Monday, December 30, 2013

புத்தாண்டு நல்வாழ்த்துகள்

2013

பல தோல்விகளை அவமானங்களை சந்தித்த வருடம். தோற்கும் திட்டங்களை செயல் படுத்தி வெற்றி காண்பித்தும் தோற்கடிக்கப் பட்ட வருடம்.

தோல்வி கண்டு என்றுமே துவண்டதில்லை, ஏன் எனில் தோல்வியையே அதிகம் பார்த்திருப்பதால்.

எதிர்பாராத அவமானங்கள் கண் முன்னே வந்து நிற்கும். எதிர்பாராத இடத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் மனதில் வலியை ஏற்படுத்திய காலம். கையறு நிலையை உணர்ந்த காலம்.

அருகில் செல்லாத இடத்தில் கூட அவமான ஏச்சுகளை கேட்ட வருடம். எதிர்த்துப் பேசி பழக்கமில்லாததால் கேட்பவற்றை துடைத்துக் கொண்டு, ஒரு மாற்று வழி அமைத்துக் கொள்வதையே செயல் படுத்தி வருவதால் இதிலும் துவண்டு போகவில்லை.

சிறு கை வலி, பெருத்த செலவுகளை உருவாக்கினாலும், முன்னேற்படுத்திக் கொண்ட இருப்புகள், வாய்ப்புகள், வாழ்க்கைத் துணை உதவியுடன் சுலபமாக கடந்து செல்ல முடிகிறது.

எனது வாழ்க்கைக்கும் சிறு எறும்புகளின் வாழ்க்கைக்கும் பெரும் வித்தியாசம் கிடையாது. திட்டமிட்ட இலக்கை நோக்கை நோக்கி ஊர்வது. தடைகள் மற்றும் அவமானங்கள் நேரும் நேரத்தில் திட்டமிடாத வேறு இலக்கை நோக்கி நகர்ந்து தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதே சமீப கால வாழ்வாகி விட்டது.

இவ்வுலகில் சகல பிராணிகளுக்கும் வாழ்விருக்கிறது. ஆதலால் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டு நகர்வதே வாழ்க்கை. பெரும் இடி விழும் நேரத்தில் பக்கத்தில் ஒரு அருமையான சாலை செல்வதைப் பார்க்கும் வாய்ப்பு உடன் அமைவது தோல்வி கண்டு துவளாதே மைந்தனே என்று சொல்வது தெரிகிறது.

வருடம் சீக்கிரமே கழிந்து விட்டது.

2014

பெரும் மாற்றம் எதுவும் இல்லாவிட்டாலும், அடுத்த கட்டத்திற்கான அடித்தளம் இட்டாகி விட்டது. நல்ல படி நகர வேண்டியது நகரும். வயதிலும் ஒரு புது இலக்கைத் தொடும் வருடம்.

சிறு சிறு படிகளில் ஏறி மலை உச்சியை அடைந்தாலும் உடன் சுமந்த வலிகளால் வாழ்க்கையை நிரப்பாமல் ஒரு இனிதான சுகமான காற்றை சுவாசிக்கும், சுவாசிக்கப் போகும் நினைவில் படிகளை சிறுக சிறுக ஏறுவோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Friday, September 27, 2013

குழந்தை மனசுல

பையன் 3வது படிக்கும் போது ஒரு புது துணை ஆசிரியர் வந்து சேர்ந்தார். பேச்சில் கொஞ்சம் அதிகமா பிரிட்டிஷ் accent இருக்கும். அவரை பையனுக்கு ரொம்ப பிடிக்கும். அடிக்கடி சொல்லுவான். நடுவில வேற பள்ளிக்குப் போயிட்டார். பையன் ரொம்ப வருத்தப் பட்டான். அவர் போன பள்ளிக்கு என்னை மாத்துன்னு கொஞ்ச நாள் அடம் பிடிச்சான்.

2 வருடம் கழித்து இந்த வருடம் திரும்பி இவன் பள்ளிக்கே ப்ரொமோஷன்ல வந்துட்டார். பையனுக்கு செம சந்தோஷம்.

இப்ப நீ அந்த பள்ளிக்குப் போயிருந்தா என்னடா ஆயிருக்கும்ன்னா பையன் ஒரே வழிசல்.

இன்னிக்கு 15 நிமிடம் முன்னமே பள்ளிக்கு வந்துட்டோம். என்னடா பண்ணப் போறேன்னா அவர்ட்ட போய் பேச நேரம் இருக்குங்கிறான். எப்பிடியாவது தினமும் ஒரு தடவைப் போய் அவரைப் பார்ப்பானாம். என்னடா பேசுவேன்னா ஏதோ ஒரு டாபிக் அப்பிடிங்கிறான்.

ஒரு 26‍ 27 வயது ஆம்பிள்ளை வாத்தி ஒரு குழந்தை மனசுல இடம் பெற்றிருப்பது ஆச்சரியமா இருக்கு.

எனக்கு இப்பிடி ஒரு வாத்தி அமையலையே. கை முட்டியைப் பேர்த்தாங்க, முட்டி போட வச்சாங்க, 2 மாசம் தரையில் உட்கார வைச்சாங்க, மைதானத்தில ஓட விட்டாங்க.

வாத்தியைப் பார்த்தா நான் ஒடுவேன். பையன் தேடிப் போய் பார்க்கிறான்.

#உனக்கு அப்பன் சரியில்லைடே

Thursday, September 12, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 11

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 11

பெரும்பாலான வயதானவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அவர்கள் பிள்ளைகளைச் சார்ந்தே retire ஆன பிறகு வாழ வேண்டிய நிலை இருக்கிறது. ஒன்று உடல் நலம் இடம் கொடுத்தாலும் தேவைக்கேற்ப வருமானம் retirement காலத்தில் இருப்பதில்லை. பிள்ளைகளை அண்டி கூட இருக்க விரும்பினாலும், வளர்ந்து வரும் நகரச் சூழ்நிலைகளில் இடம் போதுவதில்லை, மருத்துவச் செலவுகள் சமாளிக்கும் அளவுக்கு பிள்ளைகளுக்கும் வசதி இல்லாமல் போக வாய்ப்பு இருக்கு.

ஒரு நாகரீகமான கௌரவமான வாழ்வு வாழ்ந்த நமக்கு நமது ஓய்வு காலத்தில் ஒரு நல்ல வாழ்வு அமைத்துக் கொள்வது எப்பிடி? ஒவ்வொரு மனிதருக்கும் டிகினிட்டி இன் லைப் தேவை. கட்டிய மனைவி வேலை செய்யா விட்டாலும் அவர்களுக்கும் நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு திடமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நமது 40 வயதிலிருந்தே சேமிக்கத் துவங்க வேண்டும்.

எமெர்ஜென்சி fund சேர்த்த பிறகு அடுத்து செய்ய வேண்டியது ஒரு retirement fund ல் சேமிக்கத் துவங்குவதே. மாத வருமானத்தில் குறைந்தது 15 சதவீதம் சேமிக்க வேண்டும்.

எவ்வளவு சேமித்தால் ஒரு திடமான வாழ்வு அமையும் என்று நம்மால் இப்போதே சொல்ல முடியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி சேமிக்கத் துவங்கி அதற்குள் வாழ வழி வகுத்துக் கொள்ள இப்போதே முடியும்.

மாதம் 20000 ரூபாய் வருமானத்தில் நாம் இப்போது வாழ்கிறோம் என்றால், ஓய்வுக்குப் பிறகு இவ்வளவு வருமானம் ஓய்வு நிதியிலிருந்து வருமளவுக்கு சேமிக்க முடியுமா? அந்த கால கட்டத்தில் பணத்தின் மதிப்பு எப்பிடி இருக்கும்? 10000 மட்டுமே வந்தால் எப்பிடி வாழ்வது?

Retirement  வாழ்வு அனைவருக்கும் கடினமானதே. அதை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்வதுடன், நம்மால் முடிந்த அளவு எதிர் கொள்வதே நம் நோக்கு. அதற்காக இப்போதே சேமிக்கத் துவங்குவோம்.

எவ்வளவு சேமிக்க வேண்டும்? - இப்போது குறைந்தது மாதம் 15%. நமது 52 வயதில், வீட்டுக் கடன், கார் கடன் எதுவுமில்லாமல் இருக்கும் போது, பிள்ளைகள் பெரியவர்களாகி கல்லூரிக்குப் போய் அவர்கள் வாழ்வை நோக்கி பயணிக்கும் போது , மாத சம்பளத்தில் பெரும் பகுதி retirement நோக்கி சேமித்தால், சொல்லுங்கள் நண்பர்களே நம்மால் எதிர்க்கொள்ள முடியுமா முடியாதா? தேவைப்பட்டால், உடல்நலம் நன்றாக இருக்கும் நிலையில் இன்னும் சில வருடங்கள் உழைத்தால் நம்மால் சேமிக்க முடியுமா முடியாதா?

மிக குறுகிய காலத்தில் கடன்களை அடைத்து விட்டால், பலகாலம் retirement மற்றும் பிள்ளைகளின் கல்விக்கு எளிதாகச் சேர்க்க முடியும். இதற்காகவே சொல்கிறேன். கடன் வாங்காதீர்கள். கடன்களை உடன் அடைத்து விடுங்கள். சேமியுங்கள்.

எவ்வளவு பணம் சேர்ந்திருந்தால் நிம்மதியாக இருக்க முடியும்? - இது ஒவ்வொரு மனிதருடைய மனநிலை சூழ்நிலை பொறுத்தது. நம்முடைய ஒட்டுமொத்த savings லிருந்து  கிடைக்கும் 10% வருமானத்தில் நம்மால் ஒரு வருட வாழ்க்கையை ஓட்ட முடியும் என்றால் நீங்கள் சேமித்து உள்ள பணம் மிக நன்று.

நாம் இன்னும் பத்து வருடத்தில் retire ஆகப் போகிறோம் என்றால், இணையத்தில் உள்ள ஒரு retirement calculator எடுத்து, ஒரு குறிப்பிட்ட இலக்கு அமௌன்ட் அடைய மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். இதன் படி சேமித்து வாருங்கள்.

இப்போது எதில் சேமிப்பது ? - சேமிக்கும் பணம் இழக்காமல் இருந்திட வேண்டும், inflation 4% + வட்டி/டிவிடெண்ட் வருமானம் குறைந்தது 8%-10%, ஆக மொத்தம் 12%-14% return வரக்க கூடிய இன்வெஸ்ட்மென்ட் கள் தேடி முதலீடு செய்ய வேண்டும்.

PF contribution 8-9% return தரக்கூடிய அளவு எந்த நாடும் இன்றைய பொருளாதார நிலையில் இல்லை. இது கிடைக்கும் போது நம்பகமான இடமானதால் எவ்வளவு அதிகமாகப் போட முடியுமோ அவ்வளவு போட வேண்டும்.

பென்ஷன் fund அல்லது 401கே இல் employer contribution 3-6% இருக்கும் போது, நமது பங்கான இந்த pre -டாக்ஸ் contribution தவறாமல் செய்ய வேண்டும்.

ஓய்விர்க்கான சேமிப்பு நிதிக்கு ஒதுக்க வேண்டிய 15% பணத்தில், இவை போக மீதியை ரோத் IRA அல்லது 401கே மற்றும் டாக்ஸ்-பெனிபிட் டுடன் இருக்கும் mutual fund இல் போடுவது சிறந்தது. Dave  போன்ற சில சிறந்த financial advisers மூலமாக செய்தால் சிறப்பாக இருக்கும்.

ஸ்டாக் அல்லது mutual fund இல் போடும் போது அதன் கூட இருக்கும் ரிஸ்க் க்கும் மிக அதிகம். நாட்டின் அரசியல் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப மற்றும் inflation கணக்கில் கொண்டு return வருகிற மாதிரி இன்வெஸ்ட் செய்ய வேண்டும்.

இந்தியாவில் சில இன்சூரன்ஸ் policies tax பெனிபிட் டுடன் வரலாம். இதில் கூட செய்யலாம். ஆனால் இன்சூரன்ஸ் என்பது வேறு savings என்பது வேறு. இன்சூரன்ஸ் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

Mutual fund  என்று எடுத்துக் கொண்டால் சேமிக்கும் பணத்தில் ஒவ்வொன்றிலும் 20% கீழ்கண்டவாறு இன்வெஸ்ட் செய்தால், மாறிவரும் சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு வளர்த்துக்  கொள்ள உதவும்.

1. Stable Fund (intermediate bond, முனிசிபல், கவுன்டி, ..)
2. Index Funds
3. லாங் டெர்ம் growth
4. லோ/Midcap growth / ஸ்டாக் funds
5. இன்டர்நேஷனல் fund

இதைத் தவிர நெடுங்காலமாக நல்ல பலனைத் தரும் நல்ல stocks வாங்குவதும் நல்லது.

ஸ்டாக் மார்க்கெட் மீது நம்பிக்கை அல்லது அதில் பழக்கம் இல்லாதவர்கள் எப்போதும் போல் பேங்க் அல்லது போஸ்ட் ஆபீஸ் டெபொசிட் போன்றவற்றில் சேமிக்கலாம். சிறந்த financial advisers பார்த்து செய்வது நல்லது. அவர்கள் சொல்வதை முழுதும் நம்பி ஏமாறவும் அல்லது அதிக கட்டணமும் செலுத்தி நஷ்ட மடையக் கூடாது. கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ண வேண்டும்.

முன்பெல்லாம் போஸ்ட் ஆபீஸ்ல் NSCஅல்லது இந்திர விஹாஸ் பத்திரத்தில் போட்டால் 5-6 வருடங்களில் இரட்டிப்பானது. இப்போது தெரியவில்லை. பிறரைக் கேட்டு செய்ய வேண்டும்.

தொடர்ந்து 15-20 ஆண்டுகள் ஓய்வு காலத்தை ஒட்டி சேமித்து வந்தால் ஒரு வலிவான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும். Retire ஆவதற்கு சில காலம் முன் அதிகம் சேமிப்பதற்கான வாய்ப்பை முன்னிருந்தே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் தொடர்கிறேன்.

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 10

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 10

ஒருவரது வாழ்வில் மிக முக்கியமான period அவர்களது 40 - 50 வயது காலத்தில் தான் இருக்கும். ஒரு பக்கம் தன் சிறு  குழந்தைகள் வளர ஆரம்பித்து இருப்பார்கள். இன்னொரு பக்கம் நம் பெற்றோர் முதுமை அடைந்து நம் உதவி தேடி அமர்ந்திருப்பார்கள். குழந்தைகளின் வளர்ச்சிக்கு படிப்புக்கு  என்ன செய்வது? பெற்றோரின் நோய் நொடிகளை சமாளிப்பது எப்படி?

இதே கால கட்டத்தில் தான் நாம் வளர்ந்து வந்த சூழ்நிலையைப் புரட்டிப் பார்க்கும் காலம் கூட. நம்மை நம் வழிகாட்டுதலை நம்பி வாழ்வோரின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டிய நிலைமை இருக்கும். நம் எதிர்கால வாழ்க்கைக்கான திட்டமிடுதல் துவங்க வேண்டிய காலம் கூட. திட்டமின்றி செயல்படும் நிலையினால் ஏற்படும் தவறுகள் பிற்காலத்தில் ஒரு கடினமான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும். நாம் தயாராக வேண்டிய நேரம் இது.

ஏன் 60 வயதில் ஒரு தொழில் தொடங்கி முன்னேற முடியாதா என்கிற கேள்வி எழலாம். முடியும். ஆனால் தொழில் தொடங்க மூலதனத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முன்பிருந்தே திட்டமிடுதல் தேவை.

வீட்டில் எழக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் இந்த காலகட்டத்தில் (40-50) அடையா விட்டால் இதுவே நம்மை வீழ்த்துவதற்கு எளிய கருவியாகி விடும்.

என்ன செய்ய வேண்டும்? எதை எப்பிடி செய்ய வேண்டும்? எவ்வளவு தேவைப் படலாம்? எவ்வாறு கடன் வாங்காமல் சமாளிக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு திட்டமிடுதல் வேண்டும்.

இதை சம்பாதிக்கத் தொடங்கிய நாளிலிருந்து அல்லது 30 வயதிலேயே ஆரம்பித்து விட்டால் எளிதாக் கோடீஸ்வரன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.

என்னவெல்லாம் செய்ய வேண்டும்.

முதலில் சேமிக்கத் தொடங்க வேண்டும். எதில் எதில் சேமிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

1. எமெர்ஜென்சி fund ற்கான சேமிப்பு - கடன் வாங்குவதைத் தவிர்க்க.
2. Retirement fund, பென்ஷன் fund,
3. லைப் insurance / disability இன்சூரன்ஸ்
4. லாங் term health இன்சூரன்ஸ்
5. சில்ட்ரேன்ஸ் education fund
6  fixed deposits, Shares / Mutual funds  போன்றவை

இவைத் தவிர நீங்கள் வருங்காலத்தில் நிகழக்கூடிய சம்பவங்களுக்கு, உதாரணமாக, வீடு வாங்க, கார் வாங்க, ... முன்கூட்டியே சேமிக்கத் தொடங்க வேண்டும்.

கடன் இருக்கும் போது மேலுள்ளவற்றிக்கான சேமிப்பு முழுவதும் தொடங்குவது தவறு. வீட்டுக் கடன் தவிர ஏனைய கடன்களை முழுதும் அல்லது பெருமளவு அடைத்து விட்டே இதைத் துவங்குவதாக இருக்க வேண்டும். வீட்டுக் கடனையும் முழுதும் அடைத்து விட்டால் சேமிப்பு எளிதில் பல மடங்காகும்.

கடன்களை வைத்துக் கொண்டு சேமிப்பையும் தொடங்குவது என்பது எளிதல்ல. கடனுக்கு வாங்கிய வட்டியை விட சேமிப்பின் வட்டி வருமானம் குறைவாகத் தானிருக்கும். கடன் வாங்கிய இடத்தில் கட்டாமல் சேமிப்பில் போடுவது நேர்மைக்கும் இழுக்கு. கடன் போன பிறகு கிடைக்கும் நிம்மதி, எளிதில் சேமிக்க அல்லது தேவைப் படுபவற்றை வாங்குவதற்கான ஒரு தெம்பை மன நிலையை உருவாக்கிக்  கொடுக்கும்.

பெரும்பாலான வீ ட்டுக் கடன்கள் அடைய 15 வருடங்கள் ஆகலாம். அதுவரை பிறவற்றிற்காக சேமிக்காமல் இருப்பது தவறு. வீட்டுக் கடனை 10 வருடத்தில் முடித்தால், அதன்  பிறகு அதற்கு கட்டி வந்த பணமும் முழுதாக சேமிக்க முடியும்.

வீட்டை முழு பணம் கொடுத்து வாங்குவதாலும் நல்ல பலனே. பெருமளவு சேமிக்க முடியும். Tax benefits க்காக வீட்டுக் கடன் வாங்குவதால் பலன் இல்லை என்று போன பதிவுகளில் விவரங்களுடன் குறிப்பிடிருந்தேன். சில இடங்களில் வீட்டுக் கடன் பேங்க் செக்யூரிட்டி என்கிறார்கள். பேங்க் பத்திரத்தை தொலைத்து விட்டது என்று அறிவித்து விட்டால் என்ன செக்யூரிட்டி இருக்கு? செக்யூரிட்டி இல்லாத இடத்தில் வீடு எதற்கு?

கடனற்ற வீட்டில் வாழும் நிம்மதி எவ்வளவு சுகமானது என்பதை அறிய வேண்டும்.அத்துடன் முதலில் கடன்களை அடைத்துக் கொண்டு ஒரு சுகமான சேமிப்புடன் நடைபோடும் போது ஒரு வலுவான எதிர்காலத்தை அமைத்துக் கொள்கிறோம் என்கிற நம்பிக்கை மனதில் உருவாகும். எல்லாப் பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஒரு பலத்தை இது அளிக்கும்.

ஆகவே, இனி வரும் தொடர்களில் சேமிப்பு பற்றிப் பார்க்கலாம். 

Wednesday, September 4, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 9

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 9

நேற்றைய பதிவில் வீட்டுக் கடன் தவிர மற்றவற்றை முதலில் அடைக்க வேண்டும் என்றும், மறுபடியும் கடன் வாங்க வேண்டிய நிலைமை வராமல் இருக்க ஒரு தொகையை சேமித்து வைப்பதற்கான அவசியத்தைச் சொல்லியிருந்தேன்.

வீட்டுக் கடன் பற்றி விரிவாக எழுத நான் ஒரு financial adviser இல்லை. எனக்குத் தோன்றியவை மற்றும் Dave  ராம்சே குறிப்பிட்டுள்ள சில வற்றை மட்டுமே சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன்.

பெரும்பாலான வீட்டுக் கடன்கள் நீண்ட வருடங்கள் செல்லக் கூடியது. இதை அடைக்க முழு மூச்சில் இறங்கினால், வாழ்வின் பிற்காலங்களுக்குத் தேவையான சேமிப்புப் பாதையில் இறங்க முடியாமல் போய்விடும். வீட்டுக்கடன் அடைக்கும் அதே நேரத்தில் வருங்காலத்திற்கான சேமிப்பும் தேவை. சேமிப்பு பற்றி வரும் தொடர்களில் எழுதுகிறேன்.

இப்போது வீட்டுக் கடன் பற்றி.

முதலில் வீடு வாங்குவதற்கு முன் நம்மை அதற்குத் தயார் படுத்திக் கொள்வது நல்லது. இது கடன் சுமையில் துவண்டு போகாமல் இருக்க உதவும். தனது மாத பட்ஜெட்டில் 25-30 சதீவீதத்திற்கும் குறைவான தொகையை மட்டும் வீட்டுக் கடனாக மாதா மாதம் கட்டுவதற்கு எவ்வளவு நம்மால் முடியும் என்று முதலில் பார்க்க வேண்டும். இதற்கு தகுந்த மாதிரி லோன் வாங்கி வீடு வாங்குவது உசிதம்.

ஒவ்வொருவரது மனநிலை வேற மாதிரி. எவ்வளவு பெரிதானாலும் பார்க்காமல் கடன் வாங்குவது. முடியவில்லை என்றால் விற்றுவிட்டுப் போய் விடலாம் என்ற எண்ணம் இருக்கும். இது ரியல் எஸ்டேட் வளர்ந்து வரும் நேரத்தில் சாத்திய மாகலாம் பெரும்பாலான நேரத்தில் விற்கும் போது நட்டத்தில் முடியும். அல்லது கடன் கொடுத்தவர்கள் நம்மை வெளியேற்றும் நிலைமை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பதற்கு திட்டமிடுதல் நலம்.

எவ்வளவு நம்மால் மாதம் கட்ட முடியும். எவ்வளவு முன்பணம் போட முடியும். எவ்வளவு லோன் வாங்க வேண்டும் என்ற திட்ட மிடுதல் அவசியம். வசிப்பதற்காக வீடு வாங்கி கடன் வைத்திருப்பவர்களுக்கு உதவவே இப்பதிவு.

வீட்டுக்கடன் முழுதும் அடைக்காமல் வட்டியுடன் கட்டிக் கொண்டிருந்தால் tax பெனிபிட் கிடைக்கும் என்ற பரவலான எண்ணம் எல்லோரிடமும் உண்டு. என் வீட்டிலும் கூட. இது சரியா தவறா என்று இரு சின்ன கணக்கு போட்டு பார்க்கலாம்.

10% வட்டிக்கு ஒரு லட்சம் கடன் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம் எனில் ஒரு வருட வட்டி 10000 ரூபாய். நமது வருமானம் 30% tax வட்டத்தில் வருகிறது என்றால் நாம் அரசுக்கு கட்ட வேண்டிய வருமான வரியில் 3000 ரூபாய் மட்டுமே விலக்கு கிடைக்கும். மீதி 7000 வட்டியாகப் போகிறது. Tax பெனிபிட் க்காக கடனில் இருப்பதன்  அவசியம் என்ன என்கிறார் Dave.

இதைப் போல் Equity பற்றிய இன்னொரு எண்ணமும் மக்கள் மனதில் ஒரு பரவலான எண்ணம் உண்டும். வீடு மேல் இருக்கும் லோன் குறைய குறைய வீட்டின் மீதான நமது உரிமை (equity ) உயர்ந்து கொண்டே போகும். அதன் மீது லோன் வாங்கினால் குறைவான வட்டிக்கு கிடைக்கும், பிற பேங்க் லோன் விட குறைவான வட்டிக்கு கிடைக்கும் என்பது. கிடைக்கலாம்.

ஆனால் உங்கள் வீட்டின் மீதான உங்கள் உரிமை பறிபோகிறது என்பதை நினைத்துப் பார்க்க மறுக்கிறோம். Primary லோனும் ஹோம் equity லோனும் வேறு வேறு. ஒன்றைக் கட்ட மறந்தாலும் அல்லது முடியாமல் போனாலும் உங்களை foreclosure நிலைக்கு இட்டுச் செல்லும். வீட்டிற்கு இழப்பு ஏற்படும் நேரத்தில் இன்சூரன்ஸ் எந்த லோனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. ஹோம் equity லோன் மற்றும் வீடு மீதான செகண்டரி லோன் தொடர்ந்து கொண்டே வரும்.

லோனில் கார் வாங்க முற்படும் போது ஹோம் equity லோன் மற்றும் செகண்டரி லோன் இருப்பதால் ஒரு பின்னடைவு ஏற்பட வாய்ப்புண்டு.

பெரும்பாலான மக்கள் செகண்டரி லோன் எடுத்து primary லோன்க்கு முன்பணமாக கட்டுவார்கள்.  வட்டியும் அதிகம், இரண்டில் ஒன்றுக்கு கட்ட முடியாமல் போனாலும் மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்வோம். செகண்டரி எடுக்காமல் நம்மைத் தயார் பண்ணிக் கொண்ட பிறகே வீடு வாங்குவது உசிதம்.

வீட்டுக்  கடன் கட்ட ஆரம்பிக்கும் ஆரம்ப காலத்தில் நாம் கட்டும் பணம் பெருவாரியாக வட்டியில் போய் சேரும். அசல் கொஞ்சம் தான். மாதந்தோறும் ஒரு சிறு தொகையை கூடுதலாக அசலுக்கு கட்டி வந்தால் அது பிற்காலத்தில் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தடுக்க உதவும்.

ஒரு லட்ச ரூபாயை 30  வருடத்திற்கு 5 பெர்சென்ட் வட்டியில் வாங்கியிருந்தால், மாதம் கட்ட வேண்டிய தொகையுடன் கூடுதலாக 250Rs ஆரம்ப காலத்திலிருந்து கட்டினால் அது கடன் முன் கூட்டியே அடைப்பதற்கு துணை போவதுடன் மட்டுமல்ல, 80-90 ஆயிரம் ஒட்டு மொத்தமாக கட்ட வேண்டிய வட்டிப் பணத்திலிருந்து குறைவாக இருக்கும். 5% பதிலாக 8% வட்டிக்கு முன்னரே calculate பண்ணி கட்டி வந்தால் 30 வருட லோன் 12-15 வருடத்திற்குள் கட்டி முடிக்கப் படும்.

மறுபடியும் சொல்கிறேன். நான் financial adviser இல்லை. கடனற்ற வாழ்வு வாழ உதவி மட்டுமே செய்கிறேன். Dave பல நுணுக்கங்களை அவரது புத்தகத்தில் சொல்கிறார். வாங்கிப் பயனுறுங்கள்.

இணையத்திலும் பல கட்டுரைகள், amortization calculators கிடைக்கும். உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் தொடர்கிறேன்.

Tuesday, September 3, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்பிடி - 8

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்பிடி - 8

நம்மிடம் ஒரு தொகையை சேமித்து வைப்பதன் மூலமே மறுபடியும் கடன் வாங்க வைக்கும் நிலைமையிலிருந்து தப்பிக்கமுடியும். இந்தத் தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பது நமது மாதந்திர பட்ஜெட் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். எவ்வளவு நாள் இந்த பணத்தை வைத்து சமாளிக்க முடியும் என்கிற ஒரு மனநிலை, ஒரு நம்பிக்கை நம் மனதில் கொண்டு வர 6 மாத சேமிப்பு என்கிறேன். இது ஒவ்வொருவரது குடும்ப நிலைமையைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால் கடனற்ற வாழ்வு வாழ இது அவசியம் தேவை.

இந்த சேமிப்பு பணம் இல்லாமல் கடனற்ற வாழ்வு வாழ முடியாது. இதிலிருந்து எடுத்து செலவு பண்ண வேண்டிய கால கட்டாயம் உருவானாலும், மறுபடியும் இந்த சேமிப்பு சேரும் வரை பிற செலவுகள், இன்வெஸ்ட்மென்ட்கள் தவிர்க்க வேண்டும். இதை சேர்த்து வைக்க வேண்டும்.

மாதந்திர பட்ஜெட் பணத்தில் செலவுகள் போக முதலில் இந்த safety இருப்புத்தொகையை சேமிக்கத் தொடங்க வேண்டும். இது தான் உங்கள் முதல் சேமிப்பாக இருக்க வேண்டும். இதுவே உங்களை கடன் வாங்கும் நிலையை உருவாக்காமல் தடுக்கும் சொத்து.

இந்த 6 மாத அத்தியாவசிய செலவுகளுக்கான சேமிப்பு என்பது, முதலில் நான் சொல்லிய emergency செலவுக்கான 2000-5000 தவிர்த்து பிறவற்றிர்க்கானது.

இந்தப் பணத்தை எங்கு எதில் வைத்திருக்க வேண்டும் என்பதிலும் ஒரு தெளிவு வேண்டும். தேவைப் படும் நேரத்தில் உடனடி எடுத்து உதவும் வங்கிகளில் சாதாரண savings account ல் மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒரு term டெபொசிட் பண்ணி வைத்து தேவைப்படும் எடுக்க வேண்டிய சமயத்தில் எடுக்க முடியாமல் போகவோ அல்லது எடுப்பதற்கு பெனால்டி கட்டி எடுத்து நஷ்டப் படக்கூடிய வகையில் எடுத்து வைக்கக் கூடாது.

பேங்க் கில் வைப்பதன் மூலம் இதில் வரும் வட்டியைப் பார்த்து ஆசைப்பட்டு, தேவைப் படும் போது இன்னொருவரிடம் கடன் வாங்கி சமாளிக்கும் மனோபாவம் கூடவே கூடாது. கடனற்ற வாழ்வே நோக்கம்.

Emergency பணம் வீட்டிலிருக்க வேண்டும். இந்த 3-6 மாத கால அத்தியாவசிய சேமிப்புத் தொகை வங்கியில் அல்லது எளிதாக எடுக்க முடிய வகையில் ஒரு சேமிப்பு நிறுவனத்தில் இருக்க வேண்டும். இதை வைத்து முதலீடு செய்யும் மற்ற தனிநபர்களிடம் அல்ல.

பிறரிடும் கொடுத்து வைத்தல் அல்லது குறைந்த வட்டிக்கு பிறருக்கும் கடன் கொடுத்து வைக்கக் கூடாது. தேவைப்படும் நேரத்தில் நீங்கள் மறுபடியும் பிறரிடம் புரட்டும் நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது.

இந்தப் பணத்தை எடுத்து மாதாந்திர பட்ஜெட் ஐட்டத்தில் இடம் பெற்றுள்ள செலவுகளுக்கு செலவழிக்கக் கூடாது. இதை வைத்து புதுப் பொருட்களை அல்லது பட்ஜெட்தில் இல்லாத திடீர் தேவைக்கான பொருள் அல்லது வேற செலவுகளுக்காகவும் இதைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

வருமானம் தடைபடும் போதும், வேலை போகும் போது ஒருவரது வருமானத்தில் பட்ஜெட் செலவுகளை சமாளிக்க முடியாமல் போகும் போது மட்டுமே இதில் கை வைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் இதில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றால் உங்கள் பட்ஜெட் சரிவர நிர்ணயிக்கப் படவில்லை என்றே அர்த்தம். முதலில் பட்ஜெட்டை சரி செய்யுங்கள்.

இந்த பணத்தைத் தொடும் நேரத்தில் இனி இதை மறுபடியும் சேமித்து பூர்த்தி செய்வதற்கான சேமிப்பை உங்கள் மாத பட்ஜெட்டில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

இதைத் தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் செய்து வந்தால், உங்கள் வாழ்வில் வரவு செலவுகளை சமாளிக்க கடன் வாங்காமல் வாழக் கூடிய ஒரு பக்குவத்தை உங்களிடம் நீங்கள் பார்க்கலாம்.

இதுவரை நான் எழுதியவற்றில் தேவையானது
1. வாங்கியுள்ள கடன்களின் பட்டியல், சிறிய கடன் முதலில்
2. மாதந்திர பட்ஜெட் தேவை
3. ஒருemergency fund
4. சிறு கடன்களிருந்து ஒவ்வொன்றாக அடைத்தல் (வீட்டுக் கடன் தவிர)
5. எக்காரணம் கொண்டும் மறுபடியும் கடன் வாங்கக் கூடாது (including கிரெடிட் கார்டு)
6. 6 மாத கால தேவைக்கான சேமிப்பு.

மேலுள்ளவற்றை பூர்த்தி செய்த பிறகே பலருக்கு அடுத்த கட்டமான வீட்டுக் கடன் அடைப்பது, ஓய்வு கால சேமிப்பு, இன்சூரன்ஸ், பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு  நோக்கி நாம் முன்னேற முடியும். இவைகளை வரும் தொடர்களில் பார்க்கலாம். 

Friday, August 30, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்பிடி - 7

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்பிடி - 7

போன பதிவில் ஒரு emergency கையிருப்பு பணத்தின் அவசியத்தைச் சொல்லியிருந்தேன். அடுத்து செய்ய வேண்டியது என்ன?

இந்த அவசரத்தேவைக்கு சேமித்த பணம் எத்தனை நாட்களுக்கு உதவும். அது போதுமா?

நம் வேலை போய் விட்டாலோ அல்லது இரண்டு பேர் வேலை செய்யும் வீட்டில் ஒருவர் வேலை செய்வதை  நிறுத்திக் கொண்டாலோ, அல்லது இருவரில் ஒருவருக்கு வேலை போய் விட்டால் என்ன செய்வது? இரண்டு பேருடைய வருமானத்தின் அடிப்படையில் போட்டு வைத்த பட்ஜெட்டில் இனி ஒருவரது வருமானத்தில் எவ்வாறு சமாளிப்பது?

சம்பளமற்ற விடுமுறையில் இருவரில் ஒருவர் சில காலம் செல்ல முடிவு செய்து வீட்டு பிரச்சனைகளை சமாளிக்க அல்லது பிரசவத்தை சமாளிக்க, பெற்றோர் உடல் நிலை சரியில்லாது போகிற காலங்களில் கொஞ்ச நாள் சம்பளமில்லைன்னாலும் பரவாயில்லை, போய் உதவி செய்ய முடிவதற்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.

வீட்டில் இருவரும் வேலை செய்யும் போது இரண்டு குழந்தைகள் இருந்தால் daycare expenses ஒருவரது வருமானத்திற்கும் மேல் ஈடு கட்ட முடியாமல் போகும் போது ஒருவர் வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்ப்பதன் மூலம் சமாளிக்க சில காலம் வேலையை விட்டுவிட்டு இருக்க முடிவதற்கு என்ன செய்ய வேண்டும்.

வேலையை விட்டு விட்டு குழந்தைகளைப பார்ப்பதை விட வேலை செய்து கிடைக்கும் வருமானம் முழுவதும் போனால் கூட ஒரு லாங் டெர்ம் பெனிபிட் இருக்கு. குழந்தை பராமரிப்பு பற்றிய பதிவல்ல இது. இது மாதிரி நிகழ்வுகளில் நம்மைத் தயார் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதே பதிவின் நோக்கம்.

இந்த மாதிரி நிகழ்வுகளில் மாத பட்ஜெட்ல் துண்டு விழுவது மட்டுமல்ல, வீட்டில் மன அமைதி போய்  அல்லது சிலருக்கு மன அழுத்தம் (depression ) வர வாய்ப்புண்டு. எப்பிடி சமாளிப்பது. கடன் வாங்காமல் இதை சமாளிப்பது எவ்வாறு?

நமது தேவைக்கு நமது விருப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நம்மைத் தயார் செய்து கொள்வது எப்பிடி?

ஏற்கனவே மாத பட்ஜெட் போட்டுவிட்டதால் அத்தியாவசியத் தேவைகளுக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவுத் தேவைப் படும் என்பது திட்டவட்டமாகத் தெரியும் இப்போது. குறைந்தது 3 முதல் 6 மாதம் வரை இந்த மாத அத்தியாவசியத் தேவைகளுக்குத் தேவையானவையை முன்கூட்டியே சேமித்து வைத்தால், மேற் கூறியுள்ள பிரச்சனைகள கடன் வாங்காமல் எளிதில் சமாளிக்க முடியுமா? 3 மாதத்தில் திரும்ப வேலை கிடைக்காமல் போய்விட்டால், அது எட்டு மாதமாக நீட்டித்தால் என்ன செய்வது?

இப்போது தான் படிக்க ஆரம்பித்துள்ள Dave Ramsey சொல்வது 3-6 months க்கு தேவையானப் பணம் முன் கூட்டியே சேமியுங்கள் என்று.

அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தது 6 மாத சேமிப்பு தேவை. இது எவ்வளவு கடினமானாலும் கண்டிப்பாக செய்ய வேண்டும். இது ஒன்றே உங்களை மறுபடியும் கடன் வாங்க இட்டுச் செல்லாத நிலையை ஏற்படுத்தும். வீடு வாங்க வாங்குகிற கடனுக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்காகவும் தினசரித் தேவைக்காகவும் வாங்கும் கடனையும் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. இரண்டும் வேற.

ஆனால் நான் 8 ஒன்பது வருடம் முன் செய்தது இதை விட வித்தியாசமானது.

நண்பர்கள் அனைவரும் வீடு வாங்கும் போது எனக்கும் வீடு வாங்கனும் என்ற நமைச்சல். அதற்குத் தயார் பண்ணிக் கொள்ள 8-9 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தேன்.

ஒரு வீடு வாங்கத் தேவைப்படும் primary லோன்க்கு 10% முதல் 20% வரை down payment (Our initial own contribution)  போடுபவர்களுக்கு 6% வட்டிக்கு குறைவாகவும், அதை விட குறைவாக down payment போடுபவர்களுக்கு வட்டி அதிகமாகவோ அல்லது வீட்டு லோன் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு நான் வீடு வாங்கும் காலத்தில் இருந்தது. இதை சரி கட்ட எல்லோரும் ஒரு செகண்டரி லோன் அதிக வட்டியில் எடுத்து primary  லோன் க்கு down payment  போடுவார்கள். பிறகு இரண்டு லோன் க்கும் சேர்ந்து வட்டியும் முதலுமாய் கட்டி வருவார்கள்.

நான் முடிவு செய்ததது செகண்டரி லோன் வாங்கக் கூடாது என்று. Primary லோன் க்கு 20% down payment போடணும். இது மட்டுமல்ல, வீடு வாங்கி கொஞ்ச நாளில் செய்து வந்த வேலை போய்  விட்டால் 6 மாதம் சமாளிப்பது எப்பிடி. வீடு வாங்கிய பிறகு லோன் அமௌண்ட் கூட budget ல் இடம் பெற்று விடுமே.

இதற்காக 3 வருடங்கள் சேமிக்க ஆரம்பித்து விட்டேன். வீண் செலவுகள் தவிர்த்து விட்டேன். வீட்டில் மனைவி பொறுமை இழந்து விட்டார்கள். வீட்டுத் துணையின் உதவி இல்லாமல் எந்த மாதந்திர பட்ஜெட் எதுவும் வொர்க் ஆகாது. வீட்டிலுள்ள சிறு குழந்தைகளின் தியாகங்கள், மனைவி மக்களின் உதவியில்லாமல் கடனற்ற வாழ்வு சாத்தியமில்லை. என் தந்தை வழியிது, என் வழியில் நான் பார்த்து வருவதும் அதே.

கடைசியில் 17-18% down payment உடன் 6 மாத saving உடன் வீடு வாங்கினேன். 3 வருடம் பொறுத்ததால் வீட்டு விலை அந்த காலகட்டத்தில் கொஞ்சம் ஏறியது உண்மை. ஆனால் செகண்டரி லோன்க்குப்  போக வேண்டிய அவசியமில்லாமல் போனதோடு இன்னும் 15-20 வருடம் செகண்டரி லோன் கட்ட வேண்டிய அவசியமில்லை. மாத பட்ஜெட் இல் நெருக்கடி இருக்காது. கட்டியிருக்க வேண்டிய லோன் வட்டியையும், வீட்டு விலை ஏற்றத்தையும் பார்த்தால் இழந்து எதுவுமில்லை மக்கா.

இந்தப் பணமெல்லாம் primary லோன் க்கு அதிகம் கட்டி கூடிய சீக்கிரம் அடைக்கப் பார்க்கக் கூடிய ஒரு தைரியத்தை இந்த செயல் அளிக்கிறது.

இப்போது அந்த 6 மாத தேவைக்கான சேமிப்பை எதற்கு உபயோகப் படுத்தனும், எதற்க்கெல்லாம் கூடாது என்று

அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

Thursday, August 29, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 6

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 6

திடமான வாழ்வு வாழ திட்டமிடுதல் முக்கியம். பொருளாதார வாழ்வில் திட்டமிடுதலுக்கு ஒரு மாத budget தேவை. Budget இல்லாமல் வருவதும் போவதும் தெரியாது. திட்டமிடுதல் சாத்தியமில்லை.

ஒரு மாதத்தில் என்னென்ன வரவுகள் செலவுகள் என்பது முன்கூட்டி ஒரு பிளான் போட்டு வைக்கும் போது பற்றாக்குறை எவ்வளவு என்பது தெரிய வரும். கடன் வாங்கும் நிலை ஏற்படுமா, அதை எவ்வாறு தவிர்க்கலாம், எது அநாவசியம், எதை விற்று பொருள் ஈட்டலாம். எவை வாங்குவதற்கு இந்த மாதத்தில் இடமிருக்கும் என்பதை திட்டமிட முடியும்.

திட்டமில்லா வாழக்கை திசையில்லாப் பயணமாக மாற வாய்ப்பிருக்கு.

திட்டமிடும் போது எதிர்பாராமல் நிகழும் நிகழ்வுகளுக்கு என்ன செய்வது, எவ்வாறு சமாளிப்பது. இந்த சமயத்தில் கடன் வாங்காமல் எப்பிடி சமாளிப்பது.

இதற்குத் தேவை ஒரு எமெர்ஜென்சி fund. ஒரு குறிப்பிட்ட தொகையை தனியாக ஒதுக்கி வைத்து விட்டு, அதை பேங்க் போய் எடுக்க வேண்டிய நிலை இல்லாமல் வீட்டில் தனியாய் cash ஆக வைத்திருக்க வேண்டும்.

மாதந்திர சம்பளக்காரனுக்கு 2000-5000 வரை கூட போதுமானதாக இருக்கலாம். இதை எப்பிடியாவது ஒதுக்கி வைக்க வேண்டும். எது emergency என்பதை வரையறுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கால அரிசிப் பானைக்குள் அல்லது பாத்திர டப்பாக்குள் ஒளித்து வைத்திருக்கும் பணம் போன்றது.

டிவி ரிப்பேர், refrigerator ரிப்பேர்க்கெல்லாம் இதிலிருந்து எடுக்கக் கூடாது. சாதாரணமாக வண்டி பழுதடையும் போது பொதுத்துறை வாகனங்களை உபயோகப் படுத்தும் வாய்ப்பு இருக்கும் போது இந்த பணத்தைத் தொடக் கூடாது. அடுத்த நாள் பேங்க் போய் எடுத்து கட்ட அவகாசம் இருக்கும் போதும் தொடக் கூடாது.

எது நாம் எதிர்பார்க்காமல் திடீரென ஏற்படும் செலவு, budget ல் இடம் பெறாதது, பிறரிடம் கையேந்த வைக்கும் நிலையை ஏற்படுத்தும் போது மட்டுமே இதைத் தொட வேண்டும்.

 பாங்கில் போட்டு வைத்தால் இந்த அமௌண்ட் க்கு நல்ல வட்டி கிடைக்கலாம். அதைப் பார்த்து பாங்கில் term டெபொசிட் போட்டு வைத்தால் எடுக்கும் போது பெனால்டி வர வாய்ப்புண்டு. ATM machine மூலம் எந்த நேரத்திலும் எடுக்கக் கூடிய வாய்ப்பாக இருந்தால் பரவாயில்லை. அவசரத்துக்கு வாராந்திர இறுதியில் ஏற்படும் செலவிற்கு, குறிப்பாக யாரிடமும் கடன் வாங்காமல் இருப்பதற்கு, இதை பயன்படுத்தனும்.

கடன் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும்.

இது மட்டுமல்ல. இன்னொன்றும் தேவை.

அடுத்ததில் தொடர்கிறேன்.

Wednesday, August 28, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 5

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 5

வேலைக்கு சேர்ந்த இரண்டாம் மாதம் வீட்டு வாசல்ல ஒரு LIC agent வந்து நின்னார். எப்பிடியா மோப்பம் பிடிக்கிறாங்கன்னு நினைச்சேன். ஒரு பாலிசி எடுங்கன்னு ஒரே வற்புறுத்தல். மாதா மாதம் கட்டினாப் போதும், ஒரு ஒரு லட்ச ரூபாய் பாலிசி எடுத்துறலாமான்னார். எண்டோவ்மென்ட் பாலிசி, moneyback பாலிசி ன்னு சொல்லிகிட்டே போறார். ஒரு வாரம் கழிச்சு வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டேன்.

2000 சம்பளக்காரனுக்கு 1 லட்சம் பாலிசி எடுத்தா வருடத்துக்கு 3800. மாதா மாதம் கட்டினா 4100 ஆகுது.Maturity period ல அதிக வித்யாசம் இருக்காதுன்னார். எப்பிடி சரி பார்க்கிறது. தெரியாது. எதற்கு அதிகம் கொடுக்கணும். Premium கட்டுவது Annual payment ஆக இருக்கட்டும்ன்னு முடிவு பண்ணி விட்டேன்.

வருட ப்ரீமியம் 3800 எனும் போது இரண்டு மாத சம்பளம் போகும்ன்னு நினைச்சா ரொம்ப ஜாஸ்தின்னு பயமாயிருந்தது. அதனால 50K பாலிசி எடுக்கலாம்ன்னு முடிவு பண்ணினேன். MoneyBack பாலிசி எடுத்தா premium ஜாஸ்தி, 5 வருடம் கழித்து என்ன செய்வது என்ற ஒரு பக்குவம் அப்போது இல்லை.

மாதா மாதம் LIC க்கு கட்டுவதற்குப் பதிலா மாதம் 200 என் பேங்க் அக்கௌன்ட் ல தனியா ஒதுக்கிறது என முடிவு செய்தேன். வட்டியும் 9 டு 10% கிடைச்சது. சுலபமா கட்ட முடிஞ்சது.

இரண்டு இலட்சியம் நிறைவேறியது. ஒரு காப்பீடு கிடைத்த உணர்வு, மாதம் 5% சேமிப்பு கிடைக்க ஒரு வழி பண்ணிக் கொண்டது ஒரு திருப்தி. அதிகம் கட்ட வில்லை, கையக் கடிக்காது என்ற ஒரு திருப்தி.

போன வருடம் mature ஆகி 1.4 lakhs கிடைத்து.  இப்போது deposit பண்ணியுள்ளேன். Inflation க்கு ஈடு கொடுக்க முடியிற அளவு சேமிப்பு இல்லைன்னு இப்ப புரியுது. அப்போது எவ்வளவு சேமிக்கனும்ன்னு தெரியிலை.

இங்க வீடு வாங்கும் முன்னர் கூட வீட்டு வரியைக் கட்ட ஒரு Escrow அக்கௌன்ட் ஓபன் பண்ணச் சொல்லி வீட்டு லோன் வாங்கும் போது வற்புறுத்துவார்கள். அது தேவையா என்று முடிவு செய்து கொள்ளுங்கள். Escrow அக்கௌன்ட் இல் போட்டு அதன் வட்டியை நாம் அனுபவிக்க முடியாமல் போவதை விட, நாமே ஒரு அக்கௌன்ட் ல் தனியாகப் போட்டு சேமித்து வந்தால், வட்டியும் கிடைக்கும், கட்டும் போது  சிரமுமும் இருக்காது.

நான் வேலை சேர்ந்த இடத்தில் 15 பேருக்கு குறைவாக இருந்ததால் PF அக்கௌன்ட் ஓபன் பண்ண முடியாது என்றனர். நான் விடலை. SBI யில போய் PPF அக்கௌன்ட் brochure வாங்கி வந்து எல்லோருக்கும் PPF அக்கௌன்ட் ஓபன் பண்ண வைத்தேன். அலுவலக contribution கிடைக்க வழி செய்ததது இது.

இப்போது வேலை சேர்ந்த முதலே பென்ஷன் அக்கௌன்ட் மற்றும் 401K அக்கௌன்ட் ல் தவறாமல் போட்டு வருகிறேன். மாதம் எப்பிடியும் 12% சேமிக்கிறேன்.

இது துளி கூட retirement period இல் போதாது. குறைந்தது 15% மாதம் தோறும் சேமிக்கணும். உங்கள் வயது 50 நெருங்கும் போது இன்னும் அதிகம் சேமிக்கணும்.

Dave தன்னுடைய புத்தகத்தில் கேட்பது உனக்கு retirement காலத்தில் ஒரு வருடத்திற்கு எவ்வளவு தேவை என்பதை இப்போது முடிவு செய்து கொள். Inflation 4% போக குறைந்தது 8% interest வரும் mutual fund தேடி மாதம் தோறும் இன்வெஸ்ட் செய் என்கிறார். மாதம் தோறும் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று அதில் தோராயமாகத் தெரிய வரும் என்கிறார். அவரது புத்தகமோ அல்லது இணையத்திலுள்ள retirement calculators உங்களுக்கு உதவி செய்யும்.

இந்த எதிர்கால நோக்கு இல்லாததால் தான் LIC saving பண்ணும் போது தெரியாமல், குறைந்த அளவு சேமித்தது. இப்போது வந்துள்ள matured அமௌண்ட், எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

மேலும் தொடர்கிறேன்.

Tuesday, August 27, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 4

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 4

தமிழகத்தில் கல்லூரி படிப்புகள் முடித்துக் கொண்டு முதலில் வேலைத் தேடிக் கொண்டது அஸ்ஸாமில் அரசு நிதியில் நடத்தப் பட்ட ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வாத்தி வேலை. மாதம் 2200 சம்பளம். வீட்டு வாடகை 500 போக மீதி என் கையில.

அங்கு எல்லா நண்பர்களும் உள்ளூர் அஸ்ஸாமியார்களே. ஒரே ஒரு தமிழ் நண்பன் 7 மாதம் கழித்து அறிமுகமானான். விலங்கியல் மருத்துவக் கல்லூரி (Veterinary) PG students மற்றும் professor களுக்கு நிறைய ப்ரோக்ராம் எழுதிக் கொடுப்பேன். இலவசமாகத் தான்.

அப்போது உதவி தேடி வந்த அஸ்ஸாமிய நண்பன் நாசர் அஹம்மது. மிகப் பெரிய பணக்காரன். Guwahati ஃபான்சி பஜார் ல் ஒரு மிகப் பெரிய கட்டிடத்தின் உரிமையாளன். நான் அவனுக்குப் ப்ரோக்ராம் எழுதிக் கொடுத்தாலும், நான் அவனிடம் கற்றவை மிக அதிகம்.

அதில் மிக முக்கியமானது கடனற்ற வாழ்வு வாழ்வது எப்பிடி என. சில students, colleagues என்னிடம் கடன் வாங்கிப் போவார்கள். அடிக்கடி நடக்கும். நாசர் மிகவும் கடிந்து கொள்வான். அவர்களிடம் எடுத்துரைத்து வாங்கியும் கொடுப்பான். அவர்களுக்கு எப்பிடி கடன் அடைக்க வேண்டும் என்று சொல்லித் தருவான்.

எனக்கு சமைக்கத் தெரியாது. அவனுடைய மெஸ் இல் சாப்பிட ஏற்பாடு பண்ணிக் கொடுத்தான். கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிக் கொடுத்தான். 10 அல்லது 20 ரூபாய்க்குள் ஒரு முழு நாள் சாப்பாடு முடிந்திரும். புதிதாக ஒரு உடுப்பி ஹோட்டல் கட்டினார்கள். 32 ரூபாய் vegetarian தாளி (தட்டு). சில நாள் அங்கு போய் சாப்பிடுவேன். மிகவும் கடுமையாக விமர்சிப்பான். ஒரு வேளைக்கு 32, ஒரு மாசத்துக்கு 900 க்கும் மேல். மூணு வேளை உன்னால் சாப்பிட முடியாது. கூடாது. போய் பக்கத்திலுள்ள ராஜஸ்தானி மெஸ் ல 10 ரூபாய் கொடுத்து சாப்பிடு என்பான். பல தடவை அவன் வீட்டில் சாப்பிட்டு இருக்கேன்.

வாங்கிற சம்பளத்தை எப்பிடி செலவு செய்யணும் சேமிக்கணும் என்பதை என் வயதுடைய ஒரு பணக்காரன் அப்போது எனக்கு சொல்லிக் கொடுத்தான். எதனால் பணக்காரன் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்பான். காரில் போகும் வசதி இருந்தும் தான் ஸ்கூட்டர்ல் போவதின் பயன் பற்றி சொல்வான்.

நான் எழுதிக் கொடுத்த ப்ரோக்ராம்  க்கு எனக்கு கூலி ஸ்கூட்டர் ஓட்டக் கத்துக் கொடுக்கணும்ன்னு. இரண்டு மாதம் கழித்து கடைசி ப்ரோக்ராம் முடிந்தவுடன் ஒரு மணி நேரத்தில் கற்றுக் கொடுத்தான்.

நான் வேலையை விட்டு  விட்டு வரும் போது, என் மேற்படிப்பிற்கு உதவியதால் வேலை செய்த இடத்தில் அக்ரீமெண்ட் படி 25000 கட்டணும். என்னிடமிருந்தது 22000 மட்டுமே. நாசர் தான் 4000 கடன் கொடுத்ததும் இல்லாமல், என் வீட்டை காலி செய்ய உதவி ரயில் நிலையத்தில் ஏற்றியும் விட்டது.

ரயில் நிலையத்தில் அவன் எனக்கு சொல்லியது. அந்த 4000 எனக்குப் பெரிதல்ல. ஆனால் உனக்குப் பெரியது. இனி நாம்  சந்திப்பது அரிது என்று தெரியும். யு must return தட் money. நீ எங்கிருந்தாலும் அதைச் செய்யணும் என்றான். Installment ல் கொடுத்தாலும் பரவாயில்லை.

பணத்தால் நீ என்னை ஏமாற்றிவிட்டாய் என்ற எண்ணம் என் மனதில் என்றும் வரக் கூடாது. நம் நட்பை கொச்சைப் படுத்தும் விதமாக  இந்த பணம் அமையக் கூடாது என்றான். நல்ல வேளை ! நீ ஊர் திரும்பும் போது  என்னிடம் கேட்டாய். முன்பே கேட்டிருந்தால் நமக்குள் இருந்த நட்பு பாதிக்கப் பட்டிருக்கலாம். பார்த்தாயா நீ கடன் கொடுத்தவர்கள் அதற்குப் பிறகு உன்னை சந்திப்பதை தவிர்ப்பதும் இல்லாமல் உன்னைப் பார்த்து கூனி குறுகிற மாதிரி ஆகி விட்டது. உங்கள் நட்பு என்ன ஆச்சு என்றான். ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

பெங்களூர் வந்தவுடன் அப்பாவிடம் புரட்டி அவனுக்கு அனுப்பி விட்டேன்.

20 வருடம் கழித்து போன வருடம் அவன் எங்கிருக்கிறான் என்று இணையத்தில் தேடி கண்டுபிடித்ததில் இப்போது வெளி நாட்டில் ஒரு பெரும் பதவியில் இருக்கிறான்.

போனில் அவன் சொல்லியது கேட்டு செம சிரிப்பு வந்தது. நான் உன்னிடம் நிறைய கற்றுக் கொண்டேன் என்றான். நீ உட்கார்ந்திருந்த அதே சீட் அதே வேலையை நானும் கொஞ்ச காலம் செய்து கொண்டு இருந்தேன். கம்ப்யூட்டர் கற்கணும் ங்கிற ஒரு வெறி, உன்னைப் போல வெளியிலப் போய் நல்ல அனுபவம் பெறனும். We learned from each other mutually என்றான்.

Dave ராம்சே இதையேத் தான் சொல்கிறார். கடன் வாங்குவதால் இழப்பது அதிகம். கடனற்ற வாழ்வு வாழும் போது மட்டுமே நீ ஒரு பணக்காரனாக முடியும் என்கிறார். நட்பு, உறவுகளின் இழப்பை விடவா பணம் முக்கியம். இவர்களிடம் கடன் வாங்காதே. வாங்கினால் முதலில் இதை அடையுங்கள்.

அரசு அங்கீகரிக்கப்  பட்ட வங்கிகள் தனியார் வங்கிகளிடம் மட்டுமே வாங்குங்கள். கந்து வட்டி மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றில் கடன் வாங்கவே வாங்காதீர்கள். மீண்டு வர பல ஆண்டுகள் பிடிக்கலாம், போண்டியாகவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் தொடர்கிறேன்.

Saturday, August 24, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 3

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 3

தினசரி அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட கடன் வாங்கிற நிலைமையிலத் தான் நாமிருக்கிறோம் என்கிற நிலை வரும் போது வருமானத்தை உயர்த்த வேண்டிய வழி முறைகளைத் தேடுவது தவிர வேறு வழியில்லை. பார்ட் டைம் வேலைகள் மூலம் கொஞ்சம்  உயர்த்த முடியும்.

அப்பா 1986 ல் ரிடையர் ஆனார். 1970லிருந்து பார்ட் டைம் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார். பக்கத்திலுள்ள லேடீஸ் கிளப்பில் கணக்கர் ஆக சேர்ந்தார். மாதம் 70 ரூபாய். அவருடன் வேலை பார்க்கும் இன்னொருவர் மாலை வேளையில் சோடா கடை வைத்தார். அவர் மகன் என் அப்பா லேடீஸ் கிளப் ல் வேலை செய்வதை கிண்டல் செய்வான். கண்டுக்க மாட்டேன். வீட்டைப் பற்றிய புரிதல் உள்ளவர்கள் எதற்கு கவலைப் படனும்.

82களில் அதை 100 ஆக்கிக் கொடுக்குமாறு கேட்டுப் பார்த்தார். முடியாது என்று சொல்லி விட்டு ஓரிரு மாதங்களில் 90 ஆக்கினார்கள்.

அலுவலகத்தில் கிடைக்கும் ஓவர் டைம் வாய்ப்பை விட மாட்டார். கான்டீன் காபி யை விட அம்மா கொடுத்து விடச் சொல்லி நாங்கள் கொண்டு போவது கொஞ்சம் சூடு ஆறிப் போயிருந்தாலும் ஒன்னும் சொல்லாமல் குடிப்பார். இந்த எக்ஸ்ட்ரா வருமானம் அம்மாவின் தீரா ஆசையான நகைக்கடை சீட்டு மற்றும் பலவற்றிற்கு உதவியது.

அத்யாவசியப் பொருட்களுக்காக கடன் வாங்க வேண்டிய நிலைமையை நாங்கள் சந்திக்க விடாமலே  செய்து விட்டனர். Dave ராம்சே யும் இதைத் தான் சொல்கிறார். கடன் அடைக்கும் வரை வாரத்திற்கு 60 மணி நேரம் வரை வேலை செய்ய நேர்ந்தாலும், குறைந்தது இரண்டு மூன்று வருடங்களுக்கு கடன் தீரும் வரை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

கடன் அடைப்பது மட்டும் குறிக்கோள் அல்ல. வருங்கால சேமிப்பைத் தொடங்க வேண்டும். அது கடன் தீரும் வரை பார்ட் டைம் வேலை செய்யுங்கள் என்கிறார்.

கடன் வாங்குவதை நிறுத்துங்கள். கடன் அடையுங்கள். அடைத்த பின் கடனிற்கு கட்டிய அத்தனைப் பணமும் சேமிக்க முடியும். ஒரு இடத்தில் Dave சொல்கிறார். உங்களது கம்பெனி யில் ரிடயர் மன்ட் saving பணத்தில் கம்பெனி மாட்சிங் 3 பெர்சென்ட் இருந்தாலும், முதலில் 10 பெர்சென்ட் மேல் வட்டி இருக்கும் இடத்தில் முதலில் கடன் அடையுங்கள் என்கிறார். பிறகு கம்பெனி கொடுக்கும் அந்த 3 பெர்சென்ட் க்கு சேமிக்கலாம். 15 மாதத்தில் கடன் அடைக்க முடியும் என்றால் அதற்காக பொறுத்திருத்தல் நலம்.

நான் செய்தது, பாங்கில் 2 அல்லது 3 பெர்சென்ட் வட்டிக்குப் பணத்தை போட்டு வைப்பதை விட, 7 அல்லது 8 பெர்சென்ட் வட்டிக்கு கார் வாங்காமல், காஷ் கொடுத்து வாங்கினேன். என் மனைவி 8 3/4 பெர்சென்ட் வட்டிக்கு 7 வருடம் முன் கார் வாங்கினார். ஒரு நாள் சொல்லாமல், முழு கடனையும் கட்டி விட்டேன். 2 நாள் செம கடுப்புல இருந்தாங்க. அடுத்த மாத தவணை கட்ட வேண்டிய அவசியமில்லை என்ற நிலை வந்ததும் கொஞ்சம் மனம் மாறியது. அடுத்த சில மாதங்களில் அவர்களது சேமிப்பு மற்ற பிற செலவுகளுக்கும் பற்றாக்குறை இல்லை என்று தெரிய வர பல மாதங்கள் ஆகியது.


மேலும் தொடர்கிறேன்.

Friday, August 23, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 2

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 2

அப்பாக்கு பசங்க கேட்கிறத எப்பிடியாவது வாங்கிக் கொடுக்க முடியுமான்னு பார்ப்பார். அம்மா கறாரா முடியாது என்பாங்க. இந்த மாச budget ல பணம் ஒதுக்கல, முடியாதும்பாங்க. இல்லாட்டி வேற எது கட் பண்ணலாம்ன்னு யோசிப்பாங்க.

வீட்டு பக்கத்திலேயே சித்தப்பா, மாமா இருந்தாலும், அவர்களை கேள் என்றோ, அவர்களிடம் கடன் வாங்கி செய்வது என்றோ துளி கூட இருவருக்கும் பிடிக்காது. பிறரிடம் கடன் வாங்கினால் அவர்களிடம் அடிமையாகவோ, பணிந்து போக வேண்டிய நிலைமை யாயிடும் சாத்தியமில்லை என்று சொல்லி விடுவார்கள்.

தீபாவளிக்கு தீபாவளி மாமா செமையா பட்டாசு வாங்கித் தருவார். அது மட்டுமே.

பால் மற்றும் நெய் கடன் கூட சம்பளம் வந்த அந்த வாரமே முழுதும் கொடுத்து அடைச்சிருவாங்க. கலர் டிவி புதுசா வந்த போது கூட தனியார் யாரிடமும் கடன் வாங்காம, கம்பெனி தொழிலாளர் கூட்டுறவு வங்கியில கடன் வாங்கி சீக்கிரமே மாத budget ல போட்டு அடைச்சிட்டாங்க.

மாத செலவு போக பத்து சதவீதமாவாவது சேர்க்க முடியுமான்னு ரொம்ப யோசிப்பார் அப்பா. அம்மாக்கு நகை வாங்கிக்கணும் என்பது தவிர வேற எந்த எதிர்கால சேமிப்பு பற்றி ஒன்றும் தெரியாது. இதுக்காகவே நவாப்ஜான் நகைக் கடையில எப்பிடியாவது சீட்டு போட்டு பணம் கட்டிருவாங்க.

 தீபாவளிக்கு மட்டும் எப்பிடியாவது ஒரு பட்டுப் புடவை வாங்கனும்ன்னு ரொம்ப ஆசைப் படுவாங்க. இரண்டு தீபாவளிக்கு வாங்கினா அடுத்த இரண்டு தீபாவளிக்கு நூல் அல்லது சுங்குடிப் புடவை தான். கல்யாணம் காட்சிகளுக்கு பழைய பட்டுப் புடவை தான். அழுக்கு படியாம தூசி படியாம வைச்சிருப்பாங்க. பழசு எதையும் விடாம பாத்திரக்காரனுக்குப் போட்டு பாத்திரம் வாங்கிடுவாங்க.

பக்கத்து வீட்டு Lambrador ஸ்கூட்டர் பார்த்து எங்களுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தி கடைசியில ஒரு 2nd hand சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். இரண்டு வருஷம் கழித்து யாரும் ஒட்டலைன்னு பார்த்தவுடன் வந்த காசுக்கு கொடுத்துட்டாங்க.

இவ்வளவும் ஏன் சொல்றேன்னா இதைத் தான் Dave தன்  புக் ல சொல்றார். Budget இல்லாம வரவும் தெரியாது செலவும் தெரியாது. என்ன பண்ணனும் என்றே தெரியாது .

கடன் வாங்குபவன் கடன் கொடுப்பவனுக்கு அடிமையாகி விடுவான். சொந்த தாத்தா பாட்டியிடம் பணம் வாங்கி பீஸ் கட்டினா கூட நாளை அவர்களது ஏச்சு பேச்சுக்கு பணிய வேண்டியிருக்கும்.

யாரிடமும் கடன் வாங்காதே. கடன் வாங்கிக்  கொண்டிருந்தால் எப்போது முழு கடனும் அடைப்பாய். தேவைக்கு மீறிய பொருட்களை வைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு கடன் அடைக்கனும்.

கடன் முழுவதும் அடைக்கும் வரை விடாது இதை செயல் படுத்த வேண்டும். எந்த புது கார் வாங்கினாலும் முதல் இரண்டு வருடத்தில் வீழ்ச்சி அடையும். நிறைய கடன் இருக்கும் போது புது வண்டி வாங்குவதில் அர்த்தம் இல்லை. மூன்று வருட பழையது தேவைக்கு ஏற்ற அளவுக்கு திறம்பட செயல் படும் என்கிறார் Dave.

இது என் பெற்றோரின் உண்மை வாழ்க்கை.

இங்கு என் அம்மாவின் சேமிப்பு முறை சீட்டு போடுவதில் இருந்தது. ஆனால் இது சரியல்ல என்பது என் நிலை. கண்டிப்பாக இதை பரிந்துரைக்க மாட்டேன். இதை ஒரு வங்கி deposit, mutual fund, insurance சேமிப்பு என்று எடுத்துக் கொள்ளவும்.

அடுத்த தொடரில் தொடர்கிறேன்.

(கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 1)

Thursday, August 22, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி. இது தான் Dave Ramsey தன்னோட புக் மற்றும் டாக் ஷோ, பிற கோர்ஸ் கள்  மூலம் கட்டணத்துடன் சொல்லித்தருவது.

ஆனால் இவரது புத்தகத்தைப் படிக்கும் போது என் பெற்றோரின் 59 வருட திருமண வாழ்க்கை என் முன் வந்து நிற்கிறது.

இந்த தடவை ஊர் போன போது அம்மா மேல் வீட்டு உறவினர் உதவியுடன் தான் எழுதி வரும் வரவு செலவு கணக்கு புத்தகத்தை என் கையில் நீட்டிய போது ஒரு குற்ற உணர்வுடன் அதைப் பார்த்தாலும், அவர்களது சிறந்த வாழ்க்கை என் கண் முன் வந்து நின்றது. அப்போது இந்த ராம்சே புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கவில்லை.

அப்பா ஏழாவது கூட பாஸ் பண்ண வில்லை. அம்மா பள்ளிக் கூடம் போனதில்லை. இன்றும் கூட ஒரு கடன் இல்லாமல் தன் வரவு செலவு கணக்குகளை எழுதி வரும் போது அதில் அவர்களது மாதாந்திர strength அண்ட் weakness புரிந்து செயல் படுவது  இன்றும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

நான் பிறந்து வளர்ந்த அந்த வீட்டை முன்பு பிளஸ் ல் பகிர்ந்திருந்தேன். சிறு வயதில் நான் பார்த்த வரை அந்த வீட்டில் நடமாடியவை இன்றும் நினைவுக்கு வருகிறது.

மாத சம்பளம் வருவதற்கு முதல் நாள் இரவு அப்பாவும் அம்மாவும் சேர்ந்து அந்த மாத budget போடுவார்கள். அம்மா, கட்ட வேண்டிய வீட்டு லோன், வாடகை வரவு,  பால் கணக்கிலிருந்து ஒவ்வொன்றாக சொல்லி வர, அப்பா ஒரு notebook ல் எழுதிக் கொண்டே வருவார். அந்த மாதம் வரும் பண்டிகை அல்லது எதிர்பார்க்கும் திவசம் செலவு வரை இருக்கும்.

அப்பாவின் சம்பளம் குறைவாக இருந்தாலும், அது ஒரே அளவு தான்.  இருந்தாலும் மாத budget இருவர் கையிலும் இப்ப. சாலரி வந்தவுடன்அப்பா cheque கொடுக்க வேண்டியது போக மீதி தொகையை அம்மாவிடம் cash ஆகா கொடுத்து விடுவார். பிறகு மாதம் முழுவதும் அம்மா administration தான்.

முதலில் கொடுக்க வேண்டிய சிறு சிறு கடன்களை, சீட்டுகளை, பால்காரர்க்கு கொடுப்பதெல்லாம் கொடுத்து விடுவார்கள். கையில் budget இல் எழுதியது தவிர மீதிக்கு எதிர்பாராத செலவிற்கு ஒரு தொகை வைத்திருப்பார். திடீர் உறவினர் வருகையெல்லாம் இதில் சமாளித்து விடுவார். சினிமாக் கொட்டகையில் நாங்க தரை டிக்கெட். வந்த உறவினருக்கு மேல 2nd கிளாஸ் அல்லது 1st கிளாஸ் டிக்கெட் கொடுத்து சரி கட்டிவிடுவார்.

ஒவ்வொரு இரவும் அன்று தான் செய்த செலவை எங்களிடம் சொல்லி அந்த வரவு செலவு கணக்கு புத்தகத்தில் எழுதச் சொல்வார். ஒரு வாரத்தில் அப்பாவிடம் வந்து total போடச் சொல்லி தன் கையில் மீதியுள்ளதை சரிபார்த்துக் கொள்வார். இவர்கள் budget ல் துண்டு விழுவதை துல்லியமாக அறிந்து கொள்வார்கள். சரி செய்ய எதை குறைத்துக் கொள்ள வேண்டும் எதை வாங்கக் கூடாது என்று அப்போது முடிவாகி விடும்.

இதென்ன பெரிய விஷயம் என்கறீர்களா. Dave Ramsey சொல்லித் தருவது இதோ மேலே உள்ள என் அப்பா அம்மாவின் வாழ்க்கை முறையை. இதை தான் முதல்லிருந்து முதல் ஆறு சாப்ட்டர் களில் கவர் செய்துள்ளார்.

கல்லூரி படிப்பற்ற இவர்கள் வாழ்க்கையை இப்போது அலசிப் பார்க்கிறேன்.

மீதியை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

Friday, August 16, 2013

ஆழ்ந்த வாசிப்பு

ஆழ்ந்த வாசிப்பு என்பது என்னிடம் சின்ன வயதிலிருந்தே கிடையாது. வானம்பாடிகள் பாலா சார் அடிக்கடி கிண்டல் பண்ணுவார் 'வாசிக்கணும், படிக்கக் கூடாது'ன்னு. என்னளவில் இரண்டும் ஒன்றாகவே கருதி இருந்து வந்துள்ளேன்.

ஆழ்ந்த வாசிப்பு என்றால் என்ன? படிப்பதை புரிந்து கொண்டு அதை analyse செய்யக் கூடிய பக்குவத்துடன் படித்து உள்வாங்கிக் கொள்ளுதல் என்று கொள்ளலாமா.  எதை அவ்வாறு உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

படிப்பதை தர்க்க ரீதியாக ஆராய்ந்து உபயோகப் படுத்தும் அளவிற்கு எதைத் தேவை என்று எப்போது எடுத்துக் கொள்கிறோமோ அப்போது வாசிப்பதில் கவனம் இருக்கும். உதாரணமாக பரிட்ச்சைக்குப் படிக்கும் போது மனப்பாடம் பண்ணி எக்ஸாம் பாஸ் பண்ண மட்டும் உபயோகப் படுத்துவோம் என்றால் அந்த சமயத்தில் உள்வாங்கி வாசித்தது எத்தனை நாள் நிற்கும். பரீட்சை முடிந்ததும் மறந்து விடும்.

எல்லா வித புத்தகங்களும் பரிக்ஷைக்குத் தேவையானதது  மாதிரியானதா ? இல்லை. அரசியல் பொருளாதார சமூகவியல் புத்தகங்கள் படிக்கும் போது அதை உள்வாங்கி வாசிப்பது மிகவும் தேவையானது. இவைகள் பலகாலம் நம்மிடம் தொடர்ந்து பயணிக்கக் கூடியவை.

வாசிப்பனுபவம் கேட்டும் பெறலாம். சிறந்த அரசியல் மற்றும் பொருளாதார சமூக அறிஞர்களின் பேச்சுக்களை கேட்கும் போது உள்வாங்கி நன்கு புரிந்து ஆராய்ந்திருந்தால் அவை பல காலம் நம்முடன் தொடர்ந்து பயணிக்கும். நமது பேச்சில் அவைகள் கண்டிப்பாக ஒரு உதாரணம் மற்றும் ஆதாரமாக வெளிவரக் கூடும்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் பல உன்னத அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்களின் பேச்சுகளை நேரடியாகக் கேட்டிருக்கிறேன். இப்போது எதுவும் ஞாபகத்தில் இல்லை. அவர்கள் பேசிய பேச்சுகள் மட்டுமே மறந்து விட்டது. அவர்களை சந்தித்த அனுபவம் இடம் ஆகியவை ஞாபகம் இருக்கிறது. எது தேவையோ அது இருப்பதில்லை, தேவையற்றது தொடர்கிறது. காரணம் உள்வாங்கி புரிந்து கொள்ளும் பக்குவம், வயது, அறிவு அப்போதும் இல்லை  இப்போதும் இல்லை.

எந்த ஒரு புத்தகத்தையோ படிக்கும் போது வாசிக்கும் போது அதை ஆராய்ந்து சமூக வாழ்வில் தொடர்பு படுத்தி பார்க்கும் போது அது தேவை அல்லது தேவையற்றது என்று பிரித்து வாசிப்பதின் பயன் பல காலம் நிற்கும். வெறும் ஒரு எழுத்தாளனின் படைப்பை மட்டும் படித்து ஆராதிப்பதின் மூலம் இழப்பது தான் அதிகமாக இருக்கும். காலமும் உலகமும் மாறிக் கொண்டு இருக்கும். நாம் அந்த எழுத்தாளனுடன் பின் தங்கி விடுவோம்.

பரந்த அனுபவம் பெற பல எழுத்தாளர்களின் படைப்பை படித்து புரிந்து கொள்வதில் வரும் அனுபவம், புலமை, பெருமை ஆகியவை  ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்துக் கொள்ளும் போது எல்லாம் பின் தங்கி விடுகிறது.
படித்தவர்கள் பேசும் போது வெறும் கேட்டு தலையாட்டும் கூட்டமாகி விடுவோம்.

Thursday, August 15, 2013

வருங்கால ஓய்வு நிதி

வருங்கால ஓய்வு நிதி சேர்ப்பு பற்றி பல கட்டுரைகள் இணையத்திலிருக்கு. இன்னிக்கு பென்ஷன் fund பற்றிய நோட்டீஸ் ஒன்று வந்தது. retire ஆக இன்னும் பல வருடம் இருந்தாலும் என்னதானிருக்குன்னு ஓபன் பண்ணிப் பார்த்தேன். சிறுதுளின்னாலும் கொஞ்சம் சுவையோடு தானிருக்கு.

எங்க ஆபீஸ் ல பென்ஷன் fund க்கு ஆபீஸ் contribution உண்டு. 401K க்கு கிடையாது. நானே தான் போட்டு வருகிறேன். 15 வருடப் பழக்கம். சேருது.

இன்னிக்கு முக்கியமா கண்ணில உறுத்தியது அதை retire ஆகும் முன்னர் எவ்வாறு எடுக்கப் போறோம்ன்னு தெரிவிக்க வேண்டும்.

ஒன்று நாம் உயிருடன் இருக்கும் வரை நாமே முழுத்தொகை எடுக்கலாம். நாம் இறந்த பிறகு பென்ஷன் அல்லது பிற ஓய்வு நிதி distribution நின்று விடும்.

இரண்டாவது நாம் உயிருடன் இருக்கும் வரை  குறைவாகவும், நாம் போன பிறகு நமது nominee (பெரும்பாலும் spouse, spouse from older marriage , etc)  அவர்கள் இறக்கும் காலம் வரை அதே அமௌண்ட் பெறலாம்.

இரண்டாவது option போல இன்னும் சில options உண்டு. சோசியல் செக்யூரிட்டி benefits க்கும் இதே மாதிரி options உண்டு.

இங்கு தான் நாம் கொஞ்சம் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

முதல் option ல் அதிக பணம் வர வாய்ப்பு உண்டு. ஏறக்குறைய நாம் கடைசியாக வாங்கின சம்பளம் அளவு இருக்கும். ஆனால் நாம் இறந்த பிறகு நின்று விடும்.

மனைவி நீண்ட ஆயுளுடன் இருப்பவரென்றால் முதல் option தேர்ந்தெடுப்பது சரியல்ல. ஆனால் நம் உடல் நிலை பாதிக்கப்பட்டு செலவிற்குத் தேவைப் படும் போது தேர்ந்தெடுப்பது தவறல்ல.

நம் வயது spouse வயதை விட அதிகமிருப்பதாலும், நாம் அவர்களை விட சீக்கிரம் retire ஆக வாய்ப்புள்ளதால் இரண்டாவது அல்லது மூன்றாவது option சரிவரலாம்.

நமது contribution மட்டுமே, retire ஆகி குறைந்தது 5 வருடத்திற்கு நம் சேமிப்பு பணத்திலிருந்து நாமே பெறுவதாக இருக்கும். அதற்கும் மேல் உயிருடன் இருப்பவர்களுக்குத் தான் பென்ஷன் fund பிற பகுதியிலிருந்து பெற்றுத் தருமாறு இருக்கும்.

Retire ஆவதற்கு முன் உங்கள் குடும்பத்தினரின் உடல்நிலையைப் பொறுத்து முடிவிடுங்கள்.

இப்ப எதுக்கு இதைச் சொல்றேன்னு கேட்கறீங்களா. ஏதோ தோணிச்சுங்க.

Wednesday, July 17, 2013

வாழ்க்கையின் வெற்றி

அடியால் கொடுக்கப்படும் நீதி 
அடிமனதின் வியாதி

கை நீளும் போது 
உன் இயலாமை 
வெளி வருகிறது !

கை நீட்டுவதால் 
உன் வாழ்க்கையில் 
தோல்வி நீள்கிறது!

அணைக்கும் கரங்களே 
வாழ்க்கையின் வெற்றி.

Monday, July 15, 2013

Auto

2009 - சென்ட்ரல் டு திருவான்மியூர் - ராத்திரி பத்து மணிக்கு ஆட்டோ புடிச்சேன். 200 கேட்டார். 150க்கு பேரம் பேசி போயிட்டிருக்கும் போது எப்பிடியும் ஊர் சுத்தி ஏமாத்திருவார் ங்கிற மாதிரி நினைச்சுகிட்டிருந்தேன். 

ராயப்பேட்டை வழியா போகும் போது ஏதோ ஊர் தெரிஞ்சா மாதிரி அவர்கிட்ட ஏன் இப்பிடி போறீங்கன்னேன் . பயப்படாம வாங்க சார் ன்னார். நம்ம கால் ஆடறது தெரிஞ்சிடுத்தா என்று நினைச்சேன்.

மந்தைவெளி தாண்டும் போது எல்லா ஆட்டோ காரங்களும் ஏமாத்தரவங்க இல்லைன்னார். என்ர வாய் சும்மா இருக்காம எப்பிடி சார் அதை முகத்தைப் பார்த்து தெரிஞ்சிக்கிறதுன்னு கேட்டு வைச்சுட்டேன். வண்டியை அங்கேயே நிப்பாட்டி இறக்கி விட்டுருவாரோன்னு கொஞ்சம் பயம் கூட.

பிறகு மெதுவா சொன்னார். நான் AGS ஆபீஸ் ல வொர்க் பண்றேன். பையங்க இன்ஜினியரிங் படிக்கிறாங்க. தேவைக்காக மாலையிலிருந்து இரவு ஒரு மணி வரை ஆட்டோ ஓட்டுவேன் என்றார். ஏமாற்றி பிழைக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

அதுக்கப்புறம் வீடு போறவரை நான் தான் அவரை சார் போட்டு அழைச்சேன்.
இறங்கும் போதும் அவரை என் பெட்டி எடுத்துக் கொடுக்க விடவில்லை. நானே!

சார் உங்க போன் நம்பர் கொடுங்க. சென்னையில் இருக்கிறவரை உங்களைக் கூப்பிடறேன் என்றேன். அவர் சொன்ன பதில் கேட்டு அமைதியாயிட்டேன்.

அவர்  'நான் கொடுத்தாலும்  உங்களுக்கு use இல்லை. நான் வசிப்பது தண்டையார்பேட் பக்கம். அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்து போவது சாத்தியமில்லை' என்று விட்டார்.

எக்ஸ்ட்ரா கொடுத்த பணம் மட்டும் வாங்கிக்கிட்டார்.

பாட்சா படம் பார்த்து வந்தா மாதிரி இருந்தது.

Sunday, June 30, 2013

யாரும் தோற்பதில்லை

அப்பா உனக்கு ஏதாவது உதவி செய்யணும்ன்னா சொல்லு நானிருக்கேன்னு  சொல்ற தங்கத்துக்கு என்ன வேணும் உனக்கு ன்னு கேட்கலைன்னா நீங்க இன்னும் கொஞ்சம் ட்ரைனிங் எடுக்கணும்.

எங்கிருந்து புடிக்கிரானோ தெரியலை, ஒரு படத்தப் பேரைச் சொல்லி கூட்டிட்டுப் போன்னு செம அடம், Google search பண்ணி theatre , பட நேரம் எல்லாம் பார்த்து தயாரா நிக்கறான் புள்ளை.

மேலும் எனக்கு ஒரு deal வேற. 2D படமா இருந்தா பாப் கார்ன் கண்டிப்பா வாங்கணும். 3D ன்னா நான் கொஞ்சம் மனசு வைச்சு வாங்கிக் கொடுக்கலாம். என் விருப்பத்துக்கு விட்டாச்சு.

3.15 க்கு theatre வாசல்ல ஐயா சொல்றாரு, இப்ப 3D movie . 2D பார்க்கனும்ன்னா இன்னும் அரை மணி வைட் பண்ணனும். மறுபடியும் என் விருப்பத்துக்கு ஐயா விட்டுவிட்டார்

நிறைய பாப் கார்ன், lemonade கையோட உள்ள 3D கிளாஸ் போட்டு உட்கார்ந்தா ஒரு கண்ணு நொல்லையாத் தெரிது. என்னை disturb பண்ணாத தொடைச்சுப் போடுன்னு எனக்கு அட்வைஸ் வந்து கிட்டு இருக்கு.வேற கிளாஸ் மாத்தி வாங்கியாச்சு.

படம் முழுக்க நான் சின்னப் புள்ளையாட்டும் குதுகூலமா இருக்க, பய புள்ள பெரியவராட்டும் செம behavior. வசனம் புரியுதா, அந்த கேரக்டர் என்ன சொல்றது தெரியுதா ன்னு சின்னப் புள்ளையான எனக்கு சொல்லிக்கிட்டு வர்றான்.

(என் பேர்ல கடைசி பகுதி வித்தியாசமா இருக்குறது பலருக்கு கொஞ்சம் டவுட். சரியாயிடும் சீக்கிரம்).

குழைந்தைகளுக்கு தன்னம்பிக்கை உருவாக்க அருமையாக டிஸ்னி Pixar எடுத்த படம்.

பையன்ட்ட எப்போதும் சொல்வேன். நெவெர் கிவ் up .

வீட்டுக்கு வந்த பிறகு பையன் சொல்றான், தோல்வியிலும் ஒரு தன்னம்பிக்கையோடு வெளியேறும் கதை சூப்பர்.

நீங்களும் பார்க்கலாம்.

Monster University.

Thursday, May 30, 2013

காரத்தொழுவு

காரத்தொழுவு - இது என் அம்மா பிறந்த ஊர். ஒரு தடவை தான் போயிருக்கிறேன். ஆனால் சிறுவயதிலிருந்து இன்று வரை இந்த ஊர் பெயரை வீட்டில் கேட்காத நாட்கள் குறைவு.

அம்மா தன் சகோதரன் சகோதரிகளோடு சிறுவயதிலேயே இந்த ஊரை விட்டு வந்தாலும், ஊரையும் ஊர் மக்களையும் பற்றி பேசாத நாட்கள் இல்லை. அம்மா பாட்டி அனைவரது அடிமனதிலும் காரத்தொழுவு பற்றி ஒரு ஆழ்ந்த நினைவலைகள் இருந்து கொண்டே இருந்ததை சிறு வயதிலிருந்தே அறிவேன்.

என் மாமா, பாட்டி மற்றும் அம்மா அடிக்கடி உரையாடலில் மிகவும் அதிகமாக குறிப்பிட்ட ஒரு குடும்பம், என் மனதிலும் அந்த குடும்பத்தின் மீதான ஒரு மரியாதை மிகவும் உயர்ந்து இருப்பதாக நினைப்பது, தியாகராஜ  தீக்ஷிதர் - குஞ்சம்மா தம்பதியரின் குடும்பம்.

தீக்ஷிதரும் அவர் மனைவியும் நான் பிறக்கும் முன்னரே இவ்வுலகில் இல்லை. ஆனால் அவர்கள் பெயரில் உள்ள ஆளுமை எங்கள் வீட்டில் இன்றும் உணரலாம்.

என் அம்மா குடும்பத்தைப் போல, தீக்ஷிதர் குடும்பத்திலும் நிறைய குழந்தைகள் உண்டு. எல்லோரும் இன்று முதியோராய் தளர்ந்து கொண்டிருந்தாலும், எங்கள் குடும்பத்தின் மீதுள்ள அன்பில் இன்றும் உயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

தீட்சிதர் மகன்களில் ஜெயராமன் அவர்களை மட்டும் சில தடவை பார்த்திருக்கிறேன். இந்த தடவை எங்களது அடுத்த தலைமுறை கல்யாணத்திற்குப் போயிருந்த போது, தீக்ஷிதரின்இன்னும் இரு மகன்களையும் அவர்கள் குடும்பத்துடன் அங்கு ஒரு சேரப் பார்த்த போது  ஆச்சரியமும் மரியாதையும்  கலந்தோடியது.

இளையவர் விசு அவர்களிடம் போய் கொஞ்சம் உளறி கொட்டினாலும், அவரது எளிமையும், எப்போதும் அமைதியாகவே இருக்கும் அவரது அண்ணன் நாகு வையும் பார்த்து மனதில் இவர்களை ஒரு போட்டோ எடுத்து பத்திரப் படுத்திக் கொள்ளத் தோன்றியது. நாகு அங்கிளின் மனைவி தான் பழைய விஷயங்கள் சிலவற்றை சொல்லி பரவசப் பட்டுக் கொண்டார். ஆனால் பரவசத்திலிருந்தது  நான் தான்.

இவர்கள் என் அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஓரிரு போட்டோக்கள் எடுத்து வைத்துக் கொண்டேன். விவரங்களை என் அம்மாவிடம் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் முகத்தில் ஒரு பரவசம் தெரிய வந்தது.

போன வாரம் தீக்ஷிதரின்  மகளும் என் அம்மா தன் நெருங்கியத் தோழியாக இன்று வரை நினைத்து வரும் அவரது மகள் இந்திராவை போய்  பார்த்து வந்திருக்கிறார்.

நாங்கள் அறியாமலேயே எங்கள் குடும்பத்தில் ஒன்றியிருக்கும் தீக்ஷிதர் குஞ்சம்மா தம்பதியருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

Saturday, April 6, 2013

ரூள்ஸ் இராமசாமி


ரூள்ஸ் இராமசாமி 

இது யாருன்னு கேட்கரீங்களா, தெரியாது. ஆனால் பத்து நிமிஷம் உங்க காரை ஒரு ஹான்டிக்கப் பார்க்கிங் பக்கம் நிறுத்திட்டு பார்த்திங்கன்னா நீங்களும் ரூல்ஸ் இராமசாமி ஆகி விடலாம். உடல் ஊனமுற்றவர்கள் வசதிக்காக வைத்துள்ள பார்க்கிங் space ய் தவறுதலாக உபயோகப் படுத்துவது இந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ள மக்கள் மட்டுமே.

 உள்ளூர் மக்கள் மட்டும் ஒருவர் கூட இதை செய்யவே மாட்டங்க. இடமில்லை என்றால் கூட கொஞ்சம் தள்ளி ஒதுக்குப் புறமாக மற்ற கார்களுக்கு வழி விட்டு செய்கிறார்கள். அங்கு தற்காலிகமாக கூட செய்ய மாட்டார்கள்.

நம்மக்கள், அவ்விடத்தில் தம் காரை நிறுத்தி இறக்கி விடுவதும் ஏற்றிக்கொள்வதும் சில சமயம் காத்திருப்பதும் தவறாமல் செய்பவர்கள். ஓரிருவர் என்றால் பேசாமல் இருந்து விடலாம். ஆனால் பத்தில் 8 கார் இதை செய்யும் மக்கள் இந்திய வம்சாவளியினர் என்று பார்க்கும் போது மனதுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ரூல்ஸ் இராமசாமி முழித்துக் கொண்டு விடுவார்.

மீதி இரண்டு கார் யாரென்று தவறாமல் கேப்பீர்கள். தெரியும். அதுவும் நீங்கள் ரூல்ஸ் ராமசாமியாவதற்க்கு தகுதியான கேள்வியே. அந்த இரண்டு கார்கள் கூட நம் இநதிய மக்களை இறக்கி விட வந்த கார். அவர்களை  அவ்வாறு விட்டுச் செல்லுமாறு சொல்வதும் நம் மக்களே!.

ரூல்ஸ் இராசாமியான நீ பார்த்து கிட்டு என்ன செய்தன்னு கேட்கலாம். உங்களுக்கு முழு தகுதியும் வந்து கொண்டிருக்கிறது. முன்பேற்பட்ட அனுபவத்தின் காரணமாக நான் ஹான்டிகாப்  போர்டை பார்ப்பதும் இவர்களையும் மாறி மாறி பார்த்தே ஒரு வழி பண்ணிவிட்டேன். ரூல்ஸ் ரூல்ஸ்சாதானிருக்கனும். மாறக்கூடாது இல்லையா?

இவர்கள் வண்டியிலிருந்து இறங்கும் நாளைய சமுதாயம் இது தவறு என்று உணராமலே வளர்கிறது. நாளை இவர்கள் தவறாமல் கடை பிடிப்பார்கள். இல்லையா?

பார்த்து விட்டு சும்மா வந்து இங்க வந்து பொங்கல் வைக்கிற நீயெல்லாம் ன்னு நீங்கள் கேட்கலாம். உங்களுக்கும் முழு தகுதி வந்து கொண்டேயிருக்கிறது.

ரூல்ஸ் இராமசாமியாகிய நான் லெப்ட்ல ஓடிச்சு ரைட்டுல போயிக்கிட்டே ரூல்ஸ் கடை பிடிப்பேன். ரூல்ஸ் ருல்சாத் தானிருக்கணும்.

ஓகே. ஓகே, இது ரொம்ப ஓவர்ன்னு நீங்க சொல்றது புரியுது. யு ஆர் புல்லி QUALIFIED நொவ்.

Thursday, April 4, 2013

தினபலன்தினபலன் 


மாலை ஆபீஸ் லர்ந்து கிளம்பும் முன்ன தினபலன் பார்த்தா வீடு தேடி நல்ல செய்தி வரும்ன்னு போட்டிருந்தது. சந்தோசமா வீட்டுக்குள்ள  நுழைஞ்ச அரைமணி நேரத்தில வீட்டு முன்ன ஒரு போலீஸ் கார் வருது. போலீஸ் பெண்மணி கிட்ட என்ன விஷயம் ன்னு கேட்டா, ஒண்ணுமில்லை உன் வீட்டு பின்ன ஒரு மரத்தடி கீழ ஒரு கார் நிக்குது. பேக்கப் போலீஸ் வரட்டும் என்றாங்க. யு ஆர் சேப் ன்னாங்க. இது தான் வீடு தேடி வர நல்ல சேதியா?

இன்னொரு போலீஸ் வந்தவுடன் இந்த அம்மிணி நேரா ரோடுல நடந்து அந்த கார் நோக்கிப் போவாமா மரத்தோரமா ஒதுங்கி ஒதுங்கி போறதப் பார்த்தா எதோ என்கௌன்டர் நடக்கப் போவுதுன்னு பார்த்தா, காருக்குள்ள மொட்டைமாடி மொட்டைமாடி ஒரு லவ் ஜோடி உள்ள உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கு.

இந்தம்மா விடலை.

இரண்ட பேரையும் இறங்கச் சொல்லி, அவன புரட்டிப் போட்டு  கையோட udambu பூரா தட்டி தடவி துளாவி வாயை ஊதச் சொல்லி, avaளையும் விட்டு வைக்காம சகல டெஸ்ட் உம் பண்ணி அனுப்பி விட்டாக. 

இருபது வயசு கூட ஆகாத அந்த இளஞ்ஜோடியோட முகத்தைப் பார்க்கும் போது பாவமா இருந்துச்சு. 

கடைசியில எங்கிட்ட ஒன்னும் சொல்லாம கையை காட்டி விட்டு போலீஸ் போயிடுச்சு.

எவன் போலீஸ் கூப்பிட்டானோத் தெரியலை. அந்த சோடிங்க நாளைக்கு எனக்கு நல்ல சேதியா வீடு வரைக்கும் வந்து கொடுக்கும். உன்ர தினபலன் சூப்பரப்பு.

Tuesday, March 19, 2013

உறுதுணை

வணக்கம் தோழனே,

தோல்வியென நினைக்கையில்
நம்பிக்கை துளிர்க்க விடும்
நண்பனிருக்கையில்
துவளவிடாமல் உயர்த்திப் பிடிக்கும் தோழனே!

நீ என் நண்பன் என்பதை
உணர வைக்க முடியாமல்
நம்பிக்கைத் தளர்ந்திடும் நேரத்தில்
என்னுளிருக்கும் திறமையத்
தெரிய வைப்பதில்
நீ கை தேர்ந்தவனாய்
அவதரிக்கிறாய் தோழனே !

ஆரம்பத்தில் துவண்டு கொண்டிருந்த
உனக்கு உறுதுணையாய்
நின்றதன் பலன்
இன்று நீ  கைமாறு வழங்கிடும் 
வேளையில் நன்றியுடன் உனை நோக்கின் 
என் நட்புணர்வின் சிறுமையை 
எழ வைக்கும் தோழனே !

உன் பாதையில் நான் வந்த 
அதிசயத்திற்கு வணக்கம் கூறி 
நம் நட்பு தொடர வேண்டி 
வழி மொழிகிறேன் தோழனே!

உறுதுணை எனது!

Thursday, February 21, 2013

சகோதரத்துவம்

சகோதரத்துவம் 

ஒரு தலை துண்டிப்புக்கு
ஒரு மரண தண்டனை
ஒரு குண்டு வெடிப்புக்கு
ஒரு கொலை வெறியாட்டம்
ஆடத் துடிக்கும் கூட்டம்

இன்னொரு துர்மரணத்தையும்
எதிர் நோக்கையில்

ஒன்றாய் இருந்தாய்
பிரிவினையால் பிரிந்தாய்
பிரித்தவன் பிரிந்து சென்றான்
பிரிந்தவர்கள் 
பிரிந்து கொண்டே செல்கின்றனர்!

எல்லாம் தொடங்கியது
எங்கிருந்து என்றுணர்ந்து 
பிரிந்தவர் ஒன்றுனரும் 
காலம் வரை 
இன்னொரு கொலை
பாதகச் செயல் நடவாமல் 
காக்க வேண்டியது
நம் சகோதரத்துவம்!

ஒன்றினைவாய் ஒருங்கினைப்பாய்
ஒற்றுமையை விட
இனிமைஎதுவும் இல்லை
என உணர்ந்திடுவாய் 
ஒரே நாட்டில் 
சகோதரர்களே!

Wednesday, February 20, 2013

வெறுப்பு


வெறுப்பையே உமிழ்ந்து கொண்டிருப்பவனை
இயல்பாய் கவனியாமல் இருப்பது போல்
நடிக்க முடிவதில்லை. 

கவனித்தால் அந்த நெருப்பு நம்மை
நோக்கி உமிழப் படுகிறது.

தளும்பும் குடத்தில் சிதறும்
நீர் போல் உலர்ந்து போவட்டும்
உன் வெறுப்பு.

நான் குடம் சுமக்கும் பெண்! 

Saturday, January 12, 2013

காக்கா குளியல்


காக்கா குளியல்

நீண்ட நாட்களுக்குப் பிறகு வெயில் கொஞ்சம் சூடா வந்துது. லேக் சுத்தி இரண்டு மைல் நடந்து வரலாம்ன்னு போனோம். அருமையா இருந்தது.

ஒரு 70 வயது லேடியின் மற்றும் தாத்தாவின் ஸ்பீட் துளி கூட பிடிக்க முடியவில்லை. என்னப்பா நத்தை மாதிரி ஊர்ரேன்னு திட்டி கிட்டே வேற வரான். டபுள் இன்சல்ட். 

இயற்கையையாவது ரசிப்போம்ன்னு ரசிச்சுகிட்டே வந்தேன். ஒரு காகம் அழகா மரத்திலிருந்து தரைக்கு வந்து தத்தி தத்தி கரையோர நீரில் செம குளியல் போட்டது. ஐந்து ஆறு தடவை முக்கி எழுந்து இறக்கையை உதறி விட்டு மறுபடியும் கிளை மேல தாவி, இன்னும் கொஞ்சம் இறக்கையை உதறி சத்தமா கரைய ஆரம்பிச்சுது. மற்ற காகங்களுக்கு தனது சுகக் குளியலை அறிவிப்பது மாதிரி இருந்தது.

இன்னும் அரை மைல் நடந்த பிறகு ஒரு வினோதமான பறவை ஒலி . கிறீச் க்றீச்ன்னு தலை மேல கேட்குது. தலையைத் தூக்கிப் பார்த்தா ஒரு அழகான ஹக். பக்கத்திலுள்ள ஆளிடம் தெரிஞ்ச ரெண்டு பேரைச் சொல்லி அப்புறம் அது ஹாக் ன்னு தெரிஞ்சுகிட்டேன். பறவையின் உள்புறம் உள்ள ப்ரௌன் நிறம் வைத்து தெளிவாச் சொல்றாராம். கேட்டுகிட்டாச்சு. 

மூன்று மைல் நடந்தோம்.

Thursday, January 3, 2013

இடமறியா மணப்பெண்


இடமறியா மணப்பெண்!

தேவையற்ற இடத்தில் காலை வைத்து 
பொருந்தாத விடயத்தில் மாலை போட்டு 
விருப்பமில்லா மணப்பெண் ஆனேன்!

மண்ணில் வேரூன்றியவை 
விஷமாய்ப் போனதால்
வைக்கும் இடமெல்லாம் 
முள்செடி ஆனதடா !

முள்ளின் மீது நடக்கும் போது  
காலில் குத்தும் முட்கள் 
அகட்டி விடும் காலம் வரும் வரை 
விளையாத மண்ணில் விதைக்கும் 
பருத்தியானேன் !

முள் அகற்றத் தெரியாத 
சமூகத்தின் வேர்களைத் 
தவறித் தூக்கிப் பிடிக்கும்
கருவேல மரமானேன்!

பருத்தி முள்செடி கருவேலத்தை 
ஒன்றாய் நோக்கியதில் 
பஞ்சும் தெரியவில்லை 
எரிக்க விறகும் கிடைக்க வில்லை!