Thursday, February 21, 2013

சகோதரத்துவம்

சகோதரத்துவம் 

ஒரு தலை துண்டிப்புக்கு
ஒரு மரண தண்டனை
ஒரு குண்டு வெடிப்புக்கு
ஒரு கொலை வெறியாட்டம்
ஆடத் துடிக்கும் கூட்டம்

இன்னொரு துர்மரணத்தையும்
எதிர் நோக்கையில்

ஒன்றாய் இருந்தாய்
பிரிவினையால் பிரிந்தாய்
பிரித்தவன் பிரிந்து சென்றான்
பிரிந்தவர்கள் 
பிரிந்து கொண்டே செல்கின்றனர்!

எல்லாம் தொடங்கியது
எங்கிருந்து என்றுணர்ந்து 
பிரிந்தவர் ஒன்றுனரும் 
காலம் வரை 
இன்னொரு கொலை
பாதகச் செயல் நடவாமல் 
காக்க வேண்டியது
நம் சகோதரத்துவம்!

ஒன்றினைவாய் ஒருங்கினைப்பாய்
ஒற்றுமையை விட
இனிமைஎதுவும் இல்லை
என உணர்ந்திடுவாய் 
ஒரே நாட்டில் 
சகோதரர்களே!

1 comment:

malar balan said...

காலம் ஒருனாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின் றோம்
வந்ததை எண்ணி அழுகின் றோம்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நாம்
அழுதுகொண்டே சிரிக்கின் றோம்

கவலைவிடு சகோதரா