பிடி?

ஏற்கனவே மாத பட்ஜெட் போட்டுவிட்டதால் அத்தியாவசியத் தேவைகளுக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவுத் தேவைப் படும் என்பது திட்டவட்டமாகத் தெரியும் இப்போது. குறைந்தது 3 முதல் 6 மாதம் வரை இந்த மாத அத்தியாவசியத் தேவைகளுக்குத் தேவையானவையை முன்கூட்டியே சேமித்து வைத்தால், மேற் கூறியுள்ள பிரச்சனைகள கடன் வாங்காமல் எளிதில் சமாளிக்க முடியுமா? 3 மாதத்தில் திரும்ப வேலை கிடைக்காமல் போய்விட்டால், அது எட்டு மாதமாக நீட்டித்தால் என்ன செய்வது?

இப்போது தான் படிக்க ஆரம்பித்துள்ள Dave Ramsey சொல்வது 3-6 months க்கு தேவையானப் பணம் முன் கூட்டியே சேமியுங்கள் என்று.

அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தது 6 மாத சேமிப்பு தேவை. இது எவ்வளவு கடினமானாலும் கண்டிப்பாக செய்ய வேண்டும். இது ஒன்றே உங்களை மறுபடியும் கடன் வாங்க இட்டுச் செல்லாத நிலையை ஏற்படுத்தும். வீடு வாங்க வாங்குகிற கடனுக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்காகவும் தினசரித் தேவைக்காகவும் வாங்கும் கடனையும் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. இரண்டும் வேற.

ஆனால் நான் 8 ஒன்பது வருடம் முன் செய்தது இதை விட வித்தியாசமானது.

நண்பர்கள் அனைவரும் வீடு வாங்கும் போது எனக்கும் வீடு வாங்கனும் என்ற நமைச்சல். அதற்குத் தயார் பண்ணிக் கொள்ள 8-9 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தேன்.

ஒரு வீடு வாங்கத் தேவைப்படும் primary லோன்க்கு 10% முதல் 20% வரை down payment (Our initial own contribution)  போடுபவர்களுக்கு 6% வட்டிக்கு குறைவாகவும், அதை விட குறைவாக down payment போடுபவர்களுக்கு வட்டி அதிகமாகவோ அல்லது வீட்டு லோன் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு நான் வீடு வாங்கும் காலத்தில் இருந்தது. இதை சரி கட்ட எல்லோரும் ஒரு செகண்டரி லோன் அதிக வட்டியில் எடுத்து primary  லோன் க்கு down payment  போடுவார்கள். பிறகு இரண்டு லோன் க்கும் சேர்ந்து வட்டியும் முதலுமாய் கட்டி வருவார்கள்.

நான் முடிவு செய்ததது செகண்டரி லோன் வாங்கக் கூடாது என்று. Primary லோன் க்கு 20% down payment போடணும். இது மட்டுமல்ல, வீடு வாங்கி கொஞ்ச நாளில் செய்து வந்த வேலை போய்  விட்டால் 6 மாதம் சமாளிப்பது எப்பிடி. வீடு வாங்கிய பிறகு லோன் அமௌண்ட் கூட budget ல் இடம் பெற்று விடுமே.

இதற்காக 3 வருடங்கள் சேமிக்க ஆரம்பித்து விட்டேன். வீண் செலவுகள் தவிர்த்து விட்டேன். வீட்டில் மனைவி பொறுமை இழந்து விட்டார்கள். வீட்டுத் துணையின் உதவி இல்லாமல் எந்த மாதந்திர பட்ஜெட் எதுவும் வொர்க் ஆகாது. வீட்டிலுள்ள சிறு குழந்தைகளின் தியாகங்கள், மனைவி மக்களின் உதவியில்லாமல் கடனற்ற வாழ்வு சாத்தியமில்லை. என் தந்தை வழியிது, என் வழியில் நான் பார்த்து வருவதும் அதே.

கடைசியில் 17-18% down payment உடன் 6 மாத saving உடன் வீடு வாங்கினேன். 3 வருடம் பொறுத்ததால் வீட்டு விலை அந்த காலகட்டத்தில் கொஞ்சம் ஏறியது உண்மை. ஆனால் செகண்டரி லோன்க்குப்  போக வேண்டிய அவசியமில்லாமல் போனதோடு இன்னும் 15-20 வருடம் செகண்டரி லோன் கட்ட வேண்டிய அவசியமில்லை. மாத பட்ஜெட் இல் நெருக்கடி இருக்காது. கட்டியிருக்க வேண்டிய லோன் வட்டியையும், வீட்டு விலை ஏற்றத்தையும் பார்த்தால் இழந்து எதுவுமில்லை மக்கா.

இந்தப் பணமெல்லாம் primary லோன் க்கு அதிகம் கட்டி கூடிய சீக்கிரம் அடைக்கப் பார்க்கக் கூடிய ஒரு தைரியத்தை இந்த செயல் அளிக்கிறது.

இப்போது அந்த 6 மாத தேவைக்கான சேமிப்பை எதற்கு உபயோகப் படுத்தனும், எதற்க்கெல்லாம் கூடாது என்று

அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

2 comments:

நவீன் said...

இது மாதிரி வீடு கட்ட கடன் வாங்கறதுல இருக்குற
ப்ளஸ் மைனஸ் சொல்ல முடியுமா....?

குறைஞ்சது பத்து சதவிகிதம் வட்டி கட்டனும்...
அதுவும் பதினைந்து வருடங்களுக்கு. இப்போ என்னமோ அந்த இடத்தை வங்கியின் பெயருக்கு பதிவு பண்ணி குடுக்கணும் என்று புதுசா ஒரு விதி வந்துட்டதா சொல்றாங்க, சரியாய் தெரில...
என் நண்பர்கள் அனைவரும் சொல்லுற காரணம் என்னனா ஒவ்வொரு வருடமும் நாம் திருப்பி செலுத்தும் பணத்தை வருமான வரி விலக்கா காட்டிக்கலாம் என்பது தான்... ஒரு வகையில நிறைய பேரு வருமான வரிக்காகவே வீடு / வீட்டு கடன் வாங்குறாங்க.


என்னுடைய சந்தேகம் இது தான்

வீடு கட்ட இது மாதிரி வீட்டு கடன் எடுப்பதை தவிர வேறு வழி ஏதும் உண்டா..?

ஓலை said...

நவின் நன்றிங்க. சில நுணுக்கங்களைச் சொல்ல முயற்சிக்கிறேன். ரொம்ப விவரமாக தனிப் பதிவாகத்தான் எழுத முயற்சிக்கனும்.

வீடு கட்ட வங்கிக் கடன் மட்டுமே safe. பெற்றோர் உறவினர் தவிர்த்ததனிநபர், தனியார் சிறு நிறுவனங்கள் kodukkum லோன்கள் நம்பத்தகுந்த்து இல்லை.